2026- புதிய புத்தகங்கள்

நீரறியா அன்னங்கள்

2026 டிசம்பர் 25 மாலை சென்னையில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இதில் எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பான நீரறியா அன்னங்கள் வெளியாகிறது.

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் எனது இணைய தளத்திலும். இதழ்களிலும் வெளியானவை. சில கதைகள் ஆங்கிலம், தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

முந்நூறு பக்கங்களுக்கும் மேலான பெரிய சிறுகதைத் தொகுப்பு.

தற்போது புத்தக உருவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

••

மார்க்வெஸின் சேவற்சண்டை

சர்வதேச இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு நூல் மார்க்வெஸின் சேவற்சண்டை டிசம்பர் 25 மாலை வெளியாகிறது.

••

வரலாறு எப்போது நாவலாகிறது

அரிய தமிழ் நூல்கள் .புத்தக மதிப்பாய்வுகள், எழுத்தாளுமைகள் குறித்து நான் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வரலாறு எப்போது நாவலாகிறது டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியாகிறது/

பகலை வெல்லும் இரவு

செவ்வியல் திரைப்படங்கள் மற்றும் அயல்மொழிப்படங்கள் குறித்து இணையத்தில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் பகலை வெல்லும் இரவு டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியாகிறது

இந்த நூல்களை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2026 06:24
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.