காதலா? காமமா? How to Know It?
[image error]In today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning!
* அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்;
* அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:)
[image error]ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்;
= கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
= கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:)
= கற்றவர்களைக் கற்றவர்களே “விரும்புவர்” என்று தானே பொருள்!
சரி டா மச்சி; அப்படீன்னா… திருக்குறளில், காமத்துப் பால்?
= அது என்ன விருப்பத்துப் பாலா?:)
சும்மானா அடிச்சி வுடாத ரவி:) இதுக்குப் பதில் சொல்லேன் பார்ப்போம்!:)
குறளில், மலரினும் மெல்லிது காமம் -ன்னு வருதே! அது “பலான” காமம் தானே?:)
ஆமாம்!
ஆனா, “அந்தக்” காமத்திலும், அது “விருப்பம்” என்னும் பொருளில் தான் வரும்!
[image error]காதலில் விளையும் உடல் விருப்பம்
= மெய்யுறு புணர்ச்சி = அதுவும் காமமே!
சங்கத் தமிழில், அந்தக் களவு இன்பம்/விருப்பத்தை = “காமம்” என்றே அழைத்தனர்;
So, காமம் நல்லது!:) & கறை நல்லது:)
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – இது காதலில் விளையும் காமம் (விருப்பம்)
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் – இது கல்வியில் விளையும் காமம் (விருப்பம்)
Good; அப்படீன்னா “காமம் புடிச்சவன்” -ன்னு, பேச்சு வழக்கில் பொருள் ஏன் மாறிச்சு?
ரவிக்கு இருப்பது காமமா? காதலா?:)
= எப்படிக் கண்டு புடிப்பது? பார்க்கலாமா?:) Letz go குறுந்தொகை – 4 lines!
நூல்: குறுந்தொகை 42
கவிஞர்: கபிலர்
திணை: குறிஞ்சி
காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடர் அகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?
சூழல்:
இரவில் வரும் தலைவன்; ஆனா முன்பு போல் வர முடிவதில்லை;
போச்சு; அவ்ளோ தான்! காதல் புட்டுக்கிச்சா?
இங்கிட்டு தான் தோழி சொல்கிறாள்: காதல் – காமம் வேறுபாட்டை!
காபி உறிஞ்சல்:
[image error]காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென
காமம் ஒழிவது = காமம் போயிருச்சோ? விருப்பம் போயிருச்சோ?
நடு யாமத்திலே, மா மழை பெய்வது போலடா, இது!
யாமம் என்பது தூய தமிழ்ச் சொல்;
அதை “ஜா”மம் -ன்னு ஆக்கிட்டாங்க, தமிழிலே கலப்பு செய்வோர்;
“ஜா”மம் என்பதால், தமிழ், வடமொழியிடம் கடன் வாங்கிய சொல்லு போல ஆயிருச்சி-ல்ல?
Thatz the Trick:( Take your own word, prefix & push it back to u; You never know:(
யா, யாமை = கருமை;
அதான் யாமம் (நள்ளிரவு), யாமளை (அன்னை கொற்றவை)
But, யாமம் chg to ஜாமம்; யாமளை chg to ஷ்யாமளா
சரி விடுங்க; உவமையைப் பார்ப்போம்!
நடு யாமத்திலே மழை பெஞ்சா? = காமமும் அப்படித் தானாம்!
யாமத்தில் பெய்த மா மழை! = What does it mean? No Double Meanings:)
அருவி விடர் அகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?
டேய் குறிஞ்சி – அருவி நாடனே,
* ஒரு பெருக்கால பெய்த மழை, பின்னாளில், மலை முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;
* ஒரு பெருக்கால பெய்த காமம், பின்னாளில், மன முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;
[image error]இவளுக்கு வெறும் காமம் -ன்னு நினைச்சிட்டியா?
காமம் = மெய் உறு புணர்ச்சி = உடல் விருப்பம்! நல்லது தான்;
ஆனா, அந்தக் காமமே நின்னு போனாலும், இவ தொடர்பும் தேயுமோ, உன் மேலே?
“தொடர்பு” -ன்னு அற்புதமான சொல்லைப் போடுறாரு பாருங்க!
* தொடர்பு = Not just association
* தொடர்ந்து வரும் = அதனால் தொடர்பு
[image error]உன் காமமே நின்னு போனாலும், இவ “தொடர்பு” தொடரும்!
= மனசால் அவனையே தொடர்ந்து வாழ்வது!
= “தொடல்” நின்னுருச்சி; ஆனா “தொடர்பு” நிக்கலைடா; நிக்கவே நிக்காது!
இப்போ புரியுதா?
* காமம் = நம் மேல் உள்ள “விருப்பம்”; நம் இன்பத்துக்கு இருப்பது
* காதல் = அவன் மேல் உள்ள “விருப்பம்”; அவன் இன்பத்துக்கு-ன்னே இருப்பது
காமம் ஒழிவது ஆயினும்,
உன் வயின், தொடர்பும் தேய்மோ? – யாமத்து மழையே!
dosa 102/365
Kannabiran Ravishankar's Blog
- Kannabiran Ravishankar's profile
- 16 followers
