எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள புதிய குறும்படம் இருள் இனிது. எனது சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபட்டுள்ளது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ள இந்தக் குறும்படத்தின் அறிமுகவிழா நவம்பரில் நடைபெறவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை மீடியா சயின்ஸ் படித்துள்ள ஹரி பிரசாத் NFDC யில் திரைப்பட படத்தொகுப்பு பயின்றுள்ளான். தற்போது தேசாந்திரி யூடியூப் சேனலை நடத்தி வருவதுடன். White Knights என்ற டிஜிட்டில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறான்.
இருள் இனிது அவனது மூன்றாவது குறும்படம்.
Published on October 22, 2025 00:03