நீர் வழிப்படூஉம் Quotes
நீர் வழிப்படூஉம்
by
Devibharathi123 ratings, 4.39 average rating, 34 reviews
நீர் வழிப்படூஉம் Quotes
Showing 1-3 of 3
“மாமாவை வதைத்துக்கொண்டிருந்த காக்காய் வலிப்பு நோய் அப்போது அடிக்கடி வரத்தொடங்கியிருந்தது. அநேகமாக வாரத்திற்கொருமுறை. பெரியம்மா தந்துவிட்டுப் போயிருந்த இரும்பாலான தொரப்புக்குச்சியொன்றை எப்போதும் தன் தலைமாட்டில் வைத்துக்கொண்டிருந்தார் மாமா, எனினும் வலிப்பு வரும்போது அவரால் அதைத் தேடியெடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதுபோன்ற தருணங்களில் நினைவின் இழைகள் முற்றாக அறுந்துபோய்விடுகின்றன. கை, கால்கள் வெட்டியிழுப்பதையோ, வாயிலிருந்து கோழை வடிவதையோ வீறிட்டுக் கத்துவதையோ பார்ப்பதற்கு அநேகமாக யாரும் இருப்பதில்லை.
பேச்சுவார்த்தையற்றவராக எதிரே இருந்த முத்தையன்வலசுப் பெரியப்பா அப்போது வீட்டிலிருந்தால் அந்தச் சத்தத்தைக் கேட்டு வந்து விடுவார், அந்தச் சாவிக்கொத்தைத் தேடியெடுத்து உள்ளங்கையில் திணித்து மடக்கிப் பிடித்துக்கொள்வார், சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிப்பார், குடிக்கவும் தருவார். சிதறி வழிந்திருந்த கோழையைத் துடைத்து கால்களை நீட்டி மல்லார்ந்து படுக்க வைத்துத் தலையணையொன்றை முட்டுக்கொடுத்து பற்றியிருந்த அந்தத் தொரப்புக்குச்சியை விடுவித்துப் பழையபடி அவரது தலைமாட்டில் பத்திரப்படுத்திவிட்டுப் போய் விடுவார். வெகுநாட்கள் வரை மாமா அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. வலிப்பின் தாக்கம் நீங்கி நினைவு மீளும்போது தனக்கு வலிப்பு வந்ததை நினைவுகூர முற்படுவார் மாமா, உள்ளங்கையை விரித்து சாவிக்கொத்து இருக்கிறதா எனத் தேடுவார், அது வைத்தது வைத்த இடத்தில் அப்படியே கிடக்கும், கன்னங்களில் கோழையின் ஈரம் தென்படாது, மாமா குழம்பிப்போவார், உண்மையிலேயே வலிப்பு வந்ததா இல்லை அப்படிக் கற்பனை செய்துகொண்டோமா என யோசிக்க முற்படுவார்.”
― நீர் வழிப்படூஉம்

“அப்போதுதான் படிக்கட்டுகளின் வழியே வேகமாக அடியெடுத்து வைத்து நடந்து தன்னைக் கடந்து போய்க்கொண்டிருந்த மகள் ஈஸ்வரியைப் பார்த்தார். 'ஈசு' எனப் பெருங்குரலெடுத்து அவர் அழைத்ததைக் கேட்டவள் கண்கள் விரிய அவரைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள், ஒரே வீச்சில் அவளை நெருங்கினார் மாமா, கைகளைப் பற்றிக்கொண்டார், 'ஈசு ஈசு கடசீல அந்த முருகன் உன்ன எம்பட கண்ணுக்குக் காட்டீட்டே, அவெ கண்கண்ட தெய்வம்ங்கறது. செரியாப் போச்சு பாத்தயா?' என அவளை வாரியணைக்க முற்பட்டார். அவள் கூச்சலிட்டாள், மிகப் பதற்றமடைந்தவளாக அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவளது கூச்சலைக் கேட்டு ஓடிவந்த பக்தர்களில் சிலர் மாமாவிடமிருந்து அவளை விடுவிக்க முயன்றிருக்கிறார்கள், யாரோ ஒரு முதியவர், "தாயோலி, கோயல்ல வந்து என்ன காரியம்டா பண்ணிக்கிட்டிருக்கறே நீ?" எனக் கேட்டுக்கொண்டே மாமாவை அடித்திருக்கிறார், பார்த்த மற்ற சிலர் ஆத்திரத்துடன் மாமாவை நெருங்கியிருக்கிறார்கள்.
