2026 – கோவை புத்தகத் திருவிழாவில்

இந்த முறை புத்தகத் திருவிழாவிற்காக ஐந்து நாட்கள் கோவையில் இருந்தேன். ஒவ்வொரு நாளும் புதிய வாசகர்களுடன் சந்திப்பு. உரையாடல், என மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது. குறிப்பாக இருபது வயதிற்குள் இருக்கும் இளம்வாசகர்கள் நிறைய வந்திருந்தார்கள். அவர்கள் ஆசையாகப் புத்தகங்களை வாங்கிப் போனது சந்தோஷம் அளித்தது.

தேசாந்திரி பதிப்பகத்திற்கு வாசகர்கள் அளித்த ஆதரவிற்கு மிகுந்த நன்றி.

எனது புத்தகங்களை வாங்கி விற்பனை செய்யும் புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

கல்லூரி மாணவர்கள். ஆய்வாளர்கள். பேராசிரியர்கள். மென்பொருள்துறையில் பணியாற்றுகிறவர்கள். மருத்துவர்கள். வழக்கறிஞர்கள். ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள். ஊடகத்துறை மாணவர்கள். அயல்நாட்டில் வசிப்பவர்கள், நீதித்துறை, காவல்துறையில் பணியாற்றுகிறவர்கள் என வாசிப்பில் ஈடுபாடு கொண்ட பல்தரப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

கோவை வந்தது முதல் உடனிருந்து கவனித்துக் கொண்ட அன்பு நண்பர் மூர்த்திக்கு மனம் நிறைந்த நன்றி.

சனிக்கிழமை எனது உரையின் போது அரங்கம் நிறைந்திருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் உரையைக் கேட்டார்கள். நிகழ்வு முடிந்தபிறகு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த கோவை கொடிசியா புத்தக திருவிழா நிர்வாகிகளுக்கு நன்றி. அன்பிற்குரிய டைனமிக் நடராஜன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்

கோவை புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு கண்ணன். கவிஞர் க.வை பழனிச்சாமி, டிஸ்கவரி வேடியப்பன், ஓவியர் ஜீவா, ஆவநாழி சுதேசமித்ரன். மயன், ஜீவகரிகாலன். விஷ்ணுபுரம் செந்தில், மீனாம்பிகை, வான்கோ பதிப்பகம் சதீஷ் குமார், வேரல் லார்க் பாஸ்கரன், அம்பிகா குமரன். நெதர்லாந்து சரவணன். சூரத் லட்சுமி நாராயணன் குடும்பத்தினர், கவிஞர் ஜோ மல்லூரி, அம்பாள் முத்துமணி. டாக்டர் சரத்குமார், மருதன் ,பா.ராகவன், முருககுமார், நரேன், கோவை வசந்த். சிறுவாணி வாசகர் மையம் ஜி. ஆர். பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர், கோவை ராமராஜ், பிரபு உள்ளிட்ட பலரையும் சந்தித்து உரையாடினேன். தான் வரைந்த அழகான ஓவியம் ஒன்றை ஒரு வாசகர் பரிசாக அளித்தார். அவருக்கு எனது நன்றி.

இருபதுக்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன்.

என்னை சந்தித்து உரையாடியது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள். காணொளிகளாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2026 08:46
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.