(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Devibharathi

“சில மாதங்களுக்கு முன்புதான் சவுந்திரா பெரியம்மா வயிற்றிலிருந்த பூசணிக்காய் அளவுள்ளகட்டியை அகற்றிக்கொண்டு வந்து புண்ஆறாத நிலையில் முடங்கிக் கிடந்தாள். அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கக் கூடும் என அவளுக்குச் சிகிச்சையளித்த அம்பளிக்கை மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியிருந்ததால் சாவை எதிர்நோக்கிக்காத்திருப்பவளாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டிருந்தாள். முத்தையன்வலசுப் பெரியப்பாவும் பதின் வயதுகளிலிருந்த அவளது இரண்டு மகன்களும் அவர்களது பண்ணையக்காரர்களும் எங்கள் பெரியம்மாவும் காருமாமாவும் ராசம்மா அத்தையும் மற்ற உறவினர்களும் உடையாம்பாளையத்துவாசிகளும் அவ்வாறே கற்பனை செய்து கொண்டிருந்தனர். அம்பளிக்கை மருத்துவர்கள் அவளது வயிற்றைக் கிழித்த அந்தக் கணத்திலேயே சிதறிப்போனார் முத்தையன்வலசுப் பெரியப்பா. மருத்துவமனை வளாகத்தில் அங்கிருந்த செங்கொன்றை மரங்களின் மருந்துக்கழிவுகள் இறைந்துகிடந்த நிழல்களில் சித்தப்பிரமை கொண்டவரைப் போல் நடமாடிக் கொண்டிருந்தார் முத்தையன்வலசுப் பெரியப்பா. ஏறத்தாழ ஒருமாதம்வரை மருத்துவமனைப் படுக்கையிலிருந்த சவுந்திரம் பெரியம்மாவை எங்கள் பெரியம்மாவும் ராசம்மா அத்தையும் சுந்தராடிவலசுப் பெரியம்மாவும்தான் அவ்வப்போது வந்து ஒருவர்மாற்றி ஒருவராகத் துணையிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். காயம் கொஞ்சம் ஆறியபிறகு அம்பிளிகையிலிருந்து தாராபுரத்துக்கும் தாராபுரத்திலிருந்து மூலனூருக்கும் பேருந்துகளின் வழியாக அழைத்து வந்ததும் அங்கிருந்து தன் பண்ணையக்காரரொருவரின் இரட்டை மாட்டு வண்டியில் ராசம்மா அத்தையின் துணையுடன் அவளை உடையாம்பாளையம் அழைத்து வந்திருந்தார் காருமாமா.

அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சவுந்திரம் பெரியம்மா அதைப் பொருட்படுத்தாமல் குடிவேலைகளை மேற்கொண்டு வந்தாள். நான்கைந்து மாதங்களில் வயிறு திரண்டு பெரிதாகத் தொடங்கியதும் அவள் தான் மூன்றாவதாக ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக நினைத்தாள். அதுபற்றிச் சொன்னதும் முத்தையன்வலசுப் பெரியப்பா சந்தோஷத்தில் மூழ்கினார். உற்றார் உறவினர்களை அழைத்து விருந்து விஷேசம் எனக் கொண்டாட்டங்களில் திளைத்தார். வயிறு இயல்பைவிடப் பெரிதாகத் தென்பட்டதைப் பார்த்த எங்கள் பெரியம்மா அவளைப் பரிசோதித்து அவள் கருவுற்றிருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லையெனச் சொன்ன பிறகு பெரியப்பா கொண்டாட்டங்களைக் கைவிட்டார்.”

Devibharathi, நீர் வழிப்படூஉம்
Read more quotes from Devibharathi


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

நீர் வழிப்படூஉம் நீர் வழிப்படூஉம் by Devibharathi
123 ratings, average rating, 34 reviews

Browse By Tag