Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Patrick Olivelle.
Showing 1-30 of 75
“நமக்குக் கிடைத்திருப்பதன் அடிப்படையில் சொல்வதென்றால், அசோகர் அவருக்காக என்று எந்த நினைவுச்சின்னத்தையும் கட்டியெழுப்பவில்லை.”
― Ashoka: Portrait of a Philosopher King

“பிந்தைய இந்திய அரசர்களின் 'கல்வெட்டியலார்ந்த பழக்கம்' என்று குறிப்பிடுவதோடு ஒப்பிட்டு அசோகக் கல்வெட்டுகள் எவ்வளவு தனித்துவமானவையாகவும் வழக்கத்துக்கு மாறானவையாகவும் இருக்கின்றன என்று ரிச்சர்ட் சாலமன் குறிப்பிடுகிறார். 'வடிவம், உள்ளடக்கம், தொனி, இவற்றில் அசோகக் கல்வெட்டுகளை ஒத்திருக்கக்கூடிய ஒன்றைக்கூட இந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு உலகில் நம்மால் காண முடியவில்லை.' மேலும், 'நன்மதி கூறும் பண்பைக் கொண்டிருக்கும் அரசுக் கல்வெட்டுகள் மிக அபூர்வமானவையாக இருக்கின்றன' என்றும் 'சொல்லப்போனால், இப்பண்பு அசோகக் கல்வெட்டுகளில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது' என்றும் சாலமன் சேர்த்துக்கொள்கிறார்.
நான் மேலே சொல்ல முயன்றிருப்பதை சாலமன் கூற்று முன்மொழிவதாக இருக்கிறது. அதே சமயத்தில், அசோகரது தனித்துவத்துக்கான காரணத்தையும் முன்வைக்கிறது. அவரது கல்வெட்டுகள், அரசருடைய பெருமைகள், சாதனைகள் போன்று பொதுவான புகழுரை ஆவணங்களாக இல்லாமல், கல்லில் செதுக்கப்பட்ட கடிதங்களாகவும் நன்மதிகளாவும் இருக்கின்றன. இவை தார்மிக விஷயங்களோடு தொடர்புடைய நிதானமான அறிவுரைகளாக இருக்கின்றன; போர்கள் எவ்வளவு கொடூரமானவை என்று காட்டுவதற்கும், அவரது செயல்களுக்காக மன்னிப்புகோருவதற்கும், அவரது சந்ததியினர் அதிகாரத்தையும் பெருமையையும் நாடுவதற்கு பதிலாக தர்மத்தின் மூலமாக வெற்றிகொள்ள விழைய வேண்டும் என்று சொல்வதற்கும் கலிங்க வெற்றி குறித்த பதிப்பு காணப்படுகிறதே தவிர, அரசனின் வெற்றி அல்லது அதிகாரம் போன்றவை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. இந்த எழுத்துக்களின் தனித்துவமான இயல்பு, இவற்றை வெறுமனே அரசாணைகளாகவும் புகழுரைகளாகவும் பார்க்காமல் தனித்த இலக்கிய வகையாகப் பார்க்க முயல்வதை நியாயப்படுத்துகிறது.”

