அன்பிற்குரிய நண்பர் அம்மாசத்திரம் சரவணன் மறைவு மிகுந்த மனவருத்தம் தருகிறது.

சரவணன்
தினமதி நாளிதழில் சரவணன் பணியாற்றிய நாட்களில் அவரது அறையில் தங்கியிருக்கிறேன். அவருடன் திருபுவனம் சென்று நண்பர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சரவணன் மிகுந்த நேசத்துடன் பழகுவார். அவரது மறைவு தாளாத மனத்துயரை அளிக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு சரவணன் ஒரு இரவு போனில் அழைத்திருந்தார். பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் ஊடாக மறைந்த திருபுவனம் கனகு பற்றிப் பேசி கண்ணீர் சிந்தினோம். சொந்த வாழ்வின் நெருக்கடிகள் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாதவர் சரவணன். அவரது சிரித்த முகம் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
சரவணன் குடும்பத்தினருக்கும், திருபுவனம் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Published on December 15, 2025 02:18