அஞ்சி நடுங்கும் மோடியின் அரசு!
50க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுஇருக்கின்றன. டெல்லி காவல்துறையினரோடு ஏறத்தாழ 30,000 துணை ராணுவத்தினரும்இறக்கப்பட்டு இருக்கின்றனர். இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. வழிகள் எல்லாம் சோதிக்கப்படுகின்றன.ஜந்தர் மந்தருக்கான சாலைகள் அடைக்கபப்ட்டு விட்டன.
பினராயி விஜயன், மாணிக் சர்க்கார், அரவிந்த கெஜ்ரிவால், மம்தா பானர்ஜிஆகிய நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். சி.பி.எம் பொதுச்செயலார்எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.காரோச் ஜனதா கட்சியின்தலைவர் அபிஜித் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இருக்குமிடம்தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் மாண்புமிக்க வழக்கறிஞர்கள் கைது செய்யபப்ட்டு இருக்கின்றனர்.பத்திரிகையாளர்கள் விரட்டப்பட்டிருக்கின்றனர். இடதுசாரி மாணவ அமைப்புகளின் தலைவர்கள்அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஊர்வலமாய் வந்தவர்கள் மீது இரக்கமற்றுதாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
மொத்தமுள்ள 90 கோடி வாக்காளர்களில், 13 கோடி பேரின் வாக்குகளைத் திருடிய தலைமைத் தேர்தல் அதிகாரிஞானேஷ்குமாரைக் காப்பாற்றுவதற்காக மோடியின் பாஜக அரசு இத்தனை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.அமைதியான முறையில் ஜந்தர் மந்தரில் கூடி குரல் எழுப்புவதைத் தடுக்கத்தான் இத்தனை அராஜகத்தையும்அரங்கேற்றியிருக்கிறது.
சர்வ வல்லமை பொருந்திய மோடியும், சகல அதிகாரம் கொண்ட அரசும் அச்சத்தில் ஆடிப் போயிருப்பது தெரிகிறது.ஏனென்றால் போராடுகிறவர்கள் - அவர்களை நோக்கி விரல் சுட்டுகிறவர்கள் – யாரென்றால் இந்ததேசத்தின் இளைஞர்கள். அரசின் அத்தனை தடைகளையும், மிரட்டல்களையும், நடவடிக்கைகளையும் மீறி டெல்லியின் பல பகுதிகளில் இளைஞர்கள்அணி அணியாய் கூடிக்கொண்டு இருக்கிறனர். அவர்கள் கூடும் இடமெல்லாம் ஜந்தர் மந்தர்களாகின்றன.
இளம் தலைமுறை விழித்துக் கொண்டதுதான்இப்போது ஆட்சியாளர்களை நடுக்கமுறச் செய்திருக்கிறது.
அந்தத் தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வும், போர்க்குணமும் வந்து விடக் கூடாது என்றுதான் விஜய் போன்றவர்களுக்குஆளும் வர்க்கம் ‘கியூட்டாக’ பிம்பம் கட்டி விடுகின்றன. இதையும் சேர்த்துத்தான் இந்த தருணத்தில் யோசிக்கவேண்டி இருக்கிறது.