“ஓர் எழுத்தாளாராக அசோகர் இரண்டு விதத்தில் தனித்துவமானவராக இருக்கிறார்: இந்தியத் துணைக்கண்டத்தில் முதல் கல்வெட்டுக்களை எழுதியவராகவும், இந்த எழுத்து வடிவத்தைக் கண்டுபிடித்தவர் என்பதற்கான சாத்தியப்பாட்டைக் கொண்டிருப்பவராகவும் இருக்கிறார். குறைந்தபட்சம், இந்த எழுத்து வடிவத்தைப் பெருமளவில் பயன்படுத்தியவராகவும் பரப்பியவராகவும் இருக்கிறார். இதன் மூலம், துணைக்கண்டம் முழுக்கக் கல்வியறிவைப் பரப்பியவராகவும் இருக்கிறார்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அசோகரது தர்மம் குறித்து ஜான் ஸ்ட்ராங் பயனுள்ள வகையில் தொகுத்துக்கொடுக்கிறார்: 'அசோகருக்கு தர்மம் என்பது வினையாற்றும் சமூக அக்கறையாகவும், மத சகிப்புத்தன்மையாகவும், சூழலியல் பிரக்ஞையாகவும், பொதுவான அறக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகவும், போர்களைத் துறப்பதாகவும் இருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியும்.' ஆக, அசோகருக்கு தர்மம் என்பது சுயத்தை மேம்படுத்திக்கொள்வது, சமூகரீதியாகத் தீவிரமாகச் செயல்படுவது ஆகிய இரண்டுமாக இருக்கிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“பௌத்தத் துறவற அமைப்புகள் விஷயத்தில் குறுக்கீடு செய்யும் அசோகரது அணுகுமுறையை பைரத் கல்வெட்டு எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறதோ அதுபோலவே பிளவு அரசாணை என்றழைக்கப்படும் ஒன்றும் வெளிப்படுத்துவதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. சாஞ்சி, சார்நாத், அலஹாபாத் ஆகிய மூன்று இடங்களில் உள்ள மூன்று தூண்களில் மூன்று விதமான பதிப்புகளை இந்த அரசாணை கொண்டிருக்கிறது. சார்நாத்தில் உள்ளதுதான் மிக நீண்டதாக இருக்கிறது; இரண்டு தனித்த பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது பகுதி, அரசாணையின் முறையான பகுதியாக இருப்பது, துறவறக் குமுகத்துக்குள்ளாகக் காணப்படும் கருத்து மோதல்களைக் கையாள்கிறது. இந்தப் பகுதி மூன்று இடங்களிலும் வேறான வடிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது பகுதி தன்னுடைய அதிகாரிகளுக்கான அசோகரது அறிவுரைகளைக் கொண்டிருக்கிறது. அதாவது, இந்த அரசாணையைக் கொண்டு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதைத்தான் நாம் 'முகப்புக் கடிதம்' என்று அழைக்கிறோம். இது பொறிக்கப்படுவதற்கான ஒன்றாக இருந்திருக்க முடியாது. இந்தக் கடிதத்தையும் பொறித்தது என்பது அதிகாரிகள் செய்த 'பிழை'யாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், வரலாற்றியலாளர்களுக்கு இது தெய்வாதீனமான ஒன்றாகிறது. இப்படி ஒரு பிழையைச் செய்யும் அளவுக்கு அறிவுகொண்டிருந்த சார்நாத் அதிகாரிகளுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த அரசாணை மூன்று இடங்களிலும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. கிடைக்கும் துண்டுகளையெல்லாம் லுத்விக் அலஸ்டார்ஃப் தோராயமாக ஒன்றுசேர்த்திருக்கிறார்:
'சங்கத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சங்கத்தில் எப்படியான பிளவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சங்கத்தை பிளவுபடுத்துகிறவர்கள் யாராக இருந்தாலும், அது பிக்குவாக அல்லது பிக்குனியாக இருந்தாலும், அந்த நபருக்கு வெள்ளை ஆடை அணிவித்து, மடாலயத்துக்கு வெளியே வாழும்படி செய்ய வேண்டும்.'
இந்த அரசாணையின் நோக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது: சங்கத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கட்டிக்காக்கப்பட வேண்டும்; சங்கத்துக்குள் பிளவுகளை உருவாக்கும் பிக்குகளை, பிக்குனிகளை வெளியேற்ற வேண்டும் என்றே அசோகர் விரும்புகிறார். இது பொதுவான கட்டளையாக இருக்கிறதா அல்லது ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மடாலயங்களில் நடந்த குறிப்பிட்ட நிகழ்வை அசோகர் எதிர்கொள்வதாக இருக்கிறதா என்பது அவ்வளவு தெளிவாக இல்லை. தன் அதிகாரிகளுக்கு முகப்புக் கடிதத்தில் அவர் கொடுத்திருக்கும் அறிவுரையைப் பார்த்தால் பிந்தையதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.”

“தர்மம் குறித்த அவரது முறையான வரையறையில் அகிம்சை முக்கியமான ஒன்றாக உள்ளடங்கியிருப்பதற்கு மேல், நான் இது குறித்து விவாதிக்கவிருக்கிறேன்: விலங்குகளைக் காயப்படுத்துவதை, கொல்வதை எதிர்த்துப் பல பிரகடனங்களில் அசோகர் அகிம்சையை ஊக்குவிக்கிறார். அகிம்சையோடு தொடர்புடைய அவரது கொள்கையைத் தூண் அரசாணை II-இல் மிகச் செறிவாக முன்வைக்கிறார்:
'இருகால் பிராணிகளுக்கும் நான்குகால் பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் நீர்வாழ் விலங்குகளுக்கும் நான் பலவிதமான நன்மைகள் செய்திருக்கிறேன். ஏன் வாழ்க்கையின் கொடையையும்கூட அளித்திருக்கிறேன். மேலும், நான் பலவிதமான நற்காரியங்களும் செய்திருக்கிறேன்.'
