,
Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Sujatha.

Sujatha Sujatha > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 34
“உவமைகள் அவளை வர்ணிக்க ஓவர்டைம் வாங்க வேண்டும்”
Sujatha, கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]
“Love is nature's way of ensuring pregnancy”
Sujatha(சுஜாதா), பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]
“தமிழ் ஈழ விடுதலைக்கு மெட்ராஸ்காரங்க உதவிக்கு எதிர்பார்க்கிறாங்க! ராஜேந்திர சோழன் மறுபடி பிறந்தாத்தான் உண்டு.”
சுஜாதா, கொலை அரங்கம் [Kolai Arangam]
“புக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.”
சுஜாதா [Sujatha]
“ஒருத்தன் வேதனை மற்றவன் சுகமாகிறது.”
சுஜாதா, சிவந்த கைகள்
“அறியாமை தான் பயம்!”
சுஜாதா [Sujatha], கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]
“பயம்தான் பாதித் தோல்விக்குக் காரணம்”
சுஜாதா [Sujatha]
“வலிக்க வலிக்க உண்மை பேசுகிறாள்!”
சுஜாதா, பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhipom]
tags: women
“ஏன்டா இந்தியை வெச்சுக்கிட்டு உயிரை வாங்கறீங்க”
சுஜாதா [Sujatha], மீண்டும் ஒரு குற்றம் [Meendum oru kutram]
“உங்கள் உடலின் முக்கியப் பணி, உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது!”
சுஜாதா, Thalaimai Cheyalagam
“ஆறு மாதம்: முகங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல். ஒரு வயசு: முதல் வார்த்தைகள், பொருட்களைக் கையாளும் திறமை. இரண்டரை வயசில்: பேசுவதைவிட அதிகமான வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். தான் என்பது வந்து, தான் ஆணா... பெண்ணா என்பது தெரியும். மூன்று வயசு: தனக்கு எத்தனை வயசு என்பது தெரியும். ‘பெரிய - சிறிய’ புரியும். நான்கு வயசு: பல வார்த்தை வாக்கியங்கள், நேற்று - இன்று - நாளை, புரியும். நாலிலிருந்து ஏழு: புத்திசாலித்தனத்தின் ஆரம்ப அறிகுறிகள். ஆறு வயசு: முதல் எழுத்துகள், முப்பது வரை எண்ணிக்கை நெட்டுருப் போடும் திறமை. "மாமாவுக்குத் திருக்குறள் சொல்லிக் காட்டு..." "மாத்தேன் போ..." பத்து வயசு: மனக்கணக்குத் திறமை. பதினோரு வயசில்: பகுத்தறியும் திறமை. பன்னிரண்டில்: - ‘பிளேட்டோவா! படிச்சிருக்கேனே. அதுல என்னன்னா சில இடங்களில் லாஜிக்கலாவே இல்லை!”
சுஜாதா, Thalaimai Cheyalagam
“பார்வையாளனின் நோக்கில் உன்னிப்பாகப் பார்த்து”
Sujatha, KATRATHUM PETRATHUM (VOLUME-I)
“வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி”
Sujatha Rangarajan, சுஜாதா சிறுகதைகள்
“நட-ஓடாதே!’ என்கிற வென்ச்சர்ஸ் கிதார் வாத்ய கோஷ்டியின் இசைத் தட்டு அது.”
Sujatha, நைலான் கயிறு / Nylon kariu
“அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!”
