Created for one specific purpose–the identification of unnecessary costs–value analysis is a system, a complete set of techniques, properly arranged, for the sole purpose of efficiently identifying unnecessary cost before, during, or after
...more


“இந்து சமுதாயத்தை எடுத்துக் கொள்வோம். இந்தச் சமுதாயம் பிற சமுதாயங்களைப் போலவே பல வர்க்கங்களைக் கொண்டிருந்தது. அவ்வாறு அமைந்த பண்டைய வர்க்கங்களாவன: 1.பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம் 2.சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம் 3.வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம் 4.சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம். இந்தப் பகுப்பு முறைகளை நன்கு கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தம் தகுதிக்கேற்ப பிரிதொரு வர்க்கத்தினராக மாறமுடியும்.”
― இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2)
― இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2)
“சுவாச விளையாட்டு நான் சொல்வதைச் சோதித்துப் பார்க்கலாமா? இதோ ஒரு பரீட்சை... ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். உங்கள் மார்புப் பகுதி விரிவடைகிறதா? அப்படியானால், தவறான சுவாசப் பயிற்சியையே நீங்கள் இதுவரை பின்பற்றி வந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். மீண்டும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். ஆனால், இந்தத் தடவை மார்பு விரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது வயிறு விரிய வேண்டும். மூச்சை வெளியேவிடும்போது வயிறு சுருங்க வேண்டும். ஒரு பலூனானது காற்றை உள்ளே நிரப்பும்போது பெரிதாகும். காற்று வெளியேறினால் சுருங்கிவிடும். அதுபோல் வயிறும் செயல்படவேண்டும். இது சொல்வதற்குத்தான் எளிதுபோல் தோன்றும். உண்மையில் கடினமானதுதான். இந்தப் பயிற்சி செய்ய உதவி தேவையானால் அடி வயிற்றில் கையை அழுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாகக் கையை எடுத்துக்கொண்டு செய்து பழகுங்கள். இப்படிச் சுவாசிப்பதால் குடல் பகுதியும் பிற உறுப்புகளும் சுவாசப் பாதையைத் தடுக்காத வகையில் தள்ளிவைக்கப்படும். நுரையீரலுக்குள் முழு அளவிலான காற்று சென்று சேரும். இதனால், ரத்தத்தில் அதிக ஆக்ஸிஜன் கலக்கும். மூளை உட்பட உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.”
― குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal
― குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal
“மனம் பாவங்களின் இருப்பிடமாக உள்ளதால், அது உலகை அகவய நோக்காகவே (சப்ஜெக்ட்டிவாக) பார்க்கும். உணர்வைக்கூட்டியே விஷயங்களைக் கவனிக்கும். புத்தியோ, ஆலோசனை செய்யும் தன்மையுடையது. உணர்வு பாவங்களை அப்பால் வைத்துவிட்டு, உண்மையை உள்ளபடியே புறவயநோக்காகப் (ஆப்ஜெக்டிவாகப்) பார்க்கும்.”
― Manam Adhu Semmayanal மனம் அது செம்மையானால்
― Manam Adhu Semmayanal மனம் அது செம்மையானால்
“குழந்தைகள் நன்கு தூங்கச் சில ஆலோசனைகள்”
― குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal
― குழந்தை வளர்ப்பு அறிவியல் / Kuzhanthai Valarppu Ariviyal
“நினைவு என்பது மனம். எதை எல்லாம் மனம் நினைக்கிறது? மூன்று விஷயங்களை! 1. காண்பது, கேட்பது, ருசிப்பது, முகர்வது, ஸ்பரிசிப்பது முதலியன (புலன் உணர்ச்சிகள்). 2. வலி, இன்பம், கோபம், பயம், பொறாமை,வெறுப்பு முதலியன (மன உணர்வுகள்). 3. சிந்தனை- நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது பற்றிய நினைவுகள் (நினைவுகள்). இம்மூன்று (புலன் - உணர்வு - நினைவு) விஷயங்களையும் மனம் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது. இதை மனமே ‘நான்’ என்று தன்னை வேறுபடுத்திக் கொண்டு அறிந்தபடியும் உள்ளது!”
― Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி
― Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி
Jayaprakash’s 2024 Year in Books
Take a look at Jayaprakash’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Jayaprakash
Lists liked by Jayaprakash