எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் மணிமாறன். அறையில் பரவியிருந்த மங்கலான வெளிச்சத்தில் மணியைப் பார்த்தார். சுவற்றில் பொருந்தியிருந்த மின்சாரக் கடிகாரம் சிவப்பு நிறத்தில் மணி பன்னிரண்டு என்பதைக் காட்டி மின்னியது. தூக்கமின்றி எரிச்சல் தந்த கண்களைத் தேய்த்துக் கொண்டார் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரியான மணிமாறன். கடந்த ஒரு வாரமாக சரியான தூக்கம் இல்லை. அதிசயமாக இன்று பத்தரை மணிக்குத் தூங்கியவரின் கனவில், ...
Published on December 18, 2025 00:36