Joseph Rajan
https://www.goodreads.com/imrajja
"பைத்தியக்காரன்னு நினைச்சிக்கிட்டிருக்கானுங்க. இவனுங்க மாதிரி பத்து பைத்தியக்காரனைப் பார்த்தவன் நான். வந்தப் புதுசுல ஒன்னும் தெரியாத இருந்தா எப்பவும் அப்படி யேவா இருந்துடுவான். மொறைக்கிறத விட முழிக்கிறது நல்லதுன்னு சும்மா இருக்கேன்."
“முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முடிவுசெய்தது. பள்ளிப்படிப்பைக்கூட நிறைவுசெய்யாதவர் கருணாநிதி; அப்படிப்பட்ட நபருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை ஏற்கமுடியாது என்பது ஒரு தரப்பு மாணவர்களின் வாதம். பொதுவாக டாக்டர் என்பது கல்வித்தகுதியின் அடிப்படையில் மட்டும் தரப்படுவதில்லை. கருணாநிதிக்கு வழங்கப்பட இருந்த டாக்டர் பட்டம் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் அவர் கொடுத்த பங்களிப்புகளுக்காகவே என்றது பல்கலைக்கழகம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் காங்கிரஸ், இந்திய மாணவர் காங்கிரஸ் என்ற பெயரில் செயல்பட்ட மாணவர்கள் சிலர் கருணாநிதிக்கு எதிராகத் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுக் கண்டித்தனர். கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைக் கட்டித் தொங்கவிட்டுக் கேலி செய்ததாக செய்திகள் பரவின. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதலமைச்சர் கருணாநிதி சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டார். அதன்பிறகுதான் அடுத்த சர்ச்சை வெடித்தது. மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் அறைகளில் தங்கியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலையில் முதல்வருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே மாலையில் மாணவர்கள் காவலர்களால் தாக்கப்பட்டனர் என்ற செய்தி மாணவர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருந்தது. மறுநாள் காலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் குளத்தில் உதயகுமார் என்ற மாணவரின் பிணம் மிதக்கிறது என்ற செய்தி மாணவர்களைக் கதிகலங்க வைத்தது. காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த உதயகுமார் குளத்தில் வீசப்பட்டாரா அல்லது தாக்குதலில் இருந்து தப்பிக்கக் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பதுதான் அப்போது எழுந்த சர்ச்சை. இறந்தது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது காவல்துறை. குளத்தில் விழுந்ததால் முகம் உப்பிப்போய் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்ததால் உடலை உதயகுமாரின் பெற்றோராலேயே அடையாளம் காணமுடியவில்லை. காவல்துறையினரின் மிரட்டல் காரணமாகவே பெற்ற மகனை இல்லை என்று பெற்றோர்கள் சொல்லிவிட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. இறந்துபோன மாணவன் யார் உதயகுமார் என்ற மாணவர் எங்கே போனார்? பட்டமளிப்பு விழா முடிந்து, முதல்வர் புறப்பட்டபிறகும், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாலை வரை எதற்காக இருக்கவேண்டும்? காவலர்கள் மாணவர் விடுதிக்குள் நுழைந்தது ஏன்? தமிழக அரசு சார்பில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டார் முதலமைச்சர் கருணாநிதி. குளத்தில் கிடந்தது உதயகுமாரின் உடலாக இருக்கலாம்; அதேசமயம், அந்த மரணத்துக்கும் காவல்துறை நடத்திய தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் விசாரணை அறிக்கை கூறியது. இருக்கலாம் என்ற பதத்துக்கான அர்த்தம் இன்னமும் விளக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் மாணவர்கள் தாக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்த குரல்களுள் ஒன்று கருணாநிதியுடையது. தற்போது அதே கருணாநிதி ஆட்சி நடக்கும்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அவருடைய ஆட்சியின் மீது விழுந்த கரும்புள்ளி. 1971 ஜூலை மாதத்தில் நடந்த பல்கலைக்கழகக் கலவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ஜனசக்தியில் இன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கட்டுரை ஒன்றை எழுதினார். அதிலிருந்து ஒருபகுதி மட்டும் இங்கே: பட்டம் பெற்ற நவீன உயர்சாதி அகங்காரம்தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் குழப்பங்களுக்கு மூல காரணம். பட்டம் பெறாத பலர் உலகில் பல அரங்கங்களில் ஆற்றியுள்ள பணிகளை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால், இந்தக் கூச்சல் எழுந்திராது. பட்டம் பெற்று ஒருமாதம் ஆவதற்குள் அடுத்த பிரச்னை தலையெடுத்தது. தமிழ்நாட்டில் அப்போது மதுவிலக்கு அமலில் இருந்தது. பலத்த நிதி நெருக்கடி இருப்பதால் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வது அத்தியாவசிய நடவடிக்கை என்றும் பேச்சுக்கள் எழுந்தன. கொள்கை சார்ந்த பிரச்னை என்பதால் மதுவிலக்கு குறித்து கட்சியிலும் பலத்த விவாதங்கள் எழுந்தன.”