சுஜாதா, Thalaimai Cheyalagam
“இந்த இடத்தில் முலை என்ற வார்த்தை பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஆழ்வார் பாடல்களில் சரளமாகப் பழகுவது இந்தக் காலத்தில் சற்று விகற்பமாகப்படும். ஆழ்வார் பாடல்களில், ஏன், சங்கப்பாடல்களில்கூடப் பயன்படும்போது அவற்றை அந்தக் காலகட்டத்தின் கோணத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். அந்தக் காலத்தில் இந்தச் சொல்லுக்கு விரசமற்ற அர்த்தம் இருந்திருக்கிறது. கை, கால் போல மற்றொரு உடலுறுப்பாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அதை மூடி மறைத்து, அதைப் பற்றி அதிகம் வெட்கப்படுவதெல்லாம் பிற்கால வழக்குகள். முலை போல, கொங்கை என்று சொல்லும் ஆழ்வார் பாடல்களில் வரும். ‘கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா’ என்ற ஆண்டாளின் வரிகளை ஆபாசமான வரிகள் என்று சொல்வது தவறானது. வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் காலத்துக்கேற்ப மாறுவது எல்லா மொழிகளிலும் உண்டு. உதாரணமாக, ‘நாற்றம்’ என்பது புறநானூற்றுக் காலத்தில் மணம் என்றுதான் அர்த்தம் கொண்டிருந்தது. வாசனை அறியும் புலனறிவுக்குப் பயன்பட்டது. இப்போது துர்நாற்றத்துக்கு மட்டும் அது பயன்படுகிறது. அதுபோலத்தான் கொங்கை என்ற சொல் அந்த நாட்களில் மற்றொரு உறுப்பாகத்தான் பழகி வந்தது. இதை ஆபாசமானது என்று சொல்வது கால வழு. அனக்ரானிசம்.”
Sujatha, ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
“கோவிந்து ரொம்ப நேரம் மௌனமாக இருந்துவிட்டு போஸ்ட் ஆபீஸ் திறந்ததும் ஒரு கார்டு வாங்கி வந்து, ரங்கு கடையில் உட்கார்ந்து, தொடை மேல் வைத்துக்கொண்டு தினம் கடவுளுக்குக் கடிதம் எழுதுவான். அதுவும் இங்கிலீஷில். அட்ரஸ் - ‘காட். கேர் ஆஃப் வைகுண்டா, ஹெவன்’ என்று எழுதி ‘டியர் காட்’ என்று ஆரம்பித்து மூன்று நான்கு ஆணித்தரமான கேள்விகள் கேட்டிருப்பான். (உதாரணம்) ‘ஏன் இந்த உலகத்தைப் படைத்தாய்; முனிசிபாலிட்டி விளக்கு ஏன் எரியமாட்டேன் என்கிறது? சோனிக்கு எப்போது பேச்சு வரும்?’ கோவிந்து கடிதம் எழுதும் போது ஃபரம் அட்ரஸ் எழுதமாட்டான். அதனால் அவன் தினந்தோறும் எழுதும் கடிதங்கள் எங்கே போய்ச்சேருகின்றன என்று எங்களுக்குத் தகவல் இல்லை. ஒருமுறை சுய அட்ரஸ் எழுதிவிட்டதால், அந்தக் கடிதம் ஶ்ரீ வைகுண்டம் போய், அங்கே ‘அட்ரஸ் ஸ் நாட் ட்ரேஸபிள், ட்ரை ஶ்ரீநகர்’ என்று ஶ்ரீநகர் போய்விட்டு, நாயடிபட்டு மூஞ்சி முழுவதும் முத்திரையாக அவனுக்கே திரும்பி வந்தது. கோவிந்து அதைப் பார்த்து, ஒரே ஒரு தடவை ‘பார்த்தியா? நான் சொன்னேன் பாத்தியா?” என்றான்.”
Sujatha, ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]
“சிக்னல் விளக்கு அடிக்கடி மனம் மாறியது.”
Sujatha, ரயில் புன்னகை [Rayil Punnagai]
“உளன் கண்டாய் நல்நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (2180) பகவான் என்றும் உள்ளவன். அவனை நினைத்துப் பார்த்தால் போதும். பாற்கடலுக்கோ வேங்கடத்துக்கோ போக வேண்டியதில்லை. உன் உள்ளத்திலேயே கோவில் கொண்டிருக்கிறான் என்று நெஞ்சே அறிந்துகொள்.”
Sujatha, ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
“If you can't cure if endure it!”
Sujatha, மத்யமர் [Mathyamar]
“கவனிப்பது என்பது உடல் நிலையையும் மன நிலையையும் பொறுத்தது.”
Sujatha, ரயில் புன்னகை [Rayil Punnagai]
“அதிகாரத்துடன்.”
Sujatha, ரயில் புன்னகை [Rayil Punnagai]
“அவனை மயக்கமுறச் செய்த பொருள் அவனை அறியாமல் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.”
