இந்தியப் பிரிவினை Quotes

Rate this book
Clear rating
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு [Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu] இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு [Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu] by Marudhan
207 ratings, 3.95 average rating, 24 reviews
இந்தியப் பிரிவினை Quotes Showing 1-4 of 4
“உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்துசென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் வந்தால், பாகிஸ்தான்.”
Marudhan, Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)
“அமிர்தசரஸில் உதவி கமிஷனராக இருந்த பிரடரிக் கூப்பர் என்பவரின் வாக்குமூலம் இது. ‘...ஒருவனைத் தூக்குமரத்துக்கு அழைத்துச்சென்றோம். திடீரென்று அவன் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். மயக்கம் தெளிய அவனுக்குச் சிறிது அவகாசம் கொடுத்தோம். அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அவனைத் தூக்கிலிட்டோம். காவல் முகாமிலிருந்து ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டனர். தூக்கிலிடப்பட்டனர். 150...200... கணக்கு ஏறிக்கொண்டே இருந்தது. 237 பேர் வந்ததும் நின்றுவிட்டது. முகாமிலிருந்து அடுத்த நபர் வெளியே வரவில்லை. எங்கள் ஆட்கள் பல தடவை சத்தம் போட்டு கத்தினர், கதவுகளை உதைத்தனர். யாரும் வெளியே வரவில்லை. உடனே கதவுளை உடைத்து உள்ளே புகுந்தோம். அங்கே 45 பேர் உள்ளேயே செத்துக் கிடந்தனர். அடுத்து நம்மை தான் அழைப்பார்கள் என்ற பயத்தினால் அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.”
Marudhan, Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)
“உங்கள் போராட்ட முறை தவறு, அமைதியாகக் காய்களை நகர்த்துவோம் என்று திலகரைத் திருத்த முயன்றார் கோபால கிருஷ்ண கோகலே. ஆனால் திலகரால் சாத்வீக போராட்டத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 1907ம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. ஒரு பக்கம் மிதவாதிகள். மற்றொரு பக்கம் திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் போன்ற தீவிரவாதிகள். மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப். இந்த மூன்று மாநிலங்களிலும் தீவிரவாதிகளின் தாக்கம் அதிகம் பரவியது. தலையே போனாலும் பரவாயில்லை, பிரிட்டனை எதிர்ப்போம் என்னும் எழுச்சி நிலையை மக்கள் அடைந்தனர்.”
Marudhan, Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)
“ஆபரேஷன் மேட்ஹவுஸ் என்று எழுதியிருந்தது. வேவல் விளக்கினார். ‘ஒரு பைத்தியக்கார விடுதி சந்திக்கும் பிரச்னைக்கு ஒப்பானது இந்தியாவின் பிரச்னை. எனவேதான் அப்படி எழுதிவைத்தேன். நிதானமாகப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்பதை நீங்களே உணர்வீர்கள்.’ • உணர ஆரம்பித்தார் மவுண்ட்பேட்டன்.”
Marudhan, Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)