Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following T. Dharmaraj.

T. Dharmaraj T. Dharmaraj > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-4 of 4
“சாதியமைப்பு என்பது நெகிழ்வுத்தன்மையற்ற, எந்தவகையான மாற்றங்களையும் அனுமதிக்காத கட்டமைப்பு என்று பலரும் நம்பியிருந்த வேளையில், அதனுள் வரையறுக்கப்பட்ட, அதாவது பிராமணரல்லாத சாதித் தொகுதியினுள், படி நிலை நகர்வுகள் சாத்தியம் என்பதை அறிவுறுத்திய ஸ்ரீனிவாஸ், தாழ்ந்த சாதிகள் பிராமணர்களைத் தான் போலி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை, அவை தமக்கு மேலிருக்கக்கூடிய எந்தவொரு சாதியையும் கூட பிரதி செய்து, சாதியடுக்கில் தங்களது நிலையை உயர்த்திக்கொள்ளும் ஆவலை வெளிப்படுத்த முடியும் என்ற யோசனையில், ‘பிராமணமயமாதல்’ என்ற பெயரை இன்னும் பொதுமைப்படுத்தி, அத்தகைய போலச் செய்யும் நிகழ்விற்கு ‘சமஸ்கிருதவயமாதல்’ என்று பெயரிட்டு அழைத்தார்.”
T.Dharmaraj, நான் ஏன் தலித்தும் அல்ல? [Naan Yaen Dalithum Alla]
“போலச்செய்தலின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக, தெருக்கூத்தின் கட்டியக்காரனையும், ராஜா ராணி ஆட்டத்தின் பபூனையும், தோற்பாவைக்கூத்தின் உச்சிக்குடுமி - உளுவத்தலையன் கதாபாத்திரங்களையும் குறிப்பிடவேண்டும். அதிகாரம் ததும்பும் கதாபாத்திரங்களை, யதார்த்தத்தில் கேட்க முடியாத அத்தனைக் கேள்விகளையும் நகைச்சுவை என்ற பெயரில், புனைவு தருகிற சௌகரியத்தில் கேட்டு விடுகிற இக்கதாபாத்திரங்கள், தற்காலிகத் தலைகீழாக்கங்களை உருவாக்கி விட்டு, மறுகணமே தங்களையும் தங்களது கேள்விகளையும் ‘கோமாளித்தனங்களாக’ மாற்றிக் கொள்வதை ‘போலச்செய்தலின்’ அடிப்படை குணங்கள் என்று சொல்ல முடியும். இவ்வாறு உருவாக்கப்படுகிற கண நேர தலைகீழாக்கத்தின் மற்றுமொரு பரவச வடிவம் சர்க்கஸ் கோமாளிகள் - ஏறக்குறைய எல்லா வித்தைகளையும் அறிந்திருக்கிற இக்கோமாளிகள் பார் விளையாடும் வீரர்களைப் போலச்செய்து, அற்புதமாய் விளையாடி, பின்பு தலைகுப்புற கீழேவிழுந்து சிரிக்க வைக்கும் காட்சி, போலச்செய்தலின் உட்சபட்சம்.”
T.Dharmaraj, நான் ஏன் தலித்தும் அல்ல? [Naan Yaen Dalithum Alla]
“தலித் சொல்லாடல், எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோ அவ்வளவுக்கு வெறுக்கக்கூடியதும். அந்த வகையில், தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும் பெரிய வித்தியாசமில்லை; இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன; அதே போல, ‘போராட்டம்’ முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் ‘உள்ளே’ சுருங்கிக் கொள்ள வேண்டியதுதான் - இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன!”
T.Dharmaraj, நான் ஏன் தலித்தும் அல்ல? [Naan Yaen Dalithum Alla]
“ஆனால், ஒடுக்கப்பட்டவர்களின் பேச்சு இந்தக் குறியீட்டு நிகழ்வு இல்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 'குவளையில் போடப்பட்ட பூ' பண்பாட்டின் ஆவேசக் கூச்சல். தனது கூச்சலின் அசிங்கம் வெளியே தெரியாமலிருக்க அந்நிகழ்விற்குக் குறியீட்டு முலாம் பூசிப் புனிதப்படுத்தியிருக்கிறது.”
T. Dharmaraj, தமிழ் நாட்டுப்புறவியல் [Thamizh Naattupuraviyal]

All Quotes | Add A Quote