Sujatha, மீண்டும் ஒரு குற்றம் / Meendum Oru Kutram
“எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம்,”
Sujatha, ரயில் புன்னகை [Rayil Punnagai]
“அய்யங்கார்களில் இரண்டு பிரிவு உண்டு. வடகலை, தென்கலை. அடைய வளைஞ்சான் பெரியார் கட்சிக்காரர்கள் ‘எச்சக்கலை’ என்று மூன்றாவதையும் சேர்த்துக்கொள்வார்கள். அய்யங்கார் என்பதே ஒருவிதமாகச் சிறுபான்மைதான். தமிழ்நாட்டில் எத்தனை அய்யங்கார்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. டி.வி.எஸ்., இந்து குடும்பங்களின் அமைப்புகளான தனியார் துறைகளில் சில நாமங்களைப் பார்க்க முடியும். மற்றபடி அய்யங்கார்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வெளியே சிதறியிருக்கிறார்கள்.”
சுஜாதா / Sujatha, ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangaththu Devadhaigal]
“குருவின் நினைவு முழுவதும் தப்புவதற்குமுன் குரு குரு என்று கூப்பிட்டது கொஞ்சம் கேட்டது. பதில் சொல்லவேண்டும் போலிருந்தது”
Sujatha, Guruprasadin Kadaisi Dinam
“ராஸ்க்கால்நிக்காவ் ஸிண்ட்ரோம்.”
Sujatha, மேலும் ஒரு குற்றம் [Maelum Oru Kuttram]
“அப்பா, எல்டொராடோவைப் பத்தி சொல்வியே, ஞாபகம் இருக்கா? அதைத் தேடிண்டுதான் நான் போனேம்பா. கற்பனைத் தங்கம்னு தெரியாம தூரத்திலேயே பளிச்சுக் காட்டிட்டிருந்ததை நோக்கி ஓடினேன்ப்பா!”
“நானும்தான் அதையே தேடினேன்” என்றார்.
“அப்பா! உன்னை முதல்ல சரசுவோட பார்த்தப்ப எனக்கு அப்படியே சகலமும் ஸ்தம்பிச்சுப்போச்சு. ரொம்பநாள் கழிச்சுத்தான் எனக்கு ஏன்னு புரிஞ்சுது. ஆனா அதைப்பத்தி நான் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தை பேசலியே. இன்னிவரைக்கும் சொன்னதில்லையே. அந்த சம்பவத்துக்கப்புறம் உனக்கும் எனக்கும் ஒரு பிளவு வந்துடுத்து. அன்னியோன்யம் வெட்டுப்பட்டுடுத்து. நீ என்னைப் பார்த்து, நான் உன்னைப் பார்த்து பயப்பட ஆரம்பிச்சோம். என் மனசுல உன்னைப்பத்தி இருந்த இமேஜ் கலைஞ்சுபோயி நாம இரண்டுபேரும் அப்பவே பிரிய ஆரம்பிச்சிட்டோம். அதுக்கப்புறம் எத்தனையோ நடந்துபோயி நான் விலகிப்போயி, ஊர் ஊரா அலைஞ்சு உறவு விட்டுப்போயி, கல்யாணம் பண்ணிண்டு, பெண்டாட்டியைப் பிரிஞ்சு.. வேண்டாம்ப்பா.. அதையெல்லாம் அழிச்சுடலாம்பா.. சரசு வரைக்கும் விரசமில்லாம இருக்கு… அதோட போதும். அதுக்கப்புறம் எல்லாத்தையும்..”
அப்பா தலையை ஆட்டினார். “அதுவும் இருக்கட்டும்” என்றார்.”
Sujatha, தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி) [Therntheduththa Sirukathaigal Part 1]
“செக்ஷன் 85 என்ன சொல்லுது? ஒருவன் குடித்திருக்கும்போது, தான் செய்யும் காரியத்தின் இயற்கையை அறியாத நிலையில் செய்த குற்றம் குற்றமல்ல.”
Sujatha, மீண்டும் ஒரு குற்றம் / Meendum Oru Kutram

« previous 1
All Quotes | Add A Quote