நிழலின் தனிமை Quotes

Rate this book
Clear rating
நிழலின் தனிமை நிழலின் தனிமை by Devibharathi
75 ratings, 4.21 average rating, 15 reviews
நிழலின் தனிமை Quotes Showing 1-13 of 13
“நீங்க நல்லாருக்கணும் சார். சார். சாரென்ன சார், நீங்க எனக்குப் பிள்ளையாட்ட. பெத்த பிள்ளைக்கு மேல”
Devibharathi, நிழலின் தனிமை
“கிளார்க் சார், எதாவது சாப்பிடக் கெடைக்குமா? பசிக்குது”
Devibharathi, நிழலின் தனிமை
“ஓரளவு சுயநினைவை எட்டத் தொடங்கியிருந்த கருணாகரன் அனிமேஷன் படத்தில் வரும் ஒரு பாத்திரம்போல மிக மெதுவாகக் கண்களைத் திறந்து தனக்கெதிரில் ஒரு கேலிச்சித்திரம்போல் அசைந்துகொண்டிருந்த என்னை அடையாளம் தெரிந்துகொண்டான். "கிளார்க் சார் நீங்களா?" எனத் தன் நடுங்கும் கரங்களை மிகச் சிரமப்பட்டு உயர்த்திக் குவிக்க முயன்றவன். "ஆயுசுக்கும் நீங்க நல்லாருப்பீங்க சார்" என ஆசிர்வதித்தான். தளும்பி வழியத் தொடங்கியிருந்த அவனது கண்களை ஒரு கைத்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். "இத்தன நாளா வீட்டுப் பக்கமே வராம இருந்துட்டீங்களே..." என்றவன், "ஆராச்சு எதாச்சு சொன்னாங்களா?" என மிகப் பலவீனமான குரலில் கேட்டான்.”
Devibharathi, நிழலின் தனிமை
“எதையோ கேட்கத் தயங்குபவனின் பாவனையோடு அவன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அருகில் வந்தவன் மிக மிகத் தணிந்த குரலில் கேட்டான்.

"உங்க பேர் கருணாகரனா?”
Devibharathi, நிழலின் தனிமை
“வின்சென்ட் பெரியாரின் மேற்கோள்களடங்கிய புத்தகமொன்றின் பக்கமொன்றை விரித்து என்னிடம் காட்டிக்கொண்டிருந்தான். நான் அவன் காட்டிய பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த மேற்கோளை வாய்விட்டு அதே சமயம் மிகத் தணிந்த குரலில் படித்துக்கொண்டிருந்தேன். தடிமனான எழுத்துகளால் அடர்ந்த கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த மேற்கோள் இதுதான். "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் முட்டாள்" அந்த மேற்கோள் எனக்குப் பிடித்திருக்கிறதா எனத் தணிந்த குரலில் அவன் என்னிடம் கேட்டான். நான் தலையசைத்தேன். பிறகு அதை நாம் நம்முடைய பள்ளிக்கூடச் சுவரில் எழுதலாமா எனக் கேட்டான். நான் சரி என்றேன்.”
Devibharathi, நிழலின் தனிமை
“அவள் என் தொடைமீது உட்கார்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவளுடைய உதடுகளிலிருந்து வீசிய கொத்தமல்லி வாடையைச் சுவாசிக்கப் பிடிக்காமல் தலையைச் சாய்த்து அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.”
Devibharathi, நிழலின் தனிமை
“சில தருணங்களில் தாளமுடியாத குற்ற உணர்வுக்கும் சுய அருவருப்புக்கும் உள்ளாகிவிடுவேன். எந்தக் கருணாகரனை நான் தீமையின் உருவகமாக நினைத்திருந்தேனோ யாரைப் பழிதீர்ப்பதற்காக முப்பது வருடங்களாக ஒரு கெட்ட ஆவியைப் போல அலைந்து திரிந்தேனோ அந்தக் கருணாகரனைப்போல் ஆகிவிட்டதாக, பார்க்கப்போனால் தார்மீகரீதியில் அவனை விட மோசமாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக நினைப்பேன்.”
Devibharathi, நிழலின் தனிமை
“நாரையின் கூடுகளைப்போலத் தன் துக்கங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் அமைத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டிருந்தாள் அவள்.”
Devibharathi, நிழலின் தனிமை
“என்னை ஆசீர்வதிப்பதற்காக நீண்ட அவனது கருணையின் கொடுங் கரங்கள் என்னை நிம்மதியற்றவனாக மாற்றிக்கொண்டிருந்தன.”
Devibharathi, நிழலின் தனிமை
“முதிர்ச்சி கூடிக்கொண்டிருந்த அம்மனிதன் பழி வாங்கப்படுவதற்குத் தகுதியற்றவனாக மாறிக்கொண்டிருக்கிறானோ என்றுகூட நினைத்தேன்.”
Devibharathi, நிழலின் தனிமை
“தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சத்தத்துக்குப் பயந்து புளிய மரத்திற்குக் கீழே கயிற்றுக்கட்டிலைப் போட்டுப் படுத்துக்கொண்டேன்.”
Devibharathi, நிழலின் தனிமை
“இது என் முதல் நாவலாக அமைந்தது தற்செயலான நிகழ்வு. பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்திருந்த 'நொய்யல்'தான் என் முதல் நாவலாக இருக்க வேண்டுமென விரும்பியிருந்தேன். நான்கு பாகங்களையுடைய அந்நாவலின் இரண்டு பாகங்களை முழுமையாகச் செப்பனிட்டு முடித்திருந்த நிலையில் ஏதோவொரு மனத்தடை காரணமாகக் கிடப்பில் போட்டுவிட்டேன்.”
Devibharathi, நிழலின் தனிமை
“என் படைப்பு முயற்சிகளுக்கு ஆதாரமாகவும் தடையாகவும் இருப்பவை என் வாழ்வனுபவங்கள்தாம் என நிச்சயமாகச் சொல்ல முடியும்.”
Devibharathi, நிழலின் தனிமை