Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following C.N. Annadurai.
Showing 1-30 of 74
“அரக்கர் செய்தது மட்டும் என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக் கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர் என்றும் கூற முடியாதே. அவர்களில் பலர் தவம் செய்தனர். இராவணனே, பெரிய தவசி! அரக்கர் தலைவர்களெல்லாம் தவம் பல செய்து, வரம் பல பெற்றவர்கள்”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“ஒரு நாள் சிக்கின சூர்ப்பனகை, எந்த நாளும் எலர் முன்பும் வரமுடியாத நிலையைப் பெற்றாள். என் கைதியாகப் பலநாள் இருந்த சீதை, செனந்தர்யவேதிபாய், சகல செளபாக்கியங்களையும். அயோத்திப்பிலே பிறகு அனுபவித்தாள். ஆனால் தான் அரக்கன்...”
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
“ஆவுமழுதவ கன்றழுதவன் றலர்ந்த பூவுமழுத புனற்புள்ளழுத கள்ளொழுகுங் காவுமழுத களிறழுத கால்வயப்போர் மாவுமழுதன வம்மன்னவனை மானவே'' என்றும் பாடியிருக்கிறேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“கம்: விந்தையல்ல முனிபுங்கவரே! விளக்க உரை தந்தேன். சீதையின் சிறப்பியல்புகளைத் தமிழ்ப் பண்போடு இணைந்துரைத்தேன். இராமனின் பராக்கிரமத்தைப் பாரெல்லாம் புகழ, பண் அமைத்துப் பாடினேன். இராவணனின் வீரம், வலிமை, தவம் அனைத்தும் அகிலமெல்லாம் அறியச் செய்தேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“ஆளுகையில் இருந்த தண்டகாரண்யத்திலே, தவசி வேடத்தில் புகுந்து என் தடை உத்தரவை மீறினவர்களை, யாக காரியங்கள் செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச்”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“தண்டிப்பது, தேவப் பிரீதியான காரியம். நியாயம்; தர்மம்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“போலிகளின் சரக்கு, ஏமாளிகளுக்குத் தானே விற்கப்படும்!”
― அப்பாவிகளே!
― அப்பாவிகளே!
“என் பரம்பரைப் பண்புக்கும் பர்ணசாலைப் பண்புக்கும் வித்தியாசம் உண்டு.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரக்கம் இருந்ததா? துளி பெண்கள் அழுதபோது பால் வடியும் முகமுடைய சிக கதறியபோது? - இருந்ததா - இரக்கம் காட்டப்பட்டதா கோட்புலியாரே, இரக்கம் காட்டினிரார் இரக்கமற்றுப் படுகொலை செய்தவர் நாயனார் - அடியார் - கொலைக் கஞ்சாக் கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர் - தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசுராமன் - பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றி கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் - இவர்களெல்லாம் தவசிகள் - ரிஷிரேஷ்டர்கள் - பரமன் அருளைப் பெற்றவர்கள் – நீதிதேவா! நான் அரக்கன் - இவர்கள் யார்!”
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
“கிள்ளையொடு பூவையழுத கிளமர்மாடத் துள்ளுறையும் பூசையழுத வுருவறியாப் பிள்ளையழுத பெரியோரை யென்சொல்ல வள்ளல் வனம்புகுவா னென்றுரைத்த மாற்றத்தால்'',”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“சட்டத்தின் மூலமாகவோ, கட்டளையின் மூலமாகவோ குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலமாகவோ ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியாது. ஒற்றுமை என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். நமது எண்ணங்கள் ஒன்றிணைந்திட செயல்படவேண்டும். வெறும் உதட்டளவு பேச்சினால் ஒற்றுமை வந்துவிடாது.”
― அண்ணா நானூறு: Anna 400 (Perarignar Anna's Writings and Speeches Book 4)
― அண்ணா நானூறு: Anna 400 (Perarignar Anna's Writings and Speeches Book 4)
“உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில், அவ்ன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குலமுறைக்குத் தனது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய ராமன், ஆரிய் பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அறரியத் தவசியைக் கொன்றான். அவன் அது என் உரிமை என்றான். வின் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?”
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
“காங்கிரசாரிடம் ஊழலும், இலஞ்ச இலாவண்யமும் மிக அதிகமாகப் பரவிவிட்டது. பதவி வேட்டை உத்யோக வேட்டை அரசியல் செல்வாக்கை உபயோகித்து, வியாபார வசதிகள் பெறுவது, அதிகாரிகளை மிரட்டி சுயநலக் காரியத்தில் ஈடுபடுவது ஆகிய கெட்ட குணம் குடிகொண்டுவிட்டது.”
― நாம் யாருக்கு எதிரி
― நாம் யாருக்கு எதிரி
“ஆரியர் தவம் புரியலாம். அநாரியனான றாக் புரிதல் தகாது, தலையை வெட்டுவேன் என்கிறாய்- இலங்கையான் செய்தால் பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச் செய்யும்போது அதற்குப் பெயர் ராஜ தருமம்! இராமா! எனக்கு”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“கடமை தவம், தொழில் வாழ்க்கைச் சிக்கல் முதலிய பல கொள்ளவேண்டியது போது, இரக்கம் காட்ட முடிவதில்லை, முடியாது, கூடாது- இதற்கு ஆதாரங்கள் ஏராளம்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“வால்: வினாசகாலே விபரீதபுத்தி கம்பருக்கு ஏன் இந்த வம்பு. மூலத்தைத் திருத்திக் கூறிப் புகார் மனு கொடுத்தால், விசாரணையின்போது இராவணன் அழிந்து படுவான் என்று எண்ணினார் போலும்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால் அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தான்..”