எல்லா உயிரினங்களின் – பறவைகள், மீன்கள், நில விலங்குகள், மனிதர்கள் — துயரத்தைப் போக்குவதற்கான அசோகரது முயற்சிகள், துயரத்தையும் வலியையும் கொடுக்கக்கூடிய முத்திரைகுத்துதல், விரையறுப்பு போன்ற பல கொடூரமான செயல்களை நிறுத்திவைக்கும் அளவுக்கு விரித்துக் கொண்டுசெல்லப்பட்டது. மதரீதியான, பண்பாட்டுரீதியான முக்கியத்துவம் கொண்ட நாள்களிலும் பருவங்களிலும் இவை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.”

“தர்மம் குறித்த இந்த எழுத்துகள் கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியால் இங்கே பொறிக்கப்பட்டுள்ளன. இவை பெருமளவு அல்லது ஓரளவு சுருக்கப்பட்ட வடிவத்தில் அல்லது மிக விரிவான வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில், எல்லா விஷயங்களும் எல்லா இடங்களுக்கும் உகந்தவையாக இருப்பதில்லை. ஏனெனில், என்னுடைய நிலப்பரப்பு மிக விரிந்தது. மேலும், நான் நிறைய எழுதியிருக்கிறேன். எப்போதும் நான் இன்னும் கூடுதலாக நிறைய எழுதியிருக்கிறேன். இவற்றில் பல, அவை கொண்டிருக்கும் வசீகரத்தாலும் மக்கள் அதற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதற்காகவும் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்றன. இங்கு, அங்கு என்று ஒருசில விஷயங்கள் முழுமையற்றவையாகவோ அல்லது ஒரு பிரதேசத்துக்கு உகந்தவையாக இல்லாமலோ இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட காரணத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாக இருக்கலாம் அல்லது எழுத்தர்களின் பிழைகளாகவும் இருக்கலாம்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“வேறு பல பண்டையச் சமூகங்களில் இருந்ததுபோலவே, அசோகருடைய சமூகத்திலும் அடிமைகள் கொண்டிருப்பது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமாக இருந்தது. தார்மிகரீதியாக இது இழிவான ஒன்றாகப் பார்க்கப்படவில்லை — நற்பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, தார்மிக நடத்தை கொண்ட ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அசோகருக்கும்கூட இது இழிவாகத் தெரியவில்லை.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“பாறை அரசாணை VI -இல், அவரது பிற செயல்பாடுகளுக்கு இடையூறாக இருந்தாலும்கூட, இப்படியான விஷயங்களைத் தனது கவனத்துக்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று அசோகர் அறிவுறுத்துகிறார். இங்கு, பிரஜைகளின் நலன் மீது எப்போதும் அக்கறைகொண்டிருக்கும், பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிடக்கூடிய ஒருவராகத் தன்னை அதிகாரிகளுக்கு உணர்த்த முயல்கிறார். பிற விஷயங்களில் உள்ளதுபோலவே, இவ்விஷயத்தில் அவருக்கு முன் இருந்தவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்கிறார்.
"கடந்த காலங்களில், இப்படியான நடைமுறை இருந்ததில்லை : எந்த நேரத்திலும் கவனம்செலுத்த வேண்டிய விவகாரங்கள் அல்லது தொடர்புடைய விஷயங்களைக் கவனத்துக்குக் கொண்டுவருவது. ஆனால், நான் இவ்வாறு செய்திருக்கிறேன்.
எந்த நேரத்திலும் — நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், என்னுடைய இருப்பிடத்தில் இருந்தாலும், என்னுடைய அந்தப்புரத்தில் இருந்தாலும், பண்ணையில் இருந்தாலும், வண்டியில் இருந்தாலும் அல்லது பூங்காவில் இருந்தாலும் — எந்த இடத்தில் இருந்தாலும், மக்கள் விவகாரங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன்.
