வெளியேற்றம் [Veliyetram] Quotes

Rate this book
Clear rating
வெளியேற்றம் [Veliyetram] வெளியேற்றம் [Veliyetram] by Yuvan Chandrasekar
27 ratings, 4.26 average rating, 5 reviews
வெளியேற்றம் [Veliyetram] Quotes Showing 1-30 of 35
“நான் நம்புகிற தர்க்கத்தின்படி நிரூபணமாகக் கூடியவை மட்டுமே வாஸ்தவத்தில் இருக்க முடியும்’ என்று உறுதியாக நினைப்பது ஒருவகை வெகுளித்தனமே.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“அறிவியலாகட்டும், ஆன்மவியலாகட்டும், இரண்டுமே வரையறைகள் உள்ள, வெறும் நிலைப்பாடுகள்தாம். பொதுமனத்தை வசீகரிப்பதற்கான தர்க்கமுறைகளைத் தொடர்ந்து வளர்த்துவருபவை. இவ்விரண்டு புலங்களையும் சமமாகக் கணக்கிலெடுத்து, அல்லது சமமாக புறக்கணித்துவிட்டு, தம் போக்கில் நகர்ந்து செல்வதற்குக் கலை வடிவங்களுக்கு மட்டுமே திராணி உண்டு.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“மரணத்துக்குப் பின்னான வாழ்வு என ஏதும் இல்லை’ என்று மட்டையடியாக அறிவியல் மறுத்துவிடுகிறது. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால்தானே அது அறிவியலாக இருக்க முடியும்? மாறாக, மரணத்துக்குப் பின் வழங்கப்படவிருக்கும் நீதிகளையும் தண்டனைகளையும் காட்டித் தன் வசம் இழுத்துப் பிடித்துக்கொள்ள மதங்கள் முனைகின்றன. இதன்மூலம், அன்றாட வாழ்வில் செயற்கையான ஒருவித அறப் பேணுதலை வலியுறுத்துகின்றன. வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு நியமங்களையும் நம்பிக்கைகளையும் நியாய அநியாயங்களையும் முன்வைத்தாலும், கொஞ்சமும் ஏற்றத் தாழ்வின்றி அவை அனைத்துமே ஒரேவிதமான அச்சிலிருந்து கிளைப்பவைதாம்.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“உலகின் ஒரே வலதுசாரி எழுத்தாளர்’ என்று மரியா வர்கோஸ் லோஸாவின் புகழ் பாடிய தமிழ் வரி ஒன்று இன்னமும் என் நினைவிலிருக்கிறது.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“அடிப்படையா ஒரு விஷயம். உடம்பு என்னென்ன சவுகரியத்தையெல்லாம் கேட்கிறதோ, அது அத்தனையும் தாட்சண்ணியமில்லாமெ மறுத்துடணும். ஆரம்பத்துலெ ரெண்டு வேளை சாப்பாடு. கொஞ்ச நாள் கழிச்சு ஒருவேளை ஆக்கிடனும். பிற்பாடு மாசத்திலே பாதிநாள் உபவாசமாத்தான் இருக்க வேண்டி வரும். செய்ய வேண்டிய பயிற்சிகள் எல்லாத்தையுமே வெறும் வயித்திலெதான் செஞ்சாகணும். அமாவாசையும் ஏகாதசியும் ரொம்ப முக்கியமான உபவாச நாள்கள். வெளிச்சாப்பாடு கூடவே கூடாது.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“கண்ணோடெ அனுபவத்திலே ‘இப்போ’வா இருக்கிற ஒண்ணு, ஒட்டுமொத்த உடம்போடெ அனுபவத்திலே ‘இன்னும் சித்தெப் பிந்தி’ன்னு இருக்கே. இதை என்னன்னு சொல்றது? ஒர்த்தர் மனசுக்கும் உடம்புக்கும் இடையில் உள்ள தூரம் ன்னா? இல்லே, அந்த ஒரு க்ஷணத்தில் அவரோடெ கண்களுக்கும் உடம்புக்கும் தொடர்பு அத்துப் போச்சுதுன்னா?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“நமக்கு தரிசனமாகற இந்த வஸ்து உலகம், உள் உலகம் ரெண்டுக்கும் வெளியில் இருந்துண்டு தன்னுடைய இருப்பை உணர முடியுமாங்கறது. அதெல்லாம் ராஜாளிகள் சுத்தற ஆகாசம். நம்மளை மாதிரிச் சிட்டுக்குருவிகள் வெறுமனே பாக்கத்தான் முடியும் அந்த உசரத்தையெல்லாம். இதுக்கே விலாவெல்லாம் நோகறது...”