

“ஆணும் பெண்ணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், சேர்ந்தே இயங்க முடியாது. எதிர்காலத்தில் உலகப்போர் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அணி பிரிந்து மூளுவதாக இருக்கும்.”
― ஐந்தவித்தான் [Iynthavithan]
― ஐந்தவித்தான் [Iynthavithan]

“இயல்பிலேயே தமிழ் மொழி அத்தனை கவித்துவமானது; என்னை உனக்கு அடையாளம் காட்டிவிட்டது. ஒழுங்காகத் தமிழ் பேசி வாழ்ந்தாலே நம் மக்களின் ஆயுள் கூடும். நல்ல தமிழ் பேசுபவர்க்கு ரத்த அழுத்தம்,”
― ஐந்தவித்தான் [Iynthavithan]
― ஐந்தவித்தான் [Iynthavithan]

“வறுமை, உறவுகளுக்கிடையே வெறுப்பின் வெம்மையாகச் சுழித்துக்கொண்டோடுகிறது. கைப்பிடியளவு பணம் உனது மரணத்தைத் தள்ளிப்போடக்கூடிய ஆற்றல் கொண்டது.”
― அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]
― அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]

“சங்ககாலச் சிற்றரசர்கள் தங்களிடம் பிச்சை பெற்ற புலவர்களின் பாடல்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்கிறேன், தமிழிலக்கியம் பிச்சைக்காரர்களாலானது; சங்ககாலம் முதல் இன்றைய பின்நவீன காலம்வரை செம்மொழியில் பிச்சைக்காரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். படைப்பாளர்களைப் பிச்சைக்காரர்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகம் திட்டமிட்டு நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. பரிசில் வாழ்க்கை. இந்தியாவில் தலித்தாகப் பிறப்பதைவிடத் தமிழ்க் கவிஞனாகப் பிறப்பது சாபக்கேடானது. திருவள்ளுவர் உணவருந்தும்போது அவருடைய பத்தினி வாசுகி அம்மையார் ஒரு குவளைவில் நீரும் ஊசியும் அருகே வைப்பாராம். அம்மையார் சோறு பரிமாறும்போது இலைக்கு வெளியே சிந்துவதையும், தான் சாப்பிடும்போது கீழே சிந்துவதையும் வள்ளுவர் ஊசியால் குத்தியெடுத்து நீரில் அலசி மீண்டும் இலையிலிட்டுச் சாப்பிடுவாராம். வறுமை அவரைப் பருக்கைகளைப் பொறுக்கித்தின்ன வைத்திருக்கிறது. பாரதியார் சோறு சோறு என எத்தனை இடங்களில் பேய்க்கூச்சல் போட்டிருக்கிறார் என்பதைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டு, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்.”
― ஐந்தவித்தான் [Iynthavithan]
― ஐந்தவித்தான் [Iynthavithan]

“உலகிலேயே தங்கள் தாய்மொழியின் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத ஓர் இனமாகத் தமிழர் இருக்கின்றனர்.”
― ஐந்தவித்தான் [Iynthavithan]
― ஐந்தவித்தான் [Iynthavithan]
Karthick’s 2024 Year in Books
Take a look at Karthick’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Karthick
Lists liked by Karthick