Venba Geethayan's Blog

April 21, 2026

யாமத்தின் வாசனை

துயில் மெதுவாய் கவிந்திடும் பொழுதினில் எவர் வரவுக்காய் அலரும் ஆம்பல்?திரைகளை மெல்லத் தழுவிடும் வாடைஇடைமேகலையின் கனவினை அறிந்திடும்துகிலின் நிந்தனை தாளாதுதொய்யில் இன்னும் சிவந்ததுமலர்கணை உடன் கிடந்திடமாமுகில் பொழிந்திடும் மழையென மாமையை மாயையைக் களைந்திடவாடிய வார்துகில் அவிழ்ந்திட வாடையின் வாடலும் கரைந்திடமலர்ந்தனள் மற்றொரு ஆம்பலாய் மஞ்சத்தில் அறையெங்கும் யாமத்தின் வாசனை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2026 14:18

April 19, 2026

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள்வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ? பசலையுற்ற தேகம் கண்டுமுதற்கோடை மழையில் முழுதாய் நனைந்திடும் பிரியம்உதிரும் மலர்களின் சபலம் காற்றை இறுகப் பற்றிடும்இளவேனிற் காதல்பின்வேனிற் களவு இரண்டும் மிதமாய்த் தேவையென விழிசிமிட்டிற்ற நிலவுஇரவெனும் விரிசடைதனில் எழிலணிகலன் இம்மலர்கள்நித்திய நிலவொளியில் கண்ணாடி வளைகளிட்ட ஒருத்தி நீள்குழல்தனை அள்ளிமுடித்துஆடிதனை நோக்கிஅஞ்சனமிட்டுசெர்ரி மலர்க்கற்றையைசூடிக்கொண்டனள்மணாளனின் பார்வைதனில் தீக்கொன்றையாய் மாறிற்று
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2026 12:46

March 5, 2026

ஆற்றின் நிலவு

ஆற்றின் குறுக்கே ஒளிமிகு படகொன்றுஇருண்மையின் தேவதையாய் எழுந்த செந்நிலவுபுதர்மண்டிய கரைதனில்ஓநாய்களின் உண்டாட்டுசெழுமையான மானின் நறுங்கொழுப்பினைக் கவ்வி இழுத்துவந்துபெண் ஓநாய்முன் போட்டுகுருதி தோய்ந்த பற்கள் நகைத்திட காதலை மொழிந்தது ஆண் ஓநாய் பெண் ஓநாய் நாணிக் கொழுந்துண்டை மென்றதுசெந்நிலவு தேவதை ஆசியைப் பொழிந்துஆகாயப்பொதியினுள் மறைந்திட ஓடத்தினின்று அவன் கை செவ்வல்லிதனை எட்டிப்பறித்திற்றுஅருகே மேகலை சுற்றிய யிடைதனை யிழுத்துதொய்யிலிட்ட மேனிக்கு சூடினன்ஓநாய்கள் உன்மத்தமாய் பாடினபேரியாழின் முழக்கமென... 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 06:25

February 25, 2026

இரவுக்களிப்பு

திரைச்சீலைகளின் குவிப்புக்குஒருபுறம் அவளும்மறுபுறம் அவனும்சந்தித்துக் கொள்ளா விழிகள் வால்ட்ஸ் நடன இசை துவங்கியதுமெய்மறந்து தியானிப்பதைப் போல் சுற்றியாடும் இணையர்கள் புதுப்புனல் அள்ளிவரும் பூங்கற்றையாய்மடந்தையரது நீள்துகில்கள்எங்கும் பிணையாது துள்ளிடமுதன்முறை அவர்கள் பற்றிக்கொள்ளமுகத்திரைகளுக்கு இடையே செவ்விழிகளும் கருவிழிகளும் மின்கீற்றாய் முத்தமிட உணர்ந்திடும் முன்பே கைகள் மாறிட அசைவுகள் சுற்றிட மீண்டும் அதே இறுகப்பற்றும் விரல்கள் இம்முறை அவளதரம் இன்னும் இறுக்கமாய் அசைவுகள் பிழைத்திட முகத்திரையை இழுத்தனன் வெடுக்கென திரளுள் மறைந்தனள் தேடிற்ற விழிகளுக்கு பரிசாய்க் கிடைத்ததுபியோனிமலர் வாசனை கொண்ட முகத்திரை! 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2026 09:01