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் துர்க்கை சந்நிதிக்கு அருகில் சித்தர் சந்நிதி இருக்கிறது. ஆளுயரம் உள்ள அமர்ந்த நிலைச்சிற்பம். அபூர்வமான திருத்தமும் தீர்க்கமும் வாய்ந்த விக்கிரகம். அவரைப் பார்க்கும்போதெல்லாம் தனக்கு உடம்பெங்கும் புல்லரித்துவிடுவதாகச் சொல்வாள் அம்மா. நிரந்தரமான தியானத்தில் இருக்கிறாராம் அவர். ‘தியானத்தின் உச்சத்தில் நிலைகொள்ளும்போது உண்டாகும் ஆனந்தத்தில்’ என்று சித்ராவின் தாய்மாமா திருத்தினார் ஒருமுறை.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“வியாதி ஒடம்புக்குள்ளெ இருந்துச்சுன்னா டாக்டருக போதும், ஒடம்புலெ இல்லாத வியாதி வந்து தொத்தீருச்சுன்னா என்னா செய்யுறது சொல்லுங்க’.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“மனுச வாழ்க்கைலே காரண காரியம் சொல்ல முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு’.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“புத்தாடை உடுத்திய சிறுமியைப்போல எந்நேரமும் ஒருவிதப் பெருமிதம் உள்ள முகம் அது.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“Diminishing marginal utility என்று ஒரு கோட்பாடு உண்டு. ஒரே தடவையில் தொடர்ந்து உண்ணும்போது முதல் ஆப்பிள் வழங்கும் அதே ருசியை மூன்றாவது ஆப்பிள் வழங்காது. எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கையில், வெறுப்பாகவும், நஞ்சாகவும்கூட அது எதிர்மறையாகத் திரும்ப வாய்ப்பிருக்கிறது.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“அறிந்தவையும் அறியாதவையும் ஜோடிசேர்ந்து சொடுக்கும் சவுக்கிலிருந்து தப்பிக்க மார்க்கமறியாது திகைத்து மறுகும் ஜனங்களிலிருந்து கசியும் நிணமும் ரத்தமும் கொண்ட ஈரம்தான் அது.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“புஸ்பவன நாதர் கோயில்லெ தரிசனத்துக்குப் போனனா. நல்ல அளகான மூலவரு. புராண காலத்துலெ இப்பிடித்தான் ஒரு பூக்கட்டுற பொம்பளெ, ‘அடடெ, எம்பூட்டு அளகு’ன்னு மூலவரெ மொகத்தெ வருடி திஸ்டி களிச்சிச்சாம். லிங்கத்துமேலெ நகக்குறி பட்டுருச்சு. அது இன்னமும் இருக்காம். பெரிய பெரிய ஞானிகள்லாம் தேடி வந்து சமாதியாயிருக்குற எடமாம் திருப்புவனம்.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“பாத்துப் பாத்துப் பண்ணின செலைக்கி, சட்டுனு தெரியாதபடி ஏதாவது ஒச்சத்தை விட்டு வைப்பாகளாம்”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“தன்னை வருத்திப் பிறருக்காக உழைக்கிற நமக்கெதுக்கு வெட்கமும் கூச்சமும்...?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“வெறும் மான அவமானத்துக்கே இப்பிடித் தலைகுனிஞ்சு உக்காந்திருக்கியே? வியாதியும் தொத்தினால் என்ன செய்வே?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“படிக்காத நாய் கடிச்சுட்டு அதுபாட்டுக்குப் போயிண்டே இருக்கும். படிச்ச நாய் அப்படியில்லே. ரொம்ப நாகரிகமானது. கடிச்சுட்டு, ‘ஸாரி’ன்னு சொல்லிட்டுப் போகும்”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“அதைத் தற்கொலை என்று பெயரிட முடியாது வேதம். ஏதோவொன்றிடமிருந்து தப்பிப்பதற்காக மேற்கொள்வதைத்தான் தற்கொலை என்று சொல்லத் தகும். முடிவற்று நீள்கிற பிரயாணத்தின் பகுதியாய் ஒரு வண்டியிலிருந்து இறங்கி வேறொரு வண்டியில் ஏறுவதை எதிர்மறையான விஷயமாய் எப்படிச் சொல்லலாம்.