உணவு உடை உறையுள்என்கிறார்கள்இம்மூன்றும் இல்லையேல்மனித வாழ்வு சாத்தியமில்லை ஒரு தோழன்ஒரு தோழிஅவ்வளவுதான் என் உலகம்அம்பது வயதில் தோழன்என் முதுமையின் நிழல் கண்டுபிச்சையெடுத்து வாழலாகாது எனதிரவியம் தேடி ஓடினான்விரைவில் திரும்புவான்எப்போதெனத் தெரியாது தோழிக்கு வயது இருபத்தேழு,அவளுக்கும் அதே தேவைஉணவு உடை உறையுள்பெண் வேறுயாரையும்சார்ந்து வாழ முடியாதுகாசு வேண்டும்காசுக்கு ஒரு வேலை வேண்டும்வேலைக்கு படிப்பு வேண்டும்அவளும் கிளம்பினாள்கொஞ்ச காலத்தில் திரும்புவாள் நானோ நாளையற்றவன்இக்கணத்தில் மூழ்கி வாழ்பவன்அனாதையென உணர்ந்தேன்மனம் எதிலும் செல்லவில்லைபடிக்க இயலவில்லைஎழுத இயலவில்லைஇசையும் கேட்க இஷ்டமில்லை. அப்பனிடம் கேட்கலாம்ஆனால்கோடியில் ஒரு ...
Read more
Published on September 29, 2025 21:11