அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?] Quotes

Rate this book
Clear rating
அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?] அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?] by A. Muttulingam
65 ratings, 4.60 average rating, 3 reviews
அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?] Quotes Showing 1-27 of 27
“எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளைகளையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக்கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“அநீதியை எதிர்ப்பது ஆதி மனித இயல்பு. மனித சமுதாயத்தில் வெகுவிரைவில் சமத்துவம் சந்துபொந்தெல்லாம் நிறைந்துவிடும் என்பதில் அவனுக்கு அசையாத நம்பிக்கை.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“வாழ்க்கைப் பயணம் சுவையானது. அதை ஒரு சுரங்கப் பாதையாக மாற்றுவது மனிதன்தான்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“எந்த ஒரு கலையும் அதன் தேடலின் முடிவில் புதிய ஒரு தேடலை ஆரம்பிக்கிறது. தன்னைப் புதுப்பிக்காத கலை அழிந்துவிடுகிறது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஒரு கவியாவது தான் எல்லாவற்றையும் சொல்லியாகிவிட்டது என்று கூறுவதில்லை. எந்த ஒரு கவிக்கும் புதிதாகச் சொல்ல ஏதாவது முளைத்துக்கொண்டே இருக்கிறது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“உருளும் கல்லில் பாசி பிடிப்பதில்லை என்பார். பாசியை வைத்து என்ன செய்வது. கல் உருண்டால்தானே பல இடங்களுக்கும் போகமுடியும்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“இன்னொருவர் கெடும்போது ஏற்படும் திருப்தி, சந்தோசம் மனிதனுக்கு வேறு எதிலுமே கிடைப்பதில்லை.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“சட்டம் என்றால் என்ன. நமக்கு நாம் போடுவதுதானே.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தடயங்கள் எதிரி.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஆறுதல் பரிசு ( consolation prize ) என்று ஒன்று உண்டு. அதைவிட மோசமான பரிசு இந்த உலகத்திலேயே கிடையாது. தோற்றவரை ஆற்றுவதற்காகத் தரும் இந்தப் பரிசு உண்மையிலேயே தோல்வியை நினைவுபடுத்துவதற்காகக் கொடுக்கப்படுவது. இந்தப் பரிசு பெற்றவரை யாரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஜோன் அப்டைக் என்றுதான் நினைக்கிறேன், "நீ உன் புத்தகத்தின் நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொண்டால் அந்த புத்தகத்தின் பாதகமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“மனிதன் ஒரு புதிர். அதை விடுவிக்க வேண்டும் என்பதுதான் செக்கோவின் தேடல்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“மூச்சு விடுவது உயிரினத்தின் அறிகுறி என்பது போல விளம்பரம் செய்வதும் ஒரு நிறுவனம் உயிரோடு இருக்கிறது என்பதின் அடையாளம்”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஆறுதல் பரிசு ( consolation prize ) என்று ஒன்று உண்டு. அதைவிட மோசமான பரிசு இந்த உலகத்திலேயே கிடையாது. தோற்றவரை ஆற்றுவதற்காகத் தரும் இந்தப் பரிசு உண்மையிலேயே தோல்வியை நினைவுபடுத்துவதற்காகக் கொடுக்கப்படுவது. இந்தப் பரிசு பெற்றவரை யாரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை”
A. Muttulingam, அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“எவ்வளவுக்கு ஒரு படைப்பு வாசகனுடைய பங்கீட்டைக் கேட்கிறதோ அவ்வளவுக்கு அந்தப் படைப்பு உயர்ந்து நிற்கிறது. ஓர் உன்னதமான இலக்கியம் உண்மையில் வாசகனாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.”
A. Muttulingam, அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“அவர் பேசிய அத்தனை மணி நேரத்திலும் அவர் "எழுத்தாளருக்குள் இருக்கும் பொறியை அவர் ஊதிக்கொண்டே இருக்கவேண்டும்' என்று சொன்னது என்னை சிந்திக்க வைத்தது. டெலிபோன் புத்தகத்தில் பெயர் வராமல் இருக்க மாதம் இரண்டு டொலர் வாழ்நாள் முழுக்க கட்டுவதுபோல எழுத்தாளரின் கற்பனை பொறி வற்றிவிடாமல் இருக்கவும் கடுமையாக உழைக்க வேண்டும் - வாழ்நாள் முழுக்க.”