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
“ஏழைக்கு வரி மேல் வரி போடப்படுகிறது- அவன் வாழ்வும் வளைந்தே போகிறது. பணக் காரர் மீது ஏற்ற வேண்டிய பாரத்தை ஏழையின் மீது போடுவது அக்ரமம் அநீதி. ஆனால், பாழும் வெள்ளையனுக்கு, நிதியைப் பற்றி என்ன கவலை- ஏழையின் அழுகுரல் எங்கே அவன் செவியில் விழப் போகிறது அவன் செவியிலே சீமான்களின் சிரிப்பும், பதவி வேட்டைக்காரர் களின் பசப்பும்தானே ஏறுகிறது! ஏழையின் வாழ்வைக் கெடுக்கும் வெள்ளையராட்சி ஒழிந்து நம்ம சர்க்கார் ஏற்பட்டால், வரிப் பளவு ஏழையின் மீதா இருக்கும்! கொள்ளை அடிப்போருக்கு இடம் இருக்குமா?”
― நாம் யாருக்கு எதிரி
― நாம் யாருக்கு எதிரி
“நீதி : முனியுங்கவரே! என் மீது என்ன தவறு? பரசுராமர், தன் தாயின் தலையை லெட்டியது. ஜமதக்னி கட்டளையால், இலங்கேசன், பரசுராமருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டினான். என் மீது மாசு இல்லையே!”
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
“சாதிப் பின்னொட்டு ஒழிப்புத் தீர்மானம் சேலம் 1944 திராவிடர் கழக மாநாட்டில் அண்ணா முன்மொழிய நிறைவேற்றப்படுகிறது.”
― அண்ணா நானூறு: Anna 400 (Perarignar Anna's Writings and Speeches Book 4)
― அண்ணா நானூறு: Anna 400 (Perarignar Anna's Writings and Speeches Book 4)
“தாங்கள் கூறினாலும் சரியே! இரக்கம் என்றால் என்ன? இலட்சணம் கூற முடியுமா? இன்ன விதமான நிலைமைக்குத்தான் இரக்கம் என்று பெயர் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா?”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“பழம், பால், மது. மாமிசம், மலர் - எதனையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி’ என்று தெரிவித்தார்கள். ‘சரி, புத்தி கூறு: மிரட்டு; கொன்று டோடுவேன் என்று சொல் பிடிவாதம் கூடாது என்று தெரிவி; தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி, ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று ‘சொல்’ என்றுதான்.”
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
“இரா: (கைகேயியைப் பார்த்து) ஏண்ம்மா கைகேயி! இராமன் காடு போகிறான் என்பதைக் கேட்டு பூனையும், யானையும், குதிரையும், குழந்தையும், பூவும், காவும், கினியும், நாகணவாய்ப் பட்சியும் மனம் உருகி அழதனவாமே! அந்த நேரத்திலும் தங்கள் மனம் இனகவில்லையோ?”
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
― நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
“நீதிதேவனும் ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட ஏதோ ஓர் கட்டுத் திட்டத்துக்கு உட்பட்டே, வேலை செய்பவர். அவரிடம் உள்ள துலாக்கோல் அவர் செய்தது அல்ல! படிக்கற்கள் அவருக்குத் தரப்பட்டவை! இவைகளின் துணை கொண்ட நீதிதேவன், நிறை பார்க்கிறார். நான், அவருடைய நிறை பார்க்கும் குணத்தைச் சந்தேகிக்க வில்லை. அந்தத் துலாக்கோலையே சந்தேகிக்கிறேன். படிக்கற்களையே சந்தேகிக்கிறேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“அரசிளங்குமரி சீதையை அசோக வனத்தில் சிறை வைத்தேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“நீதி: வணங்காமுடியான் என்றோர் பெயர் உமக்குண்டா? கம்: "பெயர்' என்று கூறுவதைவிட, "வசைமொழி' என்பது பொருத்தும். இரா: பொருத்தம் பார்ப்பதனால், வணங்காமுடியான் என்று ஓர் பழிச்சொல்”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, சுபாகு, மாரீசன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின் பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள். ஆகவே, தண்டித்தார் என்று கம்பர், பல்லவி பாடுவார். ஆகவே, அவர்களை விட்டுவிடும். கூப்பிடும் கைகேயி அம்மையை.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்திலும் நல்லெண்ணத்தை விதைத்தாலும் அது நல்ல விளைவைத் தராது.”
― ஏ, தாழ்ந்த தமிழகமே! மற்றும் நிலையும் நினைப்பும்: சொற்பொழிவுகள்
― ஏ, தாழ்ந்த தமிழகமே! மற்றும் நிலையும் நினைப்பும்: சொற்பொழிவுகள்
“பிரபல ரஷிய தத்துவ நூலாசிரியர் டாக்டர் சர்ஜ் சாகோடின் ``பொதுஜனச் சீரழிவு'' என்னும் தமது நூலில்.”
― நாம் யாருக்கு எதிரி
― நாம் யாருக்கு எதிரி
“தவம்தான்! ஆனால் நீ செய்வது, தகாது- என் கோபம் தவத்தின்மீது அல்ல- அந்தக் குணம் அரக்கனுக்கு! அவரவர், தத்தம், குலத்துக்கேற்ப நடக்க வேண்டும் என்ற தருமத்தைக் காப்பாற்றவே, நான் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது. அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்லேன் நான்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)

![நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam] நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1495345971l/35180764._SX98_.jpg)