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“விரும்பும் தறுவாயில் இயற்கை மரணத்தை வருவித்துக்கொள்ளும் கலையை நான் பயிலவில்லை. இறந்தவர்களின் உலகத்துக்குள் பிரக்ஞை தவறி நுழையும் மற்றவர்கள் மாதிரி இல்லாமல், புலனுணர்வு இருக்கும்போதே நுழைய வேண்டும் என்பது என் விருப்பம். தெரிந்தே கடக்கவேண்டும் அந்த நுழைவாசலை.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“நான் வாலிபனாகி விட்ட பிறகும், குழந்தைமை என்ற ஒன்றே உலகத்தில் இல்லாமல் போய்விடவில்லையே,”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“தடம் மிஞ்சாத பாதை அது. கருத்தாக மாற்றிச் சுவடிகளில் பதிப்பிக்கக்கூடியது அல்ல. அப்படி மட்டும் இயலுமானால், நூற்றுக்கணக்கான கிரந்தங்கள் நமக்குக் கிடைத்திருக்குமே.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“இந்தப் பிரதேசத்துக்குக் ‘காமரூபம்’ என்று பெயர் வந்திருக்கிறதே, பூமண்டலம் முழுவதுமே காம ரூபம் தானே. ‘காமம்’ என்ற ஆதார வார்த்தை ‘சரீரச் சேர்க்கைக்கு ஆசைப்படுவது’ என்ற குறுகிய அர்த்தத்தைப் பாமர மனத்தில் எப்படி வேர் இறக்கியது? காம க்ரோத லோப மத மாச்சரியம் என்று பட்டியலிடுகிறார்களே, காமத்தை ஒழித்துவிட்டால் பின்னோடே எல்லாம் தொடர்ந்து ஆவியாகிவிடும் என்றறிந்து முதற்சொல்லாக அதை அமைத்தவன் எவ்வளவு பெரிய மேதை”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“திலகர் எழுதிய கீதா ரகஸ்யமும்”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“மனித இதயத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் இயக்கம் நின்றுவிட்ட இதயத்தை அறுத்துப் பார்த்து நடப்பதுதான். ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை அறுத்துப் பார்த்துக் கண்டறிய முடியுமா? அல்லது, ஒரு கனவைக் கண்டுகொண்டிருக்கும்போதே கண் விழித்து அடுத்தவரிடம் சொல்ல முடியுமா?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“இறந்தவர்கள் உலகம் ஒன்று இருக்கிறது என்றால், இன்னும் பிறக்காதவர்களும் அங்கே இருக்கத்தானே செய்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் எவ்விதம் அடையாளம் காண்பார்கள்?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“இறப்பு சம்பந்தமாக இப்படி ஒரு சாத்தியம் இருக்கிறது என்றால், பிறப்பின் விஷயமும் ஒருவேளை இதுதானோ? விரும்பித்தான் வந்து பிறக்கிறார்களோ சகலரும்?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“சந்யாசி, சொல்லாமல் பிரிந்து செல்ல வேண்டும் என்பதுதான் நியதி.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“மேயப் போகுற மாட்டுக்குக் கொம்புலெ புல்லுக்கட்டா’ங்கும் எங்க அப்பத்தா.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“மூணு போகம் வெளையிற நிலத்தை வச்சுக் குப்பைகொட்டத் தெரியாதவன் கையிலே ரொக்கத்தைக் குடுத்தா மட்டும் வௌங்கவா செய்யும்...?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]

« previous 1