நாகூரில் சேதுராமய்யர் ஹோட்டல் இருந்தது. சேதுராமய்யர் இறந்ததும் அவர் மகன் ஊரெல்லாம் கடன்பட்டு கடையை மூடி விட்டான். பல ஆண்டுகள் கழித்து நான் போய்ப் பார்த்தபோது கடை மூடிய விஷயமும் மற்ற விவரங்களும் தெரிந்தன. அந்த ஓட்டலில் ஒரு தேங்காச் சட்னி கொடுப்பார்கள் பாருங்கள், தெய்வம். அதே மாதிரி தேங்காச் சட்னி ஸ்ரீரங்கம் கதிரவன் ஓட்டலில்தான் சாப்பிட்டேன். எல்லாம் முப்பது நாற்பது ஆண்டுகள் இருக்கும். அதற்குப் பிறகு அப்படி ஒரு தேங்காச் சட்னியை இன்று வரை சாப்பிட்டதில்லை ...
Read more
Published on October 07, 2025 07:53