கௌரவ டாக்டர் பட்டம்

தக்சசீலா பல்கலைக்கழகம் சார்பில் எனக்குக் கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate ) வழங்குகிறார்கள் .

இதற்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 19 வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது

சென்னை விழுப்புரம் சாலையில் திண்டிவனத்தை அடுத்த ஓங்கூரில் அமைந்துள்ளது தக்சசீலா பல்கலைக்கழகம்.

ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்துத் தக்சசீலா பல்கலைக்கழகத்தை உருவாக்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் இயங்கி வரும் இப்பல்கலைகழகம் பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது

தக்சசீலா பல்கலைகழகத்தின் நிறுவனரும் வேந்தருமான எம். தனசேகரன் சிறந்த இலக்கிய ஆர்வலர். கல்வியாளர்.

இதுவரை எனது படைப்புகளை ஆய்வு செய்து எட்டு ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் எம்பில் பெற்றிருக்கிறார்கள். பல்வேறு கல்லூரிகளில் எனது நூல்கள் பாடமாக வைக்கபட்டுள்ளன. நானே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு அதனை முடிக்காமல் கைவிட்டவன்.

எனது இலக்கியப் பங்களிப்பிற்காக இந்த மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் செந்தில் நேரில் வந்து தெரிவித்து, முறைப்படியான கடிதம் அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

தக்சசீலா பல்கலைக்கழகத்திற்கும் அதன் நிறுவனர் எம். தனசேகரன் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி

பட்டமளிப்பு விழாவில் எனது நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2026 03:13
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.