நல்வாய்ப்பாக அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, சரிந்து கீழே விழுந்து கை,கால்கள் வெட்டியிழுத்ததைப் பார்த்தவர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள், மாமா கத்தியிருக்கிறார், வாயிலிருந்து கோழை வழிந்திருக்கிறது, முற்றிலும் கைவிடப் பட்டவராக அங்கே கிடந்து துடித்துக்கொண்டிருந்த மாமாவை அவரால் ஈஸ்வரி என அழைக்கப்பட்ட பெண் பார்த்தாளாம், ஓடிப்போய் அருகிலிருந்த பெட்டிக்கடை ஒன்றிலிருந்து சாவிக்கொத்து ஒன்றை எடுத்து வந்து மாமாவின் உள்ளங்கைகளுக்குள் திணித்து அழுத்திப் பிடித்துக்கொண்டாளாம், யாரோ கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை முகத்தில் விசிறியடித்து, இரண்டு மடக்குக் குடிக்கக் கொடுத்தாளாம், துடிப்படங்கியதும் அவரை அதே உபய மண்டபத்தில் கால்களை நீட்டி மலர்த்திப் படுக்க வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து போய் விட்டாளாம். அப்போது நடந்தவற்றையும் தன் சாயல்கொண்ட அந்த முகத்தையும் நினைவின் கயிறு அறுந்து விழுந்திருந்த அந்தநேரத்திலும் அவரால் துல்லியமாகக் காண முடிந்திருந்ததாம்.
சாகும்வரை அது ஈஸ்வரிதான் எனச் சொல்லிக்கொண்டிருந்தார் காருமாமா.”

“சில மாதங்களுக்கு முன்புதான் சவுந்திரா பெரியம்மா வயிற்றிலிருந்த பூசணிக்காய் அளவுள்ளகட்டியை அகற்றிக்கொண்டு வந்து புண்ஆறாத நிலையில் முடங்கிக் கிடந்தாள். அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கக் கூடும் என அவளுக்குச் சிகிச்சையளித்த அம்பளிக்கை மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியிருந்ததால் சாவை எதிர்நோக்கிக்காத்திருப்பவளாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டிருந்தாள். முத்தையன்வலசுப் பெரியப்பாவும் பதின் வயதுகளிலிருந்த அவளது இரண்டு மகன்களும் அவர்களது பண்ணையக்காரர்களும் எங்கள் பெரியம்மாவும் காருமாமாவும் ராசம்மா அத்தையும் மற்ற உறவினர்களும் உடையாம்பாளையத்துவாசிகளும் அவ்வாறே கற்பனை செய்து கொண்டிருந்தனர். அம்பளிக்கை மருத்துவர்கள் அவளது வயிற்றைக் கிழித்த அந்தக் கணத்திலேயே சிதறிப்போனார் முத்தையன்வலசுப் பெரியப்பா. மருத்துவமனை வளாகத்தில் அங்கிருந்த செங்கொன்றை மரங்களின் மருந்துக்கழிவுகள் இறைந்துகிடந்த நிழல்களில் சித்தப்பிரமை கொண்டவரைப் போல் நடமாடிக் கொண்டிருந்தார் முத்தையன்வலசுப் பெரியப்பா. ஏறத்தாழ ஒருமாதம்வரை மருத்துவமனைப் படுக்கையிலிருந்த சவுந்திரம் பெரியம்மாவை எங்கள் பெரியம்மாவும் ராசம்மா அத்தையும் சுந்தராடிவலசுப் பெரியம்மாவும்தான் அவ்வப்போது வந்து ஒருவர்மாற்றி ஒருவராகத் துணையிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். காயம் கொஞ்சம் ஆறியபிறகு அம்பிளிகையிலிருந்து தாராபுரத்துக்கும் தாராபுரத்திலிருந்து மூலனூருக்கும் பேருந்துகளின் வழியாக அழைத்து வந்ததும் அங்கிருந்து தன் பண்ணையக்காரரொருவரின் இரட்டை மாட்டு வண்டியில் ராசம்மா அத்தையின் துணையுடன் அவளை உடையாம்பாளையம் அழைத்து வந்திருந்தார் காருமாமா.
அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சவுந்திரம் பெரியம்மா அதைப் பொருட்படுத்தாமல் குடிவேலைகளை மேற்கொண்டு வந்தாள். நான்கைந்து மாதங்களில் வயிறு திரண்டு பெரிதாகத் தொடங்கியதும் அவள் தான் மூன்றாவதாக ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக நினைத்தாள். அதுபற்றிச் சொன்னதும் முத்தையன்வலசுப் பெரியப்பா சந்தோஷத்தில் மூழ்கினார். உற்றார் உறவினர்களை அழைத்து விருந்து விஷேசம் எனக் கொண்டாட்டங்களில் திளைத்தார். வயிறு இயல்பைவிடப் பெரிதாகத் தென்பட்டதைப் பார்த்த எங்கள் பெரியம்மா அவளைப் பரிசோதித்து அவள் கருவுற்றிருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லையெனச் சொன்ன பிறகு பெரியப்பா கொண்டாட்டங்களைக் கைவிட்டார்.”