“சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு. ஐந்து நூறு பாடல்கள் கொண்டது. குறிஞ்சி நிலத்துக்கு நூறு பாடலும், நெய்தல் நிலத்துக்கு நூறு பாடலும், மருதம் நிலத்துக்கு நூறு பாடலும், முல்லை நிலத்துக்கு நூறு பாடலும் பாலை நிலத்துக்கு நூறு பாடலுமாக ஐந்நூறு பாடல்கள். பனியும் பனிசார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை. புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப்பிரதேசங்களுக்குத்தான்.
என்னுடைய கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருக்கிறது. அதற்கு இரண்டு செட்டை. ஆறுமணிக்குருவியும் (Indian Pitta) இருக்கிறது. அதற்கும் இரண்டு செட்டை. சரியாக காலை ஆறுமணிக்கு இந்தக் குருவி ’கீஈஈஈய்க், கீஈஈஈய்க்’ என்று சத்தமிடும். காகத்துக்கு பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்கு பறந்துபோய் மீண்டும் திரும்பும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவிபோல. அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர்கள் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும். ஆறாம் திணை.”
―
அ.முத்துலிங்கம்,
ஐயாவின் கணக்கு புத்தகம்