ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் Quotes
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
by
ஜெ. பிரான்சிஸ் கிருபா20 ratings, 4.35 average rating, 5 reviews
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் Quotes
Showing 1-9 of 9
“உயர் பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்தியிட்டு
தன் வயிற்றில் இறங்கி முழு
வட்டமடித்த கத்தியைத்
தலை தூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்தியிட்டு
தன் வயிற்றில் இறங்கி முழு
வட்டமடித்த கத்தியைத்
தலை தூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“ஒருத்தியை
உயிரோடு புதைத்திருக்கும்
இரண்டு
கல்லறைகளாகவும் பார்க்கலாம்
முலைகளை.”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
உயிரோடு புதைத்திருக்கும்
இரண்டு
கல்லறைகளாகவும் பார்க்கலாம்
முலைகளை.”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“உயிர் பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்தியிட்டு
தன் வயிற்றில் இறங்கி முழு
வட்டமடித்த கத்தியைத்
தலை தூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்தியிட்டு
தன் வயிற்றில் இறங்கி முழு
வட்டமடித்த கத்தியைத்
தலை தூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“தூண்டில்காரனிடம்
சிக்கிவிட்ட மீன்
நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்
புதிய நம்பிக்கையோடும்
மீதி வாழ்வின் முன்வாசலில்
மெல்ல நீந்திப் பார்க்கிறது
பாதியளவு நீர் நிரப்பிய தோள்பையுள்”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
சிக்கிவிட்ட மீன்
நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்
புதிய நம்பிக்கையோடும்
மீதி வாழ்வின் முன்வாசலில்
மெல்ல நீந்திப் பார்க்கிறது
பாதியளவு நீர் நிரப்பிய தோள்பையுள்”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“இறப்பதுபோல் எல்லோரும் காண்கிறார்கள்
ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும்
பிறப்பதுபோல் வந்திருக்குமா
யாருக்கேனும் ஒன்று”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும்
பிறப்பதுபோல் வந்திருக்குமா
யாருக்கேனும் ஒன்று”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“துயிலெழுந்துவிட்டார் நீதிபதி
வாக்கிங் புறப்பட்டுவிட்டார் வக்கீல்
குளியல் முடித்துவிட்டார் காவலர்
சீருடை பூண்டுவிட்டார்
தண்டனைச் சிப்பந்தி
நானோ
இன்னும் என் குற்றங்களை
செய்யத் தொடங்கவில்லை!”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
வாக்கிங் புறப்பட்டுவிட்டார் வக்கீல்
குளியல் முடித்துவிட்டார் காவலர்
சீருடை பூண்டுவிட்டார்
தண்டனைச் சிப்பந்தி
நானோ
இன்னும் என் குற்றங்களை
செய்யத் தொடங்கவில்லை!”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“பஸ் நிறுத்தங்களில்
காத்திருக்கும் பார்வையில்
எந்த கணம் எவளை
எப்படி பேரழகியாக்கும்
என்பது நிச்சயங்களற்றது”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
காத்திருக்கும் பார்வையில்
எந்த கணம் எவளை
எப்படி பேரழகியாக்கும்
என்பது நிச்சயங்களற்றது”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
“கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது
ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது
ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது”
― ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