February 21, 2026

பளிங்கு அரங்கு

மாலையின் பொன்னொளியில் பளிங்கு அரங்கின் ஓரத்தில் கண்ணாடி மதிலுக்கு வெளியேகரை தழுவிக் கடக்கும் கடலலைகள் மேசையில் இரு பீங்கான் கோப்பைகள்மெல்ல எழுகிற வாசனை அகத்தின் துளி மோகம் போல்அவன் விரல் நுனி ஸ்பரிசம் போல்காஃபி கோப்பையின் கதகதப்புமழுங்கும் ஒளிக்கிடையேபைசாந்திய முணுமுணுப்புகள் அசையாத விழிகளின் அறிந்திற்ற மொழியுணர்ந்துநாண்களை மீட்டும் பாணன்மிடற்றில் எழுந்த கசப்பாய்வனதேவதையின் முத்தம் மதுரப்பரல்கள் சேர்த்திடமறைந்தனள் தேவதை கையெழுத்தாய் கழுத்தில் அவளது நகக்குறி அவள் வருகையின் தடமென அரங்கெங்கும் கிடந்தன லைலக் மலர்கள்... 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2026 08:23

October 22, 2025

மழை மோகம்

இரவின் சாளரம் 

மெல்லிய மழைத்துளிகள்

இருளின் களிப்பாய் பொழிகின்றன

நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக்

கொட்டும் துளிகளைத் தொட்டன 

கந்தர்வ ஸ்பரிசமாய் 

கைகளைத் தழுவிய துளிகள் 

நிலமும் உதிர்மலரும் மோகிக்கும் வாசனை

அவள் வாயிற்கதவத்தைத் தட்டின

முகில்கள் நிலவுக்கு முத்தமிட்டுக் 

கடக்கும் பொழுதினில் 

ஏற்பட்ட அணுக்கம் போன்றது

அவளுக்கும் அவனுக்குமான பற்று

தாமதிக்காமல் தாழ் திறந்தனள்

வீழ்ந்துலர்ந்த முல்லைகளாய் ஈசல்கள்

மழைத்துளி அஞ்சாது அவள் நுதல் தொட்டு 

கழுத்தில் இறங்கியது

முழுவதுமாய் நனைந்து நிற்க

அங்கே இந்திரனின் மின்கீற்றாய் அவன்

மீண்டும் பெரும் கார்முகிலொன்று

இறுக்கமாய் நிலவை முத்தமிட்டது 

முதற்கதிர் எழும்வரை... 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2025 11:34

August 19, 2025

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி

அவனுக்கும் அவளுக்குமிடையே

சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள்

தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் 

அவளைச் சூழ்ந்த யக்ஷர்கள்

இடைவெளிகளற்ற பைசாந்திய ஒலிகள் 

சுவர்களிலிருந்து அவனை பற்றி இழுத்திடத் துடிக்கும் வளையல்களிட்ட கைகள் 

அவளிதழின் துளிப் புன்முறுவல்

அவன் விரலைத் தீண்டிட 

நொடிநேரக் கடவுள் ஆகினன் 

மறுநொடியில் உபாசகன் 

மீண்டும் கிடந்தகோலத் திருமேனியாகினள் 

வண்ணத்தீற்றல்கள் இன்னும் பல ஆயிரங்களாய்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 14:50

