நாளும் கற்போம் Quotes

Rate this book
Clear rating
நாளும் கற்போம் நாளும் கற்போம் by குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
1 rating, 3.00 average rating, 1 review
நாளும் கற்போம் Quotes Showing 1-16 of 16
“மனித குலத்தின் உயிர்த் துடிப்பு என்பது, பிறர் விழிகளில் வருகின்ற நீரைத் துடைப்பது தான், உண்மையான உயிர்த் துடிப்பின் பயன்பாடு.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“என்னுடைய பொருள்கள் என்னுடையவை; உன்னுடைய பொருள்களும் என்னுடையவை' என்று சொல்வபன் 'அதமன்'.
'என்னுடைய பொருள்கள் என்னுடையவை; உன்னுடைய பொருள்கள் உன்னுடையவை' என்று சொல்பவன் 'மத்திமன்'.
'என்னுடைய பொருள்களும் உன்னுடையவை; உன்னுடைய பொருள்களும் உன்னுடையவை' என்று சொல்பவன் 'மனிதன்'.
ஆனால், 'என்னுடைய பொருள்களும் என்னுடையவை அல்ல; உன்னுடைய பொருள்களும் உன்னுடையவை அல்ல' என்று சொல்வபவன் தான் 'ஞானி'. அந்த வாழ்க்கையை வாழ முயற்சி செய்வோம்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“மனிதர்களே! மனிதர்களே! மரணத்திற்கு 'இந்து' இல்லை. மரணத்திற்கு 'இஸ்லாமியன்' இல்லை. மரணத்திற்கு 'கிறிஸ்தவன்' இல்லை. மரணம் எப்படி சகலருக்கும் பொதுமையோ, அதைப்போல, 'நீ வாழும் காலத்தில் பொதுமையாய் வாழ்ந்து காட்டு'.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“உலகத்திலேயே ஒரு மொழிக்கு இறைத்தன்மை உண்டு என்றால், உலகத்திலேயே சமயத்தை ஒரு மொழி காத்தது என்ற பெருமை இருக்குமேயானால், அது தன்னார்ந்த தமிழ் மொழி ஒன்றுக்குத்தான், அந்தப் பெருமை உண்டு.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“இன்றைக்கு வழிபாட்டு உலகம் வணிகமயம் ஆகிவிட்டது. ஏன் சடங்குகளே கடவுள் ஆகிவிட்டது. கடவுளே காட்சி தந்தாலும் சற்று ஓய்வாக உட்காருங்கள் என்று சாய்வு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, பூசாரி புரோகிதர்களையே கடவுளாக வழிபடுகிற நிலை.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“ஒற்றை ஒற்றையாய் நம் வீட்டில் குழந்தைகள்... இனி பிறக்கிற குழந்தைகளுக்கு அண்ணன் இல்லை... தம்பி என்றால் தெரியாது... தங்கை என்றால் புரியாது... அக்கா என்றால் அறியாது... ஒன்று பெற்றால் ஒளிமயம், என்று ஒளிமயமான வாழ்க்கைக்கு வழி கோலியதன் விளைவு. ஒரு புறத்தில் வரவேற்பு... மறுபுறத்தில் துன்பம்... ஆனால் இனி இந்த உறவுகளுக்கு, இனி யார் உறவு? இந்த உறவுகளுக்கு எல்லாம் இனி தோழமை தான் உறவு.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“திருடர்களை விட, விலை மகளிரை விட, நண்பன் போலப் பழகுகிறவன் ஆபத்தானவன்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“ஒரு தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ வேண்டிய அக வாழ்க்கை... அந்த வாழ்க்கை கூட, புனிதமான தோழமை என்று சொன்னவர் திருவள்ளுவர்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“யார் உண்மையான நண்பர்கள்... பார்த்தால் சிரித்துப் பேசுகிறார்கள்... நலம் விசாரிக்கிறார்கள்... கைலகுலுக்குகிறார்கள்... ஆனால் நண்பன் இல்லாத இடத்தில், அவன் வாழ்வின் வளத்திற்கே குழி தோண்டுகிறார்கள்... இன்றைய நண்பர்கள் உலகம் இரு வேறு உலகமாய் போய்விட்டது. அதனால் தான் இன்றைக்கு கவிஞர்கள் பாடுகிறார்கள், நட்புக்கும் கற்பு உண்டு என்று.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல் தான்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“யாரொடும் பகை கொள்ளலாம் என்ற பின் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது' என்றான் கம்பன்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“திருக்குறள் முழுவதும் தேடிப் பார்த்தால், இப்படி ஒரு வழிகாட்டுதல் ஆணை இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டையும், சமூகத்தயும், உலகத்தையும் பார்த்து, திருவள்ளுவர் சொல்லுகிற ஒரே ஆணை... 'கற்க'... என்று ஆணையிடுகிறார்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“பெரிய அரங்கங்களின் மேடை விழாக்களில் கூட, ஆடை போர்த்துவதைத் தவிர்த்துவிட்டு, நூலாடை போர்த்துவதைத் தவிர்த்துவிட்டு, நூலையே ஆடையாகத் தரலாம். நூலாடை என்பது உடலை மறைக்கும். நூலாகிய ஆடையோ உயிரின் மானத்தை காக்கும்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“வாழ்க்கை நம் வசப்படுகிறபோது நாம் தோற்றுப்போகிறோம். வாழ்க்கை வசப்படுகிற போது யார் விழித்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிழைப்பதும் கூட விலங்குகளின் வாழ்க்கை. வாழ்க்கை வசப்படும்போது, யார் வாழக் கற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“வாசிப்பதை உயிரின் நேசிப்பாக கடந்த காலத் தலைமுறை நினைத்தது. அன்றைக்கு யாரெல்லாம் வாசிக்கிறார்களோ, அவர்கள் தான் சுவாசித்து இருக்கிறார்கள். இன்றைக்கு வாசிப்புப் பழக்கம் நாளும் நாளும் மழுங்கிக் கொண்டு வருகிறது.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்
“வானம் பொழிய வேண்டும், வையம் செழிக்க வேண்டும்' இது வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் அல்ல. வாழ்க்கைக்குத் தேவையான நிதர்சனம். ஆனால் மழை வர வேண்டும் என்பதற்காக யார் யாரோ யாகங்களை நடத்துகிறார்கள். கோடி கோடியாய் கொட்டி யாகம் நடத்திப் பார்த்தார்கள். அந்த வேள்வியின் புகையில் அவர்கள் கண்களில் கண்ணீர் வந்தது தான் மிச்சம். கடவுள் கருணை காட்ட மறந்தான்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்