மேலும், வாய்மொழியாக நான் என்ன கட்டளையிட்டாலும், அது தானம் கொடுப்பது அல்லது பிரகடனப்படுத்துவது குறித்ததாக இருந்தாலும் அல்லது மஹாமாத்ரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு தொடர்பான அவசரச் செய்தியாக இருந்தாலும் — இப்படியான விஷயங்கள் குறித்து சபையில் முரண்பாடுகள் அல்லது விவாதங்கள் நடந்தால், அது குறித்து, எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் என்னிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இப்படியாக, நான் கட்டளையிடுகிறேன்.”

“சாதாரண மக்கள், மடாலயங்களில் உள்ளவர்கள் ஆகிய இருசாராருக்கும் தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் பரிந்துரைக்கும் அளவுக்கு அவர் புத்தகப்புழுவாக பைரத் கல்வெட்டில் வெளிப்படுகிறார். இந்தக் கல்வெட்டில் மட்டும்தான் அவர் பிக்குகளோடும் பிக்குனிகளோடும் நேரடியாகப் பேசுகிறார்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அசோகர் குறிப்பிடுகிறார்: 'கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, திருவிழாக்களின்போது நிறைய பாவங்கள் செய்யப்படுவதாகப் பார்க்கிறான்.' இது போன்ற தருணங்களில் விலங்குகள் சடங்குரீதியாகப் பலிகொடுக்கப்பட்டதுதான் இதற்கான முக்கியக் காரணமாகிறது. சடங்குரீதியாக விலங்குகள் பலிகொடுக்கப்படுவதைக் குறிக்க அசோகர் பயன்படுத்தும் சொல் மிக முக்கியமாகிறது. இவை நேரடியாக அல்லது மறைமுகமாக வேதப் பார்ப்பனியச் சொல்லாடல்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கின்றன. விலங்குகள் பலிகொடுக்கப்படுவதை அல்லது சடங்குகளோடு தொடர்புடைய நிகழ்வுகளை அசோகர் பார்ப்பனர்களோடு எங்கும் தொடர்புபடுத்தவில்லை என்றாலும்கூட, இவ்வாறான தடையாணை பார்ப்பனர்களின் சடங்குச் செயல்பாடுகளில் மையமாக இருந்ததன் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
வேதச் சடங்குகள் விலங்குகள் பலிகொடுப்பதையும் அவற்றைப் படையலிடுவதையும் கொண்டிருந்தன.”
― Ashoka: Portrait of a Philosopher King
வேதச் சடங்குகள் விலங்குகள் பலிகொடுப்பதையும் அவற்றைப் படையலிடுவதையும் கொண்டிருந்தன.”
― Ashoka: Portrait of a Philosopher King
“அசோகரது எழுத்துக்கள்ப் பொறிக்கும் செயல் மிகச் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்திருக்க வேண்டும். இந்தியாவில் இதற்கு முன் கல்வெட்டு மரபு என்று எதுவும் இருந்ததில்லை. மிகப் பெரிய அளவில் எழுத்தர்களையும் கல்தச்சர்களையும் இதற்காகப் பயிற்றுவித்திருக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் முகமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது உருவாக்கங்களில் தங்களுடைய கையொப்பம் என்று எதையும் அவர்கள் பொறிக்கவில்லை — துணைக்கண்டத்தின் வடமேற்கில் உள்ள கந்தாரா பகுதியைச் சேர்ந்த துடிப்புமிக்க, சபடா என்ற பெயர் கொண்ட ஓர் எழுத்தரைத் தவிர. அவரது உள்ளூர் எழுத்து வடிவம் கரோஷ்தீயாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், தெற்கு கோடி கர்நாடகத்தில் உள்ள பிராமி கல்வெட்டின் முடிவில் கரோஷ்தீ எழுத்து வடிவில் கையெழுத்திட்டிருக்கிறார். நிச்சயமாக, அசோகரால் பணியமர்த்தப்பட்ட எழுத்தர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவதற்குக் குறுக்கும்நெடுக்கும் பெரும் தொலைவு பயணித்திருக்க வேண்டும். அசோகரது கல்வெட்டியலார்ந்த மரபில் இவர்கள் கொண்டாடப்படாத நாயகர்களாகிறார்கள்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அவர் அரியணை ஏறி இருபத்தேழு வருடங்கள் கழிந்த பிறகு, வயதான மனிதராக அவர் தூண் அரசாணை VII-இல், அவர் செய்த நற்காரியங்கள் குறித்து நினைத்துப் பார்க்கிறார். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நிழல் தரும் விதத்தில் சாலையோரங்களில் ஆலமரம், மாமரம் போன்றவை உள்பட நட்டு வளர்த்திருந்தார். மேலும் 8 கரஸோகள் (தோராயமாக 28 கிலோமீட்டர்) இடைவெளியில் பயணிக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பயன்தரும் விதத்தில் சத்திரங்களையும் கொட்டகைகளையும் உருவாக்கியிருந்ததோடு, தண்ணீர்த் தேவைக்காகக் கிணறுகளையும் வெட்டியிருக்கிறார்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், அசோகர் ஆட்சிசெய்த சமூகம் அடிப்படையில் ஆணாதிக்கச் சமூகமாக இருந்தது என்பது மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறது என்று சொல்லலாம். அசோகரது எழுத்துக்களில் பெண்கள் ஏறக்குறைய புலப்படாதவர்களாக இருப்பதை இது விளக்கவும் செய்கிறது. பெண்கள் இவரது எழுத்துக்களில் மனைவி, தாய் என்று இரண்டு பிரதானப் பாத்திரங்களை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், திருமணம் செய்துகொள்ளாத சுதந்திரமான பெண்கள், ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளுக்கு வெளியே சுயசார்புள்ள குழுமங்களாகத் தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக்கொண்டது என்பது — பிக்குனிகள் இதைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் — அக்காலத்தில் பெண்களின் மற்றொரு பக்கத்தை, அவர்களுடைய பாத்திரத்தை, விழைவுகளைத் திறந்துகாட்டுவதாக இருக்கிறது. அக்காலத்தில், வேறு எந்தச் சமூகத்திலும் இதற்கு இணையான பெண்-மைய நிலைப்பாட்டை நம்மால் பார்க்க முடியாது.
மேலும் ஒரு மௌனம் காணப்படுகிறது. ஆனால், அது புதிராகவும் இருக்கிறது. தர்மத்தை அசோகர் கருத்தாக்கம் செய்வது என்பது ஒரு மனிதரைச் சுற்றி — இது பெரும்பாலும் ஆணாக இருக்கிறது — காணப்படும் உறவுமுறைகளின் அடிப்படையில் கட்டப்பட்டதாக இருக்கிறது. அசோகர் மூன்று வகையான உறவுமுறைகளை முன்வைக்கிறார் என்றாலும் அதில் மிக முக்கியமான ஒன்றை அவர் தவிர்க்கிறார்: மனைவி. மனைவி என்பவர் அவரது எழுத்துகளுக்குள் நுழையவில்லை. கணவன் - மனைவி உறவை எப்படி முறையாக வளர்த்துக்கொள்வது என்று அசோகர் வரையறுக்கவில்லை. இது, அசோகர் விட்டுச்சென்றிருக்கும் மற்றொரு புதிராக இருக்கிறது.”

“இங்கு ஓர் அரசன் கலிங்கத்தில் ஏற்படுத்திய பேரழிவைப் பொதுவெளியில் ஏற்றுக்கொள்கிறார்; அதற்காகத் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்; மன்னிப்புகோருகிறார். பிற மனிதர்களுக்கு எதிராக வன்முறையிலான செயலில் ஈடுபட்டதற்காக ஓர் அரசன் பொதுவெளியில் வருத்தம் தெரிவிப்பது என்பது, ரிச்சர்ட் சாலமன் குறிப்பிடுவதுபோல், இந்தியக் கல்வெட்டு வர்லாற்றில் வேறெங்கும் இல்லாத தனித்துவமான ஒன்றாகிறது. 'சொல்லப்போனால், கடந்த 35 வருடங்களாக ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைப் படித்த பிறகும், போரின் கொடுமைகள் குறித்தும் அமைதியின் நற்பண்புகள் குறித்தும் மென்மையாக வலியுறுத்துவது குறித்தும் இதற்கு ஒப்பான ஒன்றைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை' என்று சாலமன் குறிப்பிடுகிறார்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“எல்லாப் பாஸந்தாக்களையும் சமமாக அணுகுவது, ஐக்கியவாதத்தை ஊக்குவிப்பது என்ற கொள்கைகள் கொண்டு, 'பார்ப்பனியத் தனித்துவவாதம்' என்றழைக்கக்கூடிய ஒன்றை அப்புறப்படுத்தியதுதான் அசோகரது குடிமை மதம் ஏற்படுத்திய முக்கிய விளைவாகிறது. சமூக, அரசியல் படிநிலையில் மேலாக இருந்த பார்ப்பனர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதே அசோகர் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் முக்கிய விளைவு.