June 7, 2025

Thug life vs Adam's life



போதுமான அளவிற்கு கமலுக்கும் மணிரத்னத்திற்கும் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. சமூக ஊடகத்தார் துவைக்கின்ற அளவுக்கு படம் மோசமா எனில் நிச்சயம் கிடையாது. படம் நன்றாக இல்லை என்று விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு திரிஷா காட்சிகள்தான் காண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திரிஷா பகுதியை கத்தரித்து விட்டு இன்னும் தூக்கம் வரவைக்கும் நான்கு சண்டைக்காட்சிகளை மணி இணைத்திருந்தால் தக் இத்தனை எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார். 
திரைபடத்தின் மிகப்பெரிய குறை சண்டைக்காட்சிகள். இரண்டாம் பாதியில் அன்பறிவு மட்டுமே பெரும்பான்மையான காட்சிகளை இயக்கியது போல தோற்றம் ஏற்படுகிறது. மணிரத்னம் தனது கதாப்பாத்திரங்களை அத்தனைஎளிதாக மரணத்தில் முடித்துவிடமாட்டார். இருப்பினும் இத்திரைப்படத்தில் பலரும் சண்டைகளில் மாண்டு போகின்றனர். அத்தோடு அன்பறிவின் தாக்கம் அதீதமாகத் தெரிய காரணம் விக்ரமில் அடியாள் கூட்டத்துக்கு மத்தியில் ரோலக்ஸாக சூர்யா தோன்றும் அதே காட்சியில் இங்கே STR தோன்றி இனி தான்தான் சக்திவேல் என்கிறார். பின்னர் தக்காக ஏதாவது செய்வார் என எண்ணும்போது ஒருபுறம் கோவா, கேசினோ மறுபுறம் திருச்செந்தூர், கடல் என மணிரத்னத்தின் அழகியல் காட்சிகள் வருகின்றன. பிறகு மீண்டும் கோவா சண்டைக்காட்சிகள், படாரென தாவும் டெல்லி சண்டைக்காட்சிகள் என முதல்பாதியில் தெளிவாகக் காட்டப்பட்ட இடமும் காலமும் இரண்டாம் பாதியில் ஊசலாடுகின்றன. விக்ரம், KGF அளவிற்கான சண்டை Thug lifeக்கு தேவையில்லை. அதுவும் தற்காப்பு கலை சண்டைகள் இந்த படத்துக்கு எதற்கு எனும் வினா எழுகிறது. தமிழ் சினிமாவில் ஆபத்தான TRENDING தேய்வழக்குகள் உருவாகியுள்ளன. சாமானிய மக்களிடையே வெகு எளிதில் புழங்கும் Fruit mix பானம் போல, ஒரு திரைப்படத்தில் காமெடியா? சிறிதளவு இவர்கள், வில்லனா? இவர்களை போட்டு இரண்டு கண்டு கிண்டிவிட்டால் போதும், சாகடிக்க வேண்டுமா? அவர்களை அள்ளிப்போட்டு கதையை முடிக்கலாம், அபலையான கதாப்பாத்திரமா? இவர்களைப் போட்டு கிளறினால் முடிந்தது... இவ்வாறு தேய்வழக்காகவே தமிழ் சினிமாவில் பலர் மாறிவருகின்றனர். அன்பறிவும் அப்படியான தேய்வழக்கு Trendingஇல் சிக்கிவிட்டனரோ என்று Thug life பார்க்கும்போது தோன்றுகிறது. 
முதல் பாதி மிக அழகாக தெளிந்து செல்கின்றது. ரசிக்க வைக்கும் காட்சிகள் திரிஷா-கமல், கமல் -அபிராமி, வடிவுக்கரசி கமல், STR- கமலுக்கு நடுவே நிகழும் உரையாடல்கள், வெறும் சக்திவேல்-அமரன்- இந்திராணி ஆகிய மூன்று கதாப்பாத்திரங்களை வைத்து மட்டுமே தனித்து திரைக்கதை அமைக்கலாம். அவர்கள் மூவருக்கும் இடையே உள்ள மீறல்கள் மற்றும் சிடுக்குகள்தான் இதர கதாப்பாத்திரங்களின் தன்மையையும் கதையோட்டத்தையும் முடிவு செய்பவை. 
ஆனால் அவர்களை மையப்படுத்தாமல் காட்சிகள் எங்கெங்கோ செல்கின்றன. மேலும் இதில் சில அடிப்படைக் காட்சிகள் வசனங்களாக பேசப்பட்டு கடந்து போய் விடுகின்றன. உதாரணமாக கமல் ஒரு காட்சியில் அபிராமியை கிட்சனில் சமாதானப்படுத்தும் ஊடல் காட்சியில் முதல் சந்திப்பை மூன்றுவரி வசனமாகப் பேசிக் கடப்பார். அது காட்சியாக மாறியிருந்தால் அழகியல். 
மகாபாரதத்தில் சாந்தனு சத்தியவதியை மணம் செய்துகொள்ளும்போது சாந்தனுவின் மகன் தேவவிரதன் எனும் பீஷ்மன் துறவுகொள்வான். ஒருவேளை தேவவிரதனும் சத்தியவதி மீது காதல்கொண்டிருந்தால் என்னவாகும் என ஒரு கிளாசிக் திரைப்படமாக/ திரைக்கதையாக வரவேண்டிய Adam's Life, Thug life ஆகி பாதை மாறி 'பரவாயில்லை பார்க்கலாம்' commercial ரகமாக நிற்கின்றது.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 02:38

January 10, 2025

பாவை மொழிகள் (4 - 6)

அரவம் துயிலும் பொருட்டு

மெதுவாய் அகழ்வில் ஊர

ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!

மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட

சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட

அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?

கிள்ளிடும் பொன்பாவாய்!

//

அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்

மடித்து வைத்த இழைப்பட்டு

கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்

கழற்றி எறிவானெனும் மதியின்றி

களவைத் தூண்டும் மடப்பட்டு

முந்தைய கூடலை நினைவுருத்தி

வருத்திடும் அணியிழையாய்!

//

புலரொளியில் நிலம்படர் ஈரம்

அவன் உள்ளங்கை மணம்

அந்த நாகலிங்கப் பூக்கள்

கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி

ஒற்றை பூவின் மணத்தை

மந்தணமாய் மெல்ல

கள்ளமாய் நகைத்திடும் மார்கழி

உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்

//

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2025 13:10

December 18, 2024

பாவை மொழிகள் - 3

வைகறைத் தூறல் நிலம் நனைக்க

உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்

விண்ணுலகிலும் அலருமென 

கந்தர்வன் அளித்ததன் கொடையவை

ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும் 

கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்

துவள்விழியைத் திறந்திடுமின்! 

பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்! 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2024 12:24

Venba Geethayan's Blog

Venba Geethayan
Venba Geethayan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Venba Geethayan's blog with rss.