அ.முத்துலிங்கம் சிறுகதைகள் Quotes

Rate this book
Clear rating
அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம் அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம் by A. Muttulingam
46 ratings, 4.39 average rating, 4 reviews
அ.முத்துலிங்கம் சிறுகதைகள் Quotes Showing 1-16 of 16
“ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஏற்படும் சினேகமானது எப்படியும் செக்ஸ’ல் கொண்டு போய் விட்டு விடும். பிறகு பல சிக்கல்கள். ஆணுக்கும் அஸக்கு மிடையே ஏற்படும் சினேகம் அப்படியல்ல; பவித்திரமானது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“ஒளியால் இறப்பது விட்டில். ஓசையால் இறப்பது அசுணப் பறவை. சுவையால் இறப்பது மீன்; நாற்றத்தால் வண்டு. ஸ்பரிசத்தால் இறப்பது? ஸ்பரிசம், ஸ்பரிசம்? எவ்வளவோ ஞாபகப்படுத்திப் பார்த்தார், அவருக்கு மறந்துபோய்விட்டது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“மனோரஞ்சிதப்பூ நினைத்த வாசத்தைக்கொடுக்கும்”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“சூரியனுடைய சக்தி வெள்ளத்தை ஏழரை நிமிடங்கள் தடுத்து விடுகிறது. இது இரவு வருவது போன்றதல்ல. எங்களுக்கு இரவு நடந்து கொண்டிருக்கும்போது இந்தப் பூமியின் இன்னொரு பகுதியை சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தாக்கிக் கொண்டிருக்கும். கிரகணத்தின்போதோ, அந்த ஏழரை நிமிடங்கள், சூரியனுடைய உயிரூட்டும் சக்தி பூமியை அடைவதேயில்லை! தடைபட்டு போகிறது. பூமி அந்த சக்தியை நிரந்தரமாக இழந்து விடுகிறது. அது ஈடு செய்யமுடியாத ஒரு நட்டம்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“மனிதனுக்கு எவ்வளவு அழிவுபுத்தி இருக்குதோ அவ்வளவுக்கு யானைகளுக்கு சினேக புத்தியும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுற உணர்வும் இருக்குது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“மேம்பட்ட ரஸனை உணர்வு உள்ளவர்களால் ஒரு சிறு பிழையைக் கூடத் தாங்கமுடியாது; முறிந்துவிடுவார்கள்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஏற்படும் சினேகமானது எப்படியும் செக்ஸ’ல் கொண்டு போய் விட்டு விடும்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“பேதமையை பெண்ணின் லட்சணம் என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஒன்றும் தெரியாமை' (Ignorance) இது லட்சணமா? அது கூட பரவாயில்லை. மடமை (Stupiality) கூட பெண்ணின் லட்சணமாமே; அது அப்படித் தான் என்றால் எங்கள் பெண்களில் அந்த லட்சணம் நிரம்பி வழிகிறதுதான்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“€யா, துணியில்லாமல் இருக்கலாம்; சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாம்; படுக்கப்பாயும், இருக்க வீடும் இல்லாமம் கூட இருக்கலாம்; ஆனால் நாடில்லாமல் இருப்பது போன்ற கொடுமை உலகத்திலேயே கிடையாது. அது மிகக் கொடியது”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“பூமாதேவி மிகவும் நல்லவள். நாங்கள் அவளுக்கு இழைக்கும் ஆக்கினைகள் எல்லாவற்றையும் மறந்து எங்களுக்கு அள்ளி அள்ளித் தருகிறாள். அவளுடைய குணங்களில் மிகச் சிறந்தது இந்த மறதிதான். நாங்கள் திருப்பித் திருப்பி செய்யும் கொடுமைகளை மறந்து ஒரு தாயின் அரவனைப்போடு எங்களுக்கு நன்மையே செய்கிறாள். இப்படிப்பட்ட தாய்க்கு தேவைக்கு மேல் கேடு விளைவிக்கக் கூடாது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“மரத்தை வெட்டிய இடத்தில் இருந்து பால் கசிந்த வண்ணம் இருந்தது. அதை நேற்றுவரை நம்பியிருந்த காக்கைகளும், கிளிகளும், மைனாக்களும், அணில்களும் போகும் திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. கருஞ்சிட்டு ஒன்று இறக்கையை அடித்து அடித்துப் பறந்து எதோ சேதி சொல்லப் பார்த்தது. என்ன நியாயம் இது? இவர்கள் இந்த மரத்தை வைத்தார்களா, வெட்டுவதற்கு. அம்மா சொன்னாளே, மரம் வைத்தவன் வெட்டுவான் என்று.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“இடருற்று அவதிப்படுவது மனிதர்கள் மாத்திரமல்ல; இந்தப் பூலோகத்தில் அழிவின் எல்லையில் பல விலங்கினங்கள், பறவைகள், ஏன் தாவரங்கள் கூட உண்டு. மற்ற உயிரினங்களுக்கு தீங்கிழைப்பது வேறு யாருமில்ல; ஆறறிவு படைத்த மனிதன்தான்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“மரம் மனிதனுடைய மிகச் சிறந்த நண்பன்; கடவுளுக்குச் சமானம். உலகிலேயே உயிர் வாழ்வனவற்றில் எல்லாம் மிகவும் பெரியது மரம்தான்; மிக அதிக காலம் உயிர் வாழ்வதுவும் அதுதான்; ஐயாயிரம் வருடங்கள்கூட சில மரங்கள் உயிர்வாழும். மரம் இல்லாவிட்டால் மனிதனுக்கு உணவு ஏது? மனிதனுடைய உயிர்நாடியே மரம்தான். பெய்யும் மழைகூட மரம் கொடுத்த வரம்தானே! ஒரு மரத்தை வெட்டும்போது மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். மரம் போனால் அவனும் போய்விடுவான்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“உணவைப் பற்றிய ஸ்மரணைதான் எங்களுக்கு எந்த நேரமும். இந்த ஏக்கம்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏக்கம் மிகவும் முக்கியமானது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“வாழ்க்கை என்பது கொதிக்கும் கொப்பரையிலிருந்து, எரி நெருப்புக்குள் வீழ்ந்து கருகுவதல்ல. புதிய நிர்ப்பந்தங்களின் அடிமையாவதல்ல. புதிய சூழலை வசப்படுத்துதல்! புதிய சூழலிலும் நாம் இழக்கத் தயாராக இல்லாத தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டே, புதிய சூழலிலே குதிரும் வாகான புதிய சுருதிகளை இனங்கண்டு, அவற்றைத் தமிழின் அனைத்து உயர்வுகளுக்கும் இசைவாக்கிப் புதிய நம்பிக்கைகளை வென்றெடுத்தல்!”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“காகித விரயத்தில் எனக்கு உவப்பில்லை. ஒரு காகிதத்தை கசக்கி எறியும்போது ஒரு மரத்தின் இலை கண்ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான். இந்தத் தாள்களில் அச்சாகி வரும் கதைகளால் ஒரு வித பயனுமில்லை என்றால் இந்தக் காகிதங்களைத் தருவதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்காக நான் கண்ர் வடிக்கிறேன். ஓ மரங்களே! என்னை மன்னிப்பீர்களாக!”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்