அசோகரது சிந்தனைகளை அரசியல் தத்துவமாக விசாரணைசெய்த ராஜீவ் பார்கவா, அசோகர் 'இந்தியாவில் தொல்வடிவ - மதச்சார்பற்ற அரசு (proto-secular state) என்ற கருத்தாக்கத்தை வடிவமைத்த'தாகக் கோருகிறார். மேலும், 'எல்லா மதங்களையும் அசோகர் சகிப்புத்தன்மையோடு அணுகியதன் மூலம், மதரீதியாக நடுநிலையோடு தொடர்புகொண்டிருக்கும் மதச்சார்பின்மைக்கான முன்னோடியாக இருப்ப'தாகவும் கோருகிறார்.”

“முன்னர், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியின் சமையலறையில் தினமும் குழம்புவைக்க லட்சக் கணக்கில் உயிரினங்கள் பலிகொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், தர்மம் குறித்த இவ்வெழுத்துகள் இங்கே பொறிக்கப்படும் இந்தச் சமயத்தில், குழம்புவைக்க மூன்று பிராணிகள் மட்டுமே பலிகொடுக்கப்படுகின்றன: மயில்கள் இரண்டு, வேட்டையாடப்படும் விலங்கு ஒன்று. வேட்டையாடப்படும். விலங்கும் எல்லா சமயங்களிலும் கிடையாது. வருங்காலங்களில் இந்த மூன்று பிராணிகளும்கூட பலிகொடுக்கப்பட மாட்டாது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அவரது சொந்த நிலப்பரப்புக்குள்ளும், இன்னும் குறிப்பாக எல்லையோரப் பகுதிகளிலும் தர்மத்தைப் பரப்புவதற்கான அவரது முயற்சிகளின் பகுதியாக, அயல்நாட்டு உதவி என்று நாம் இன்று அழைக்கும் ஒன்றில் அசோகர் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். அசோகர் விஷயத்தைப் பொறுத்தமட்டில் இது பிரதானமான மருத்துவப் பொருட்களையும் வழிவகைகளையும் அளிப்பதாக இருக்கிறது. பாறை அரசாணை II-இல் இப்படியான மருத்துவச் செயல்திட்டங்கள் குறித்துப் பேசுகிறார்:
'எல்லா இடங்களிலும் — கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியின் நிலப்பரப்புக்குள்ளும் எல்லைகளுக்கு அப்பாலும், அதாவது கோடர்கள் [சோழர்கள்], பாண்டியர்கள், சத்யபுத்ரர்கள், கேரளப்புத்ரர்கள், தம்ரபர்னியர்கள், அந்தியோச்சுஸ் என்றழைக்கப்படும் கிரேக்க அரசன், அந்தியோச்சுஸ் நாட்டுக்கு அருகில் இருக்கும் பிற அரசர்கள் என்று எல்லா இடங்களிலும் கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி இரண்டு வகையான மருத்துவச் சேவைகளை நிறுவியிருக்கிறான்: மனிதர்களான மருத்துவச் சேவை; வீட்டுப் பிராணிகளுக்கான மருத்துவச் சேவை.
எங்கெல்லாம், மனிதர்களுக்கும் வீட்டுப் பிராணிகளுக்கும் பயன்தரக்கூடிய மூலிகைகள் இல்லையோ, அப்படியான எல்லா இடங்களிலும், அவற்றை கொண்டு வந்து நட்டு வளர்த்திருக்கிறான். இதுபோலவே, எங்கெல்லாம் வேர்க் காய்களும், பழ மரங்களும் இல்லையோ அப்படியான எல்லா இடங்களிலும் அவற்றைக் கொண்டுவந்து நட்டு வளர்த்திருக்கிறான்.
மனிதர்களுக்கும் வீட்டுப் பிராணிகளுக்கும் நன்மை செய்யக்கூடிய வகையில் சாலைகள் ஓரமாக மரங்கள் நட்டிருக்