வைணவ இலக்கிய அறிமுக வகுப்புகள்

ராஜகோபாலன் நடத்தும் வைணவ இலக்கிய வகுப்புகள் வைணவ தத்துவம், வைணவ வரலாறு, தமிழிலக்கிய மரபு ஆகியவற்றுடன் இணைத்து வைணவ இலக்கியமாகிய நாலாயிர திவ்யபிரபந்தத்தை புரிந்துகொள்வதற்கான அறிமுகமாக அமைபவை. இவை மதக்கல்வி அல்ல. இலக்கியக் கல்வியே. மதக்கல்வியாக கொள்பவர்கள் அந்த கோணத்தில் தாங்களே விரித்துக்கொள்ள முடியும்.

வைணவ இலக்கியங்கள் இறுக்கமான மத நோக்கில் பயிலப்படும்போது அவற்றிலுள்ள இயல்பான கவித்துவம் இல்லாமலாகிறது. அவற்றிலுள்ள நீண்ட தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் கணக்கில்கொள்ளப்படுவதில்லை. ராஜகோபாலன் தமிழ்ச்செவ்வியல் மரபுடன், கம்பராமாயணம் போன்ற நூல்களுடன் இணைத்து வைணவ இலக்கியத்தை அறிமுகம் செய்கிறார்.

இவை பொதுவான ரசனைகொண்ட, அடிப்படை வாசிப்பு மட்டும் கொண்ட ஆர்வலர்களும் கலந்துகொள்ளத்தக்க வகுப்புகள். தமிழிலக்கியத்திலும், தமிழ் வரலாற்றிலும் ஆர்வமுள்ள எவருக்கும் அவசியமான அடிப்படைப் பயிற்சிகள்.

பலமுறை பல வாசகர்களின் தீவிர ஈடுபாட்டுடன் நிகழ்ந்த அப்பயிற்சிகள் மீண்டும் நிகழவுள்ளன.

நாள் ஜனவரி 23 ,24 மற்றும் 25

For contact programsvishnupuram@gmail.com

 

அறிவிக்கப்பட்ட வகுப்புகள் 

 

முழுமையறிவு சார்பில் பறவைபார்த்தல் வகுப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திரளாகச் சிறுவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றைய குழந்தைகளை இணைய- செல்பேசி மோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர நேரடியான களம்சார்ந்த பயிற்சிகளால் மட்டுமே முடிகிறது. அத்துடன் இன்றைய சுமையான படிப்பில் இருந்து மெய்யான இடைவேளையையும் இளைப்பாறுதலையும் அதுவே அளிக்கிறது. ஆகவேதான் உலகம் முழுக்க இவை நிகழ்கின்றன. எங்கள் முயற்சிகளிலுள்ள பெரும் வெற்றியும் அதையே நிரூபிக்கிறது.பறவைபார்த்தல் என்பது இயற்கையுடன் ஓர் அறிமுகத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இயற்கையில் இணைந்து பொறுமையுடன் இருப்பதற்கான பயிற்சி. ஒன்றை நீண்டநேரம் கூர்ந்து கவனிப்பதற்கான பயிற்சியும்கூட. ஆகவே பெரியவர்களுக்கும் அது ஒருவகை தியானமே.நாள் ஜனவரி 16 17 மற்றும் 18

contact programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் வகுப்புகள்

 

தில்லை செந்தில்பிரபு நடத்தும் தியானம்– கவனக்குவிப்புப் பயிற்சி வகுப்புகள் இன்று மிகவும் புகழ்பெற்றுள்ளன. அவை மனஒருமை, அன்றாடவாழ்க்கையில் அமைதி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை

அவை தொடங்கப்பட்டபோது அவற்றின் நடைமுறைப் பயன் என்பது கவனக்குவிப்பாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. இன்றைய அன்றாடவாழ்க்கையில், கல்வியில் கவனச்சிதறல் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில் இப்பயிற்சிகள் மிகச்சிறந்த தீர்வை அளிப்பதை பங்கேற்பாளர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு அதற்கேற்ப இப்பயிற்சிகள் மேம்படுத்தப்பட்டன.

கவனச்சிதறலின் உடனடி விளைவு சீரான துயிலின்மை. துயிலின்மை எதையும் ஒருங்கிணைந்த உள்ளத்துடன் செய்ய முடியாமலாக்குகிறது. இந்த தியானமுறைகள் அதற்கு மிக உகந்தவை.

ஒரு தியான வகுப்பு ஓரு நல்லாசிரியனால் நடத்தப்படவேண்டும். பயில்பவர் ஆசிரியருடன் தொடர்பில் இருக்கவேண்டும். ஆசிரியன் அந்த மாணவரை அறிந்திருக்கவேண்டும். ஆகவேதான் இவை தனிப்பட்ட முறையிலான பயிற்சிகளாக நடைபெறுகின்றன.

தில்லை செந்தில் பிரபு அவருடைய ஆனந்த சைதன்யா அறக்கட்டளை வழியாக இப்பயிற்சிகளை எளியநிலை கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் இப்போது கொண்டுசெல்கிறார்.

மீண்டும் வகுப்புகள்

நாட்கள் ஜனவரி 30 31 மற்றும் பெப்ருவரி 1For contact  programsvishnupuram@gmail.com இந்திய தத்துவம் ஆறாவது வகுப்பு

இந்து தத்துவம் ஐந்தாம் வகுப்பு மீண்டும் நிகழவிருக்கிறது. பிப்ரவரி 6,7 மற்றும் 8 ஆம் தேதிகளில். இந்திய தத்துவ வகுப்பின் ஐந்தாம் நிலையை நிறைவுசெய்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

(இது ஆறாவது வகுப்பு. முன்னர் பிழையாக ஐந்து என வந்துவிட்டது. ஆறாவது நிலை, அதாவது பிரம்மசூத்திரம் அறிமுகம் இந்த வகுப்பில் நிகழும். அதாவது ஏற்கனவே குறைவானபேருக்கு அல்மோராவில் நிகழ்ந்த வகுப்பு மீண்டும் நிகழகிறது. ஆறாவது வகுப்பின் இரண்டாம் பகுதி பிப்ரவரியில் மீண்டும் நிகழும்)

நாள் பிப்ரவரி 6,7 மற்றும் 8

For contact programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2026 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.