ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?

[image error]காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன?

= நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:)


இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்!

ஏன் -ன்னு தெரியுமா?

சொல்லுங்களேன் பார்ப்போம்:)


இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்!

= என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர்

= இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது;

= “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண்


சங்க காலப் பெண் கவிஞர்களில்…

இவ பாட்டில் மட்டும் = உணர்ச்சி + துணிவு = ரெண்டுமே தெறிக்கும்!

= ஆண் கவிஞன், “முலை-அல்குல்” -ன்னு பாடினா, “கவிச் சுவை”-ன்னு ஏற்கும் சமூகம்;

= பெண், அதே போல், ஆண்களைப் பாடினா???

“சரியான Case-டா” -ன்னு சொல்றவங்க, 21st CE-லயும் உண்டு = Ilakkiya Hypocrisy:)


ஆனா, இவ = 2000 years back “கட்டுடைத்தவ”;

தோழி கோதை (எ) ஆண்டாளை விட இவளே முன்னோடி!


[image error]கன்றும் உணாது, கலத்தினும் படாது…திதலை அல்குல் என் மாமைக் கவினே

= எழுதியவ இவ தான்!

காதலன் புரிதல் கை கூடலை; பெண்ணின் அந்தரங்கத்தில் வீணாகுதே; “வெள்ளைப்” படுதே -ன்னு “பச்சையா” எழுதினவ;


என் மனத்துக்கு இனியாள்; சங்கத் தமிழ் மொழியாள்!

அவ பாட்டு தான் இன்னிக்கி Dosaவில்; பார்ப்போமா?



நூல்: குறுந்தொகை

கவிஞர்: வெள்ளிவீதியார்

திணை: குறிஞ்சி

துறை: தமர் வரைவு மறுத்தல்


அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-

தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,

‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு

இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே


சூழல்:



[image error]கனாக் கண்டேன் தோழீ நான் – ன்னு பாடுனவ ஆண்டாள்; ஆனா அவளுக்கும் முன்னாடியே…

தன் தனிப்பட்ட காதல் (எ) துன்பத்தை,

கனவு (எ) இன்பம் ஆக்கி மகிழ்ந்தவள் = வெள்ளிவீதியார்


தாமதமானாலும்… தலைவன் தன்னைத் புரிஞ்சிக்கிட்டான்; இப்போ பொண்ணு கேட்டு வந்திருக்கான்;

ஆனா, அவன் பேசுகின்ற பேச்சு, சற்று வீறுள்ள பேச்சு;

எங்கே அவன் பேசக் கேட்டு, தன் வீட்டில், கல்யாணம் மறுத்து விடுவார்களோ? -ன்னு கவலையாம் பொண்ணுக்கு:)

= தலைமகன், தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, வரைவு மறுப்பவோ? எனக் கவன்ற தலைமகள்;


அவளுக்குத் தோழி ஆறுதல் சொல்வது போல் களம்!

இப்படி, விதம் விதமான கனவுகளை, ஒவ்வொரு பாத்திரத்தின் மேலேற்றி எழுதும் வெள்ளிவீதியார்!


ஆனா, வெள்ளிவீதியின் உண்மைக் காதல் பத்தி நமக்கு எப்படித் தெரியும் -ன்னு பாக்குறீங்களா?

அவள் பட்ட அல்லாடல்களை – சொல்லாடல்களை,

சக நண்பர்கள்-கவிஞர்கள், வேறு வேறு சங்கக் கவிதையில் எழுதிப், பதித்து வச்சிட்டாங்க:(


(Further Read/Ref : முனைவர். தாயம்மாள் அறவாணன் – மகடூஉ முன்னிலை ; பெண்புலவர் களஞ்சியம்)



காபி உறிஞ்சல்:


அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?


ஏன்டியம்மா தோழீ, நம்மூருல…

பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் நல்லவர்கள்/நண்பர்கள் இருக்காங்கடீ!

= பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?


[image error]தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்


தண்டு கையில் உடையவர்கள்;

வெள்ளைத் தலை; அதில் சிதவல் (தலைப்பாகை) கட்டினவங்க!


= பெருசு -ன்னு இன்னிக்கி சொல்றோமே…

= தலை நரைத்தாலும், அறிவு நரைக்காதவர்கள்

= தூய காதலின் முன்…, குலம்/ கோத்ரம்/ சாதி/ சவரன் பேசாதவர்கள்; பெண்ணை ஏசாதவர்கள்


[image error]சிதவல் = சிதறிய துணி;  நெசவுத் தறியிலே…

* ஓரமாச் சிதறி எடுப்பதால் சிதவல் = தலைப்பாகை/ துண்டு

* வெட்டி எடுப்பதால் = வேட்டி;

எந்தப் புண்ணியவான், தமிழ்ச் சொல் வேட்டியை, வே’ஷ்’டி ஆக்கினானோ?


‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு

இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே!


நன்று நன்று -ன்னு சொல்கின்றனர் = தலைவனோடு வந்த உற்றார்; (மாக்கள் = மக்கள்)

இன்று, உங்கள் வரவால், பெருமை சேரும் -ன்னு, தலைவனின் உறவுகளை வரவேற்கும் மக்கள்!


[image error]இந்த அவை – இந்த மக்கள் இருக்கும் போது, நீ ஏன்டீ பயப்படுற?

ரெண்டு வீடும் முட்டிக்காமப் பேசுவாங்க;


சும்மாக் கிடந்து கவலைப்படாதே தலைவியே! பிரிந்த நீங்கள், ஒன்னு சேரும் நேரம் நெருங்கிருச்சி = பிரிந்தோர்ப் புணர்ப்பர்; பிரிந்தோர்ப் புணர்ப்பர்!

(முருகனருள் – கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்)


இப்படிக் கனவுகளாய்…

தமிழ் எழுதியே, வாழ்க்கை வாழ்ந்த தையலாள் = வெள்ளிவீதியார்!

நின் அகம் வாழி; புறம் வாழி;

துணிவும் தமிழும் வாழி வாழி!


dosa 104/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2012 04:00
No comments have been added yet.


Kannabiran Ravishankar's Blog

Kannabiran Ravishankar
Kannabiran Ravishankar isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Kannabiran Ravishankar's blog with rss.