தேவதேவன்'s Blog

November 30, 2025

கண்களை விழித்து...

தன் கண்கள் எத்துணை அழகு என்பதை
தன்னுணர்ந்த அழகியா அவர்?

கண்களை விரித்து
கடைக்கண்ணால் பார்த்தது எதை?
பார்க்கச் சொல்லியது எதனை?
காண முடியாத கருவி ஒன்றை
கண்டுகொண்ட அருட்செயலா?

கடவுளே, அது உம்மையும்
உம்முள் நிறைந்த தன்னையுமே
என அறியாத பேதமையா அவருடையது?
மன்னியுங்கள் ஆண்டவரே!

அழகு எவ்விதமானாலும்
அது நீரே அல்லவா?
குழந்தைகளின் எந்த விளையாட்டுகளானாலும்
அதற்கு மிக அண்மையில்தானே நீர் இருக்கிறீர்?
அந்த விழிகளின் அழகையும்தான்
நாம் பார்க்கிறோமில்லையா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 11:30

November 25, 2025

நமது அறவுணர்வை மீட்டுக்கொண்டோமா?

நம் அறவுணர்வை மீட்டுக்கொள்ள
நமது கணக்கறிவும் அறிவியல் தொழில்நுட்பமும்
போதாதா என்ன?

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்
பிறக்கப் பிறக்க ஒவ்வோரு குழந்தைக்கும்தான் -
ஒரு எண் இட்டு அவர்களை ஒரு தாய் போல்
பேணிக்கொள்ள முடியாதா,
அவர்கள் சாகும்வரை?

இந்த எண்ணைப் பாருங்கள்
எந்த எண்களையும் பாருங்கள்
ஒரு எண்ணோடு ஒரு எண் நெருங்கி
செயல்வளர்ச்சி நோக்கில் போகும் நோக்கமன்றி
இணக்கமற்ற உணர்ச்சிகள் ஏதாவது கொண்டிருக்கிறதா
பாருங்கள்!
333333 – இந்த எண்கள்தாம் ஒற்றுமையாய்
இருக்கின்றனவா?
3685907214 – இந்த எண்கள்?
எந்த எண்களானாலுமே
எப்படி இணங்கி வாழ்கின்றன, பாருங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2025 11:30

November 23, 2025

நாம் வந்துவிட்டோமா அந்த உலகிற்கு?

ஒரு வயதிற்குள்ளேயே
பேயறைபட்ட முகங்களாகிவிட்ட
குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும்
அச்சம் கொண்ட பெண் விழிகளை
மான் விழிகள் எனவும் –
கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கும்
நம் அழகியல்பற்றி
நாம் யோசித்திருக்கிறோமா?

இரண்டுபட்டுக் கிடக்கும்
எல்லாவற்றாலும்
பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும்
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவே
தராசுமுள் நுனிக்கூடா மய்யத்தின் –
பூஜ்யத்தின் –
பேருலகினின்றும் பிறக்கும் செயல்கள்
தானில்லாமல் தானாகவே
அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றனவா
இவ்வுலகில்,
இயற்கையான ஒத்துழைப்பு எனும்
சின்னஞ்சிறு முயற்சிகளை மட்டுமே பற்றிக்கொண்டு?

எல்லாத் தடைகளையும்
வீணாற்றல்களாகும் குப்பைகளையும்
கண்டு தாண்டி
நாம் வந்துவிட்டோமா, இந்த உலகிற்கு?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2025 11:30

November 20, 2025

கோயில் நகர்

நகர் நுழை வாயிலிலிருந்தது
கொட்டை எழுத்தில்
கோயில்நகர் என்ற அறிவிப்புப் பலகை!

சடாரென்று ‘கோயில்நகர்’ என்று
கூச்சலிட்டார் சுநேகா,
நகரமே திரும்பிப் பார்க்கும்படி!

ரொம்ப நன்றி என்றது பலகை
உன்னைப்போல
களங்கமின்மையும், களிப்பும்
எழுச்சியுமிக்க மனிதர்களை
இப்போதெல்லாம் எங்கே பார்க்கமுடிகிறது?
ரொம்ப மகிழ்ச்சியம்மா
உன்னைக் கண்டதிலும் வரவேற்பதிலும்
என் வாழ்வே நிறைவடைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது!

கோயில் இருந்தென்ன
பக்தி இருந்தென்ன
பழம்பெருமைகள் இருந்தென்ன
வாழ்வை மனிதன் இழந்துவிட்டால்
என்ன இருந்து என்ன பயன்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2025 11:30

November 18, 2025

மெய்வழிச்சாலை

நாம் இதுகாறும்
கட்டியிருந்த வீடு
பாதைகளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லைதானே?

வீட்டுக்கு இணையான தொகையுடன்
வாங்கிய கார்
பாதையைப் பற்றிக் கவலைப்படுகிறது!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2025 11:30

November 16, 2025

நான்கு சக்கரங்கள்

நான்கு சக்கரங்களும்
நான்கு திசைகளைத் தேராமல்
ஒரே திசைநோக்கியே ஓடுகின்றன

நான்கு திசைகளுக்கும்
போகவேண்டுமெனினும்
ஒன்றுபோல் கூடியே
ஒரே திசைவழியேதான்
நான்கு திசைகளையும்
பார்த்து வருகின்றன

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2025 11:30

November 13, 2025

நீண்ட மவுனத்திற்குப் பிறகு...

நீண்ட மவுனத்திற்குப் பிறகு
சுநேகா பேச ஆரம்பிக்கும்போதெல்லாம்
மழலையுடன்
பேச்சைத் துவங்குகிறார்

ஏன்?

அப்படியெல்லாம் கேட்கமுடியாது
அது அப்படித்தான்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2025 11:30

November 12, 2025

November 11, 2025

மெய்ச்செயல்கள் பிறக்கும் ...

மெய்ச்செயல்கள் பிறக்கும்
புதையலையும் அதன் இடத்தையும்
அவன் அவர்களுக்கு -
கூச்சலிலும் குழப்பங்களிலும்
புலம்பல்களிலும் மாட்டிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு எப்படிக் காட்டப்போகிறான் ?

வாய்திறந்தால்
முத்து உதிர்ந்துவிடும் என்றா
பேசாமல் நிற்கிறாய்?
(அது அப்படித்தான்
இயேசுகூட சொல்லியிருக்கிறாரே
பன்றிகள்முன் முத்துக்களை எறியாதே என்று!)

தலையில் குடம்
விழுந்துவிடும் என்றா
நிறைபானம் அலம்பிச்
சிந்திவிடும் என்றா
இப்படி ஆகிவிட்டாய்?
(உன்னால் கண்டுபிடிக்க
இயலவில்லையா அன்பா?)

நீ கல்யாணம் செய்திருக்கக்கூடாது
எங்காவது சாமியாராகப் போயிருக்கலாம்தானே?
(எல்லோரும் சாமியாராகாதவரை
மீட்சி இல்லை அன்பா! மேலும்
பிரச்னைகள் திருமணங்களில் அல்ல

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2025 11:30

November 10, 2025

தேவதேவன்'s Blog

தேவதேவன்
தேவதேவன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தேவதேவன்'s blog with rss.