காரைக்குடி வாசகர் வட்ட நிகழ்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்து பலரும் நின்றபடியே உரையை கேட்டார்கள்.

திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் பிரம்மாண்டமாக உருவாக்கபட்டிருக்கிறது. மூன்று தளங்கள். இரண்டு லட்சம் புத்தகங்கள் வைத்துக் கொள்ளும்படியான இடம். வாசிப்பதற்கு ஏற்ற இருக்கைகள். நிறைய நூல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூலகதின் இணையதளம், மின்நூலாக்கம் மற்றும் அரிய நூல்களை ஆவணப்படுத்தும் நிகழ்வை ப.சிதம்பரம் அவர்கள் துவக்கி வைத்தார்.

வாசகர் வட்ட நிகழ்விற்காக என்னை அழைத்துச் சிறப்பித்த மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பி. அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.

தங்குமிடம், உணவு, உபசரிப்பு எனச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். திரு. கருணாநிதி, திரு.அருணகிரி ,திரு.இலக்கியா நடராசன் உள்ளிட்ட வாசகர்வட்ட நிர்வாகிகளுக்கும், பல்கலைகழக நிர்வாகிகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..

அழகப்பா பல்கலைகழகத்தின் பொறுப்பு துணைவேந்தரான ஜெயகாந்தன் எனது கல்லூரித் தோழர். அவர் தக்க ஏற்பாடுகள் செய்து மகிழ்வித்தார்

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த வாசகர்கள். படைப்பாளிகள். பேராசிரியர்கள் மாணவர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

வெள்ளிக்கிழமை மாலை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இல்லத்தில் இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. 20 பேர் வந்திருந்தார்கள். இரண்டு மணி நேர உரையாடலும் இனிமையாக அமைந்தது. ஆழ்ந்து வாசித்து உரையாடும் இளைஞர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளித்தது. நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு அன்பும் நன்றியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2026 21:46
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.