தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
37 views
புதினம்/நாவல் > தோழமை வாசிப்பு: வெண்முரசு 04 - நீலம்

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited Jan 17, 2024 06:10AM) (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
வெண்முரசு நாவல் தொடர் தொட்டு வாசிக்கத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகப் போகின்றன. நடுவில் இரண்டு நாவல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல் வாசிப்பிற்கு இங்கு வாசிப்பு இழை கூட தொடங்கவில்லை. தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நீலம் புதினத்திற்காக இந்த இழை தொடங்குகிறேன். முதல் மூன்று நாவல்களில் இருந்து முற்றிலும் வேறு தளத்தில், களத்தில், மொழி நடையில் நடக்கும் கதை. மகாபாரத்தை விடுத்து, பாகவதத்தை அடிப்படையாகக் கொண்டு ராதையின் பார்வையில் கதை விரிகிறது. வாசிக்க விருப்பம் உள்ளவர்கள், வாசித்தவர்கள் தங்கள் கருத்துக்களை இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம்.

மொத்தம் 37 அத்தியாயங்கள் உள்ள இந்த புத்தகம் முதல் மூன்று புத்தங்களை விட அளவில் சிறியது. வெண்முரசு இணையத்தளத்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றது - முதல் அத்தியாயத்திற்கான இணைப்பு - https://venmurasu.in/neelam/chapter-1/

YouTube தளத்தில் ஒலி வடிவமாக சுபஸ்ரீ சுந்தரம் அவர்களின் குரலில் கேட்க முடியும். - https://www.youtube.com/playlist?list...

இக்கதை மிகுந்த கவித்துவமாக இருப்பதால் ஒலி வடிவில் கேட்பதை விட வாசிப்பது எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கின்றது. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை "நீலம், ஒலிவடிவில்" (https://www.jeyamohan.in/158032/), "நீலம் குரலில், கடிதங்கள்"(https://www.jeyamohan.in/153525/) என்ற இந்தப் பதிவுகளின் மூலம் அறிந்தேன்.

ஜெமோ அவர்கள் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்
* "தமிழ் அறிந்து தமிழ் எழுத்துக்கள் அறியாதவர்கள் ஒரு பெரும் கூட்டம். அவர்களால் தமிழை கேட்கத்தான் முடியும். அவர்கள் தமிழிலலக்கியத்திற்குள் வர ஒலிவடிவங்கள் மிகப்பெரிய வழியை திறக்கின்றன. இன்னொரு தரப்பு தமிழை வாசிக்கவும் தெரிந்து, ஆனால் தமிழின் உணர்ச்சிகரம் மற்றும் உச்சரிப்புகளை அறியாதவர்கள். அவர்களுக்கும் இந்த ஒலிவடிவம் பேருதவி புரிகிறது எனக் காண்கிறேன்."

* "அறிதலுக்கான இயல்புகள் அனைவருக்கும் ஒன்றல்ல. சிலருக்கு செவிசார் நுண்ணுணர்வு மிகுதி. சிலருக்கு அது அறவே இருக்காது. முழுக்க முழுக்க மூளை நரம்பமைப்பு சார்ந்தது அந்த தன்மை.

செவிசார் நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு கேட்டால் நெஞ்சில் பதியுமளவுக்கு வாசிப்பால் பதிவதில்லை. அவர்களுக்கு ஒலிநூல்கள் மிக உதவியானவை. செவியுணர்வு குறைந்தவர்களால் ஒலிவடிவை ரசிக்க முடியாது."


#வெண்முரசு #நீலம்


message 2: by Prem (last edited Jun 21, 2023 08:05PM) (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
வெண்முரசு வரிசையில் நீலம் புதினம் எழுதிமுடித்த மனநிலையைப் பற்றி ஜெமோ "நீலம் மலர்ந்த நாட்கள்" (https://www.jeyamohan.in/tag/%e0%ae%a...) என்ற கட்டுரைத் தொடரில் விவரித்துள்ளார். இதற்கு முந்தைய புதினமான வண்ணக்கடலில் நீலம் ஒரு வண்ணமாக தனி பகுதியாக வந்திருக்க வேண்டியதாக சொல்கிறார். எப்படி அது தனி புதினமாகத் தன்னளவில் மகாபாரதத்தில் இருந்து விலகி பாகவதத்தின் பக்தி காவியமாக, பாகவதத்தில் இல்லாத ராதையின் காதலை மையமாகக் கொண்டு அவளது பார்வை வழியாக கவித்துவமாக விரிந்துள்ளது என்பது வியக்க வைக்கிறது.

"மகாபாரதத்தின் ..கிருஷ்ணனின் ஆளுமை ஞானியான அரசன்"
பாகவதத்தின் கண்ணன் "பரம்பொருளே குழந்தையாகி வந்தது"

உடல்நலமில்லாத நிலையில், மாத்திரைகளின் பின்விளைவால் வந்த உறக்கத்தில் கண்ட கனவின் தொடர்ச்சியாக வந்த வரிகள் "உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ". அதன் தொடர்ச்சியாக சந்தத்தில் வந்து விழுந்த வரிகளுடன் "கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?" நீலம் மலர்ந்திருக்கிறது.

