“கிருஷ்ணனுக்கு பெண்களைத் தெரியும், யோகியர் உள்ளத்தைத் தெரியும், தத்துவத்தின் போதாமை தெரியும், மனிதர்கள் துவங்கி, ஆநிரை புள்ளினம் என உயிர்க்குலம் மொத்தத்தின் அக மொழியும் புரியும்.
அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.
புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா?”
―
Jeya Mohan,
வெண்முரசு [Venmurasu]