Jeyamohan > Quotes > Quote > Chitra liked it
“எவனோ ஒரு வழிப்போக்கனிடம் தன் வாழ்க்கையை முழுக்கச் சொல்லி நியாயம் கேட்கிறார். ஆனால், வழிப்போக்கனிடம் மட்டும் தானே இவற்றைச் சொல்ல முடியும்? வாழ்க்கைக்குள் வந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் சுயநலங்களும் கணக்குகளும் இருக்கின்றன. அவர்களின் கருணை மாசடைந்திருக்கிறது. அவர்களின் அறம் திரிந்துவிட்டிருக்கிறது. அவர்களால் சக மனிதர்களின் கையைப் பற்றிக் கொண்டு உண்மையான அன்புடன் ஒரு சொல் சொல்ல முடிவதில்லை. வழிப்போக்கன் வெறும் மானுடன் அல்லவா?”
―
―
No comments have been added yet.