― Tamilaga Arasiyal Varalaru - Part - 1 (Tamil)
― Tamilaga Arasiyal Varalaru - Part - 1 (Tamil)
“இன்று ஓரொரு நாளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளாத ஒரு மனிதன் எந்த அமைப்பிலும் நீடிக்க முடியாது. அன்றாடம் கல்விக்கூடங்களுக்குச் செல்வது சாத்தியமல்ல. தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள மனிதனுக்கு இன்றிருக்கும் ஒரே சாதனம் வாசிப்புதான். அன்றாடம் தொடர்ச்சியாக வாசிப்பதொன்றே வழி. மாவீரன் நெப்போலியனின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லும் ஒரு கர்ண பரம்பரை கதை உண்டு. நெப்போலியன் சிறுவனாக இருந்தபோது கட்டாய ராணுவப் பயிற்சிப் பள்ளியில் இருந்தார். பயிற்சி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் அவரது நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து நகர்வலம் சென்றுவிடுவார்கள் அல்லது மைதானத்தில் திரண்டு அரட்டை அடிப்பார்கள். நெப்போலியனோ தனது அறையில் இருந்து வாசித்துக்கொண்டே இருப்பார். அந்த முகாமிற்கு தயிர் ஊற்ற வரும் கிழவி ஒருத்தி, “எப்போதும் அறைக்குள் அமர்ந்து படித்துக்கொண்டே இருக்கிறாயே, நீ என்ன கோச்சா பெண்ணா?” என்று கேலி செய்வாளாம். அன்று பிரான்ஸில் பெண்கள் முக்காடிட்ட வீட்டுக்குள் இருப்பார்கள். வெளியாட்களுக்கு முகம் காட்டும் வழக்கம் இல்லை. நெடுநாட்கள் ஓடின. நெப்போலியன் ராணுவத் தளபதியாக உயர்ந்து பல நாடுகளைக் கைப்பற்றி மாபெரும் பேரரசனாக ஆனார். ஒருநாள் தன் ராணுவப்பயிற்சி பள்ளி இருந்த நகரத்திற்கு படைகளுடன் வந்தார். தயிர்க்கார கிழவியை அழைத்துவரச் சொன்னார். மன்னன் எதற்காகத் தன்னை அழைக்கிறார் என பதைபதைத்தபடி வந்தாள் கிழவி. குதிரையிலிருந்த நெப்போலியன் சொன்னார், “நீ என்ன கோச்சா பெண்ணா எனக் கேலி செய்தாயே… என் நண்பர்கள் கேளிக்கையில் ஆழ்ந்திருந்தபோது நான் நாடுகளின் வரலாற்றை, யுத்த தந்திரங்களை, மகத்தான வெற்றியாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை வாசித்தேன். அன்று விளையாடிய என் நண்பர்கள் படைவீரர்களாக, அதிகபட்சம் சிறிய படையணியின் தலைவர்களாக உள்ளனர். நான் இன்று சக்கரவர்த்தியாக உலகை ஆள்கிறேன்” என்றாராம்.”
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“The official change of name and faith occurred only days before the release of Roja. In fact, in the title sequences of even the final edit of the movie, AR was credited under his old name. ‘Literally just before the release,’ remembers Trilok Nair, ‘we got a call from Amma saying his name in the movie had to be changed. It was a pretty big request to make so late in the day, but she was particular about it. She said it really, really mattered to her personally. In fact, she would’ve rather not had his name appear at all, than not have his new name appear on the credits.’ So Trilok Nair called up Mani Ratnam and asked if he could make the change AR’s mother was asking for. Eventually, Mani Ratnam agreed. ‘If it means so much to this boy,’ he said, ‘I’ll get it done.”
― Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman
― Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman
“நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களைச் சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுவது.”
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“1.கல் மேல் நடந்த காலம் – சு. தியோடர் பாஸ்கரன் 2.அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம் 3.தென்னாப்பிரிக்காவில் காந்தி 4.Rich Dad Poor Dad – Robert Kiyosaki 5.The Art of War - Sunzi 6.Steal Like an Artist - Austin Kleon 7.என் இளமைக்கால நினைவுகள் - ஓஷோ 8.புதுமைப்பித்தன் சிறுகதைகள் 9.ஜெயகாந்தன் சிறுகதைகள் 10.அசோகமித்திரன் சிறுகதைகள் 11.ஓலைப்பட்டாசு சிறுகதைத் தொகுதி, கற்றதும் பெற்றதும் – சுஜாதா 12.புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம் நாவல்கள் 13.Ogilvy David Advertising Books 14.இன்றைய காந்தி, சங்கச் சித்திரங்கள், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு – ஜெயமோகன் 15.திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன் 16.சு. தியோடர் பாஸ்கரனின் சூழியல் நூல்கள் 17.அன்னா கரினீனா, போரும் வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் 18.குற்றமும் தண்டனையும், அசடன் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி 19.The Magic Mountain – Thomas Mann 20.ரேமண்ட் கார்வர் கதைகள் 21.ஆண்டன் செகாவ் கதைகள் 22.என் சரித்திரம் – உ. வே. சாமிநாதய்யர் 23.The 7 Habits of Highly Effective People – Stephen R. Covey 24.Nudge – Richard Thaler 25.மூதாதையரைத் தேடி - சு.கி.ஜெயகரன் 26.இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு – ராமச்சந்திர குஹா 27.எமதுள்ளம் சுடர் விடுக – பிரபஞ்சன் 28.தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன் 29.ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – ஸ்டீபன் ஹாக்கிங் 30.உருவாகி வரும் உள்ளம் - விளையனூர் எஸ். ராமச்சந்திரன் 31.சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி 32.ஹோமோடியஸ் - யுவால் நோவா ஹராரி 33.கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் 34.அ. முத்துலிங்கம் சிறுகதைகள் & வியத்தலும் இலமே 35.சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டேர் 36.வந்தார்கள் வென்றார்கள் – மதன் 37.குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி 38.இந்தியப் பயணங்கள் – ஏ. கே. செட்டியார் 39.காலை எழுந்தவுடன் தவளை – பிரையன் டிரேசி 40.சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா 41.கொங்குதேர் வாழ்க்கை – 2 (நவீன தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு) 42.மோக முள் – தி.ஜானகிராமன் 43.பொன்னியின் செல்வன் – கல்கி 44.எட்டுத் திக்கும் மதயானை, கம்பனின் அம்பறாத்தூணி – நாஞ்சில்நாடன் 45.புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி 46.சிலப்பதிகாரம் 47.காவல் கோட்டம் – சு. வெங்கடேசன் 48.வேலையைக் காதலி – ஆர். கார்த்திகேயன் 49.அப்பம் வடை தயிர் சாதம் – பாலகுமாரன் 50.யேசு கதைகள் – பால் ஸக்காரியா நீங்கள் வாசிப்பிலும் வாழ்க்கையிலும் உயர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! [1] நூல்: புன்னகைக்கும் பிரபஞ்சம். மொழிபெயர்ப்பு: செங்கதிர்”
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
தமிழ் புத்தகங்கள் (Tamil Books)
— 1059 members
— last activity Jan 02, 2026 07:50AM
Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.
Around the World in 80 Books
— 31020 members
— last activity 3 hours, 47 min ago
Reading takes you places. Where in the world will your next book take you? If you love world literature, translated works, travel writing, or explorin ...more
Joseph’s 2025 Year in Books
Take a look at Joseph’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Joseph
Lists liked by Joseph








![ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangaththu Devadhaigal] by Sujatha ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangaththu Devadhaigal] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1558705601l/46004689._SY75_.jpg)




































