ஒளியின் கைகள்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)

இந்த விழாவில் ஒளியின் கைகள் என்ற  கட்டுரைத்தொகுப்பு வெளியாகிறது. இது உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

ஒளி எப்போதும் தூய்மையின், கருணையின், அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அற்புதங்கள் ஒளியால் அடையாளப்படுத்தபடுகின்றன. எல்லா சமயங்களும் ஒளியைக் கொண்டாடுகின்றன.

ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்குப் புலப்படவும் புரியவும் வைக்கிறது. இருள் என்பது குறைந்த ஒளி என்கிறார் மகாகவி பாரதி.

அன்றாடம் ஒளியின் கைகளே உலகின் காட்சிகளை வரைகிறது. இயற்கையின் வனப்பு ஒளியால் உருவானதே. பகலையும் இரவையும் இரண்டு சிற்பங்களாக்கியிருக்கிறார் மைக்கேலாஞ்சலோ, அது போலவே வான்கோ நட்சத்திரங்கள் ஒளிரும் இரவை வரைந்திருக்கிறார். இவை வெறும் காட்சிப் பதிவுகளில்லை. கலையின் உன்னதங்கள்.  ஒளியின் விரல்கள் முடிவில்லாமல் தாளமிடுகின்றன. அந்த இசையை நாம் ஓவியத்தில் முழுமையாக் கேட்கிறோம். மெய் மறந்து போகிறோம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2024 22:15
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.