நீலம் மலர்ந்த நாட்கள் 1 (https://www.jeyamohan.in/62438/)

இரண்டாவது பாகத்தில், இந்த நாவல் எழுதப்பட்ட நாட்களில் எப்படிப்பட்டு மனநிலையில் இருந்தார் என்று விளக்குகிறார். பயணங்கள், திரைப்பட வேலைகள் (பாபநாசம்), திரைக் கலைஞர்களுடனான நட்பு, நகைச்சுவை, மழை, இயற்கை அழகு, பெண்கள் அழகை ரசித்தல், உணவு, இனிப்பு அதிகமாக சாப்பிட்டு உடல் எடை உயர்ந்தது, சொகுசான அறைகளில் வசிப்பு, நாவல்கள் வாசிப்பு, பிற கட்டுரைகள் எழுத்து, இசை, நிறங்களின் மேல் பரவசம் என்று எத்தனையோ புற நிகழ்வுகளுக்கு நடுவேயும், நீலம் அகத்தில் இருந்து கொண்டே இருந்தது என்கிறார். இந்நிலையை ஒரு பிறழ்வுநிலையென்றே கூறுகிறார். அத்தியாயங்கள் அன்றன்றைக்கே எழுதி, சண்முகவேல் படம் வரைந்து, மெய்ப்பு பார்த்து வெளியிடல் என்பது எத்தகைய பதற்ற நிலையை கொடுத்திருக்கும் என்ற எண்ணிப் பார்க்கவே மலைப்பாக உள்ளது.

நீலம் மலர்ந்த நாட்கள் 2 (https://www.jeyamohan.in/62450/)

இரண்டாவது பாகத்தில், இந்த நாவல் எழுதப்பட்ட நாட்களில் எப்படிப்பட்டு மனநிலையில் இருந்தார் என்று விளக்குகிறார். பயணங்கள், திரைப்பட வேலைகள் (பாபநாசம்), திரைக் கலைஞர்களுடனான நட்பு, நகைச்சுவை, மழை, இயற்கை அழகு, பெண்கள் அழகை ரசித்தல், உணவு, இனிப்பு அதிகமாக சாப்பிட்டு உடல் எடை உயர்ந்தது, சொகுசான அறைகளில் வசிப்பு, நாவல்கள் வாசிப்பு, பிற கட்டுரைகள் எழுத்து, இசை, நிறங்களின் மேல் பரவசம் என்று எத்தனையோ புற நிகழ்வுகளுக்கு நடுவேயும், நீலம் அகத்தில் இருந்து கொண்டே இருந்தது என்கிறார். இந்நிலையை ஒரு பிறழ்வுநிலையென்றே கூறுகிறார். அத்தியாயங்கள் அன்றன்றைக்கே எழுதி, சண்முகவேல் படம் வரைந்து, மெய்ப்பு பார்த்து வெளியிடல் என்பது எத்தகைய பதற்ற நிலையை கொடுத்திருக்கும் என்ற எண்ணிப் பார்க்கவே மலைப்பாக உள்ளது.

நீலம் மலர்ந்த நாட்கள் 2 (https://www.jeyamohan.in/62450/)

மூன்றாவது கட்டுரையில் அவரது நாட்கள் வண்ணக் கனவுகளால் நிறைந்ததை விவரிக்கிறார். "இமைகள் மேல் ஒளிபட்டால் கனவுகளில் வண்ணங்கள் இருக்குமாம்". குமரி மாவட்டம் பசுமை நிறைந்து இருப்பதைப் பற்றி அவர் குறிப்பிட்டதை நானும் உணர்ந்திருக்கின்றேன். மலர்களுக்கும் கோவில் விழாக்களுக்கும் பருவங்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி "கோயிலைச் சார்ந்த வாழ்க்கை என்பது மண்ணை முழுதறிந்து வாழ்வது". என்கிறார். மூன்றில் ஒரு பங்கு கனவுகள் காமம் சார்ந்தவை என்கிறார். பித்து நிலை அவருக்கு தற்கொலை எண்ணங்களைக் கூட உண்டு பண்ணியிருக்கிறது. எழுபதுகளின் தமிழ் மலையாள பாடல்களின் வழியாக கொடுத்த சில உணர்வுகள் - "பாட்டரி முனையை நாவால் தொடுவது போல தித்தித்தது", "உடம்பில் குண்டூசியால் மெல்ல நெருடுவதுபோல", "ஒரு நிழலுருவம். தொட்டால் அந்த இடம் கலைந்து போகும். எஞ்சிய பகுதியில் உயிரும் இருக்கும்". கண்ணனையும், ராதையையும் அருகே உணர வைத்திருக்கிறது. இத்தகைய கட்டற்ற நிலையில் இருந்து எப்படி நாட்களைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார் என்று விவரமாகவே எழுதி உள்ளார். வெறுமை கலந்த நாட்கள், காய்ச்சலில் உடல் வெம்மையில் இருந்த நாட்கள், சோர்வாக தன்னிரக்கம் நிறைந்த நாட்கள் என்ற எல்லாவற்றையும் மனப்பயிற்சிகளின் மூலம் ஏதோ ஒரு பற்றுதல் கொண்டு மீண்டு வந்த அனுபவங்கள் அதை தொகுத்த இந்தக் கட்டுரை என்று எல்லாமே தன்மீட்சியாகத்தான் தெரிகிறது.

நீலம் மலர்ந்த நாட்கள் 3 (https://www.jeyamohan.in/62452/)


back to top