A. Muttulingam, அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“வாழ்க்கை வேறு; பணம் வேறு. பணத்தைச் சேர்த்துவிட்டால் மாத்திரம் வாழ்க் கையை அனுபவித்ததாக சொல்லிவிடமுடியாது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“பணம் பணம்' என்று ஓடும்போது சிலர் வாழ்க்கையை தவற விட்டு விடுகிறார்கள்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“தான தருமங்கள் செய்வதிலும், அறக்கட்டளைகளுக்கு எழுதி வைப்பதிலும் அமெரிக்கர்களை மிஞ்ச முடியாது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஓர் அளவுக்கு மேல் பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? வயிற்றின் அளவுக்கு மேல் உண்ண முடியுமா? அல்லது இரண்டு படுக்கைகளில் ஒரே சமயத்தில் உறங்க முடியுமா?”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“இந்தப் பூமிக்கு உயிர் தரும் பிராண வாயுவை சமன் செய்வது, மழையைக் கொடுப்பது, மற்ற உயிரினம் வாழ மூலகாரணமாக இருப்பது, எல்லாம் மரமே. இருந்தாலும் அவற்றை அழிப்பதில் மனிதனுக்கு இருக்கும் உற்சாகம் சொல்லமுடியாது. பின்வரும் சந்ததியினருக்கு பூமிக்கிரகத்தை அப்பழுக்கில்லாமல் விட்டு வைத்துவிடுவோமோ என்று பயப்படுவதுபோல ஒரு அவசரத்தோடு இந்த வேலைகள் மனிதனின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“மொழிபெயர்ப்பில் எப்படி ஒரு பகுதியை இழந்து விடுகிறோமோ அதேபோல வாழ்க்கையிலும் ஒரு பகுதியை நாம் இழந்து விடுகிறோம். அது முழுமை பெறுவதே இல்லை; அதைத் தேடி ஓடுவதுதான் விதிக்கப்பட்டது”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் காவல் காக்க வேண்டுமென்றால் அதற்கு மனிதன் நிச்சயமாக தகுதியானவன் அல்ல. ஆனால் இயற்கை மனிதனைத்தான் தேர்வு செய்திருக்கிறது. மனிதன்தான் இருக்கும் உயிரினங்களில் எல்லாம் உயர்வானவன். இவனே கேவலமானவனும். இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களை தரிக்கும் கிரகம் ஒன்றே ஒன்றுதான். பூமிக் கிரகம். 'ஒரே ஒரு கிரகம். ஒரே ஒரு பரிசோதனை' என்றார் ஒரு ஞானி. மனிதன் ஒருவனால் மட்டுமே அழிக்கமுடியும். அவனால் மட்டுமே காக்கவும் முடியும். மனிதன் எதனைத் தேர்ந்தெடுப்பான் என்பது இனிமேல்தான் தெரியவரும்.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“எப்படி என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்றில்லை.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“பல வருடங்கள் அங்கே பிரிட்டிஷ் ஆட்சி நடந்தாலும் அதன் அறிகுறியைக் காணமுடியாது. சூடானியர்கள் பேசுவது அரபு மொழி. அவர்கள் பேசும் போதோ, எழுதும்போதோ மருந்துக்குகூட ஓர் ஆங்கில வார்த்தையை சேர்க்கமாட்டார்கள். அவர்களுடைய இன்னொரு குணாம்சம் விருந் தோம்பல். விருந்தாளிகளை உள்ளன்போடு உபசரிப்பதில் அவர்களுக்கு இணை யாருமில்லை.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஒரு கலைஞனாக நீ உனக்கு என்ன தேவை என்பதை அடிக்கடி சொல்லிப் பார்க்கவேண்டும். உனக்கு என்ன வேண்டும்? புகழா, செல்வமா அல்லது வெற்றியா?”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“உன்னுடைய மேலங்கியை கொளுவி வைக்க ஒரு கொளுக்கி எங்கோ இருக்கிறது. அதை கண்டு பிடிக்கும்வரை உன் மேலங்கியை கழற்றாதே”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]