இரவு Quotes

Rate this book
Clear rating
இரவு இரவு by Jeyamohan
345 ratings, 4.05 average rating, 37 reviews
இரவு Quotes Showing 1-15 of 15
“யஷி என்பது ஒரு ஆளுமை அல்ல. ஒரு தருணம்தான். எல்லாப் பெண்ணும் ஏதோ ஒரு தருணத்தில் யஷியாக ஆகித் திரும்பி வருகிறாள்.”
Jeyamohan, இரவு / Iravu
“தமிழ்நாடு முழுக்க முந்நூறு வருஷம் தெலுங்கர்களோட ஆட்சியிலே இருந்திருக்கு. மன்னர்கள் மட்டும் தெலுங்கு இல்லை. கிட்டத்தட்ட பெருவாரியான ஜனங்களும் அங்கேயிருந்து வந்து தமிழ்நாடு முழுக்க பரவியிருக்காங்க. அவங்க தமிழை தெலுங்கு உச்சரிப்புக்கு மாத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி தமிழ் கேக்கிறதுக்கு மலையாளம் மாதிரித்தான் இருந்திருக்கும், தெலுங்கு ஆதிக்கம் இல்லாத இடங்களிலே இருக்கிற பழமையான தமிழ் அப்டியே மலையாள ஓசையோடதான் இருக்கு. ஃபர் எக்ஸாம்பிள் தெற்கு திருவிதாங்கூர். ஐ மீன், கன்யாகுமாரி ஜில்லா பாஷை. அப்றம் ஸ்ரீலங்காத் தமிழ். அப்றம் மேற்குமலைகளிலே இருக்கிற டிரைப்ஸ் பேசற தமிழ்.”
Jeyamohan, இரவு / Iravu
“எல்லையற்ற தூரிகையொன்றின் நுனியில்
சொட்டி நிற்கும் கரும்சாயம்
இந்த இரவு.”
Jeyamohan, இரவு / Iravu
“பின் மெல்ல ஓர் அமைதி உருவாகியது. வழியும் தேன் விழுதைப்போல அழுத்தமான அமைதி.”
Jeyamohan, இரவு / Iravu
“நல்ல பிரார்த்தனையில் பிரார்த்திப்பவன் இல்லாமலாவான். பிரார்த்தனையும் இல்லாமலாகும். பிரார்த்திக்கப்படுவது மட்டும் மிஞ்சியிருக்கும்.”
Jeyamohan, இரவு / Iravu
“தானா கனியாததை தடியால அடிச்சுக் கனியவைக்கிறதுக்கு பேருதான் பிலாசபி”
Jeyamohan, இரவு / Iravu
“நல்ல தத்துவஞானின்னா மத்தவங்களை குழப்பிட்டு தான் தெளிவா இருக்கணும்.”
Jeyamohan, இரவு / Iravu
“சொற்கள் இல்லாமையின் இருளில் முட்டாள் இருக்கிறான் என்றால் அறிவாளிகள் சொற்களின் இருளில் இருக்கிறார்கள்.”
Jeyamohan, இரவு / Iravu
“தெளிவான இலக்குள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், ஆனால் அவர்கள் வாழ்வதில்லை. இலக்குகளில் இருந்து இலக்குகளை நோக்கித் தாவிச் செல்வதையே அவர்கள் வளர்ச்சி என்று எண்ணுகிறார்கள். எத்தனை அபத்தமான ஒரு கோட்பாடு.”
Jeyamohan, இரவு / Iravu
“நான், நீ, காதல் என மூன்றே மூன்று இருப்புகளினால் ஆன உலகம் அது. நான் நீயுடன் காதலால் இணைக்கப்பட்டிருக்கும் உலகம். நானும் நீயும் இயங்குவது காதல் மட்டுமாக இருக்கும் உலகம். காதல் என்ற பெயர்ச்சொல் வினைச்சொல்லாக உருமாறும் இடம்.”
Jeyamohan, இரவு / Iravu
“பகல் ஒரு பெண் என்றால் இரவு ஒரு யஷி.”
Jeyamohan, இரவு / Iravu
“கீதை சொல்லுது, பிறர் தூங்கும்போது யோகி விழித்திருக்கிறான்.”
Jeyamohan, இரவு / Iravu
“மலையாளிகள் பாலில்லா டீ போடுவதில் கில்லாடிகள். பால் சேர்த்தால்தான் சொதப்பிவிடுவார்கள்”
Jeyamohan, இரவு / Iravu
“சட்டை. இடது அக்குளில் ஒரு செய்தித்தாள் சுருள்.”
Jeyamohan, இரவு / Iravu
“எல்லா ஆடைகளும் சுடர் விட்டுக்கொண்டிருந்தன. ஒரு மேஜைக்கருகே சென்று அமர்ந்து கொண்டோம். திடமான கனத்த பெண்குரல் முனகுவதுபோல ஒலித்து சட்டென்று”
Jeyamohan, இரவு / Iravu