Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following செல்வம் அருளானந்தம்.

செல்வம் அருளானந்தம் செல்வம் அருளானந்தம் > Quotes

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-13 of 13
“சிலுவையை முதுகில் தாங்கி, விபூதி பூசிய ஒரு கருத்த யேசு அங்கும் இங்கும் நடப்பதுபோல இருந்தது.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“உண்மையிலை பொன்மலர் ஊரிலேயே வடிவான பெட்டை. தான் வடிவெண்டு அவவுக்கும் தெரிஞ்சுபோச்சு. அதுதான் பிரச்சினை.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“பின் கோடைக்காலத்துச் செந்நிறச் சூரியன் செயின் ஆற்றில் தற்கொலை செய்துகொள்கின்ற காட்சி துக்கத்தைத் தந்தது.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“நான் சின்னனாயிருக்கேக்கை அப்பரோடை ஒருநாள் பஸ்சிலை போய்க்கொண்டிருந்தன். அப்பற்ரை நண்பர் ஆரோ அவரைப் பாத்து 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?' எண்டு கேக்க, அவர் என்னக் காட்டி, இவன் ஒண்டு, பிறகு விரலை மடிச்சு, ரவி ரண்டு, குமார் மூண்டு எண்டு கணக்குப் பாத்து ஐஞ்சு பிள்ளையள் எண்டார். கேட்டுக்கொண்டிருந்த நான், அப்பா 'சுகன விட்டிட்டியள்' எண்டு சொல்ல

'சொரி சொரி' ஆறுபேர் எண்டார்.

'கேட்ட அந்த ஆள் அப்பரைப் பத்தி என்ன அண்ண நினைச்சிருக்கும். சிரிச்சுப்போட்ப் பேசாம இருந்திட்டுது.”
செல்வம் அருளானந்தம், சொற்களில் சுழலும் உலகம்
“வானத்தாலை போன பிசாசை ஏணிவைத்து இறக்கின கதையாய்க் கிடக்கு”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“குரங்கில் இருந்து மனிதன் பிறந்தானா? அல்லது குரங்கில் இருந்து துரத்தப்பட்டானா?”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“இராமனுக்கு கம்பராமாயணம் முழுக்கப் பாட்டு இருக்கு. பரதன், ஏன் இலட்சுமணக்குக்கூடப் பாட்டுக்கள் பல இருக்கு. பாவம் அந்தச் சத்துருக்கன் அவனும் ஒரு சகோதரன்தானே, ஒரு ராசக்குமாரன்தானே. அவனுக்கு ஒரேயொரு பாட்டுத்தான் இருக்கு.”
செல்வம் அருளானந்தம், சொற்களில் சுழலும் உலகம்
“நான் சின்னனாயிருக்கேக்கை அப்பரோடை ஒருநாள் பஸ்சிலை போய்க்கொண்டிருந்தன். அப்பற்ரை நண்பர் ஆரோ அவரைப் பாத்து 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?' எண்டு கேக்க, அவர் என்னக் காட்டி, இவன் ஒண்டு, பிறகு விரலை மடிச்சு, ரவி ரண்டு, குமார் மூண்டு எண்டு கணக்குப் பாத்து ஐஞ்சு பிள்ளையள் எண்டார். கேட்டுக்கொண்டிருந்த நான், அப்பா 'சுகன விட்டிட்டியள்' எண்டு சொல்ல

'சொரி சொரி' ஆறுபேர் எண்டார்.

'கேட்ட அந்த ஆள் அப்பரைப் பத்தி என்ன அண்ண நிறைந்திருக்கும். சிரிச்சுப்போட்ப் பேசாம இருந்திட்டுது.”
செல்வம் அருளானந்தம், சொற்களில் சுழலும் உலகம்
“அவன் பூசியிருக்கும் திருநீறைக் காட்டி, "இந்த மேக்கப் எனக்கு நல்லாய்ப் பிடிக்கும். நாளைக்கு எனக்கும் கொஞ்சம் கொண்டுவந்து தரும்படி சொல்லுங்கோ" என்று பேசிக் கொண்டேயிருந்தாள்.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“அடுத்தநாளே சில ஒழுங்குகளச் செய்து, யாழ்ப்பாணக் கரையொண்டில போய் இறங்கினன். கனகாலத்துக்குப் பிறகு அந்த மண்ணில கால் பட்டதில மனசில ஒரு மகிழ்ச்சி வந்துது. ஆசையா வீட்டை நோக்கி நடந்தன்.

வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சொறி பிடித்த நாய் என்னைச் சுற்றிச்சுற்றி வந்துது. அதின்ர நிறத்தை உத்துப் பார்க்க, ஞாபகம் வந்துது. அது தங்கச்சிமார் ஆசையா வளர்த்த நாய். அப்ப அது அழகான குட்டி.

இப்ப சாப்பாடும் இல்லாமல கவனிப்பாரும் இல்லாமல சொறி பிடிச்சு அலைஞ்சு திரியுது. எனக்கு என்ர வாழ்வுதான் ஞாபகம் வந்துது.”
செல்வம் அருளானந்தம், சொற்களில் சுழலும் உலகம்
“ஊரே மனநோயாளிகளின் விடுதி போல் இருந்தது. இங்காலை இரண்டு பேரும் அங்காலை இரண்டு பேரும் காரணத்துடனும் காரணம் இல்லாமலும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிடுவதற்கும் பொய் சொல்வதற்குமே மக்கள் வாய் திறந்தார்கள்.
குரங்கில்  இருந்து மனிதன் பிறந்தானா? அல்லது குரங்கில் இருந்து துரத்தப்பட்டானா? என்று யோசித்த வண்ணம் நடந்துகொண்டிருந்தேன்.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“வெள்ளை இருட்டுக்குள் ஒரு கறுத்த சூரியன்”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்
“இந்தியன் ஆமி வந்து நிண்ட காலம் அது. இவர் நல்ல வெறியில் வந்திருக்கிறார். ஆமி மறிச்சு 'ஐடி பிளிஸ், ஐடி பிளிஸ்' எண்டு கேட்டிருக்கு. இவர் திருப்பி 'யுவர் பாஸ்போட் பிளீஸ், யுவர் பாஸ்போட் பிளீஸ்' எண்டு கேட்டிருக்கிறார்.”
செல்வம் அருளானந்தம், சொற்களில் சுழலும் உலகம்

All Quotes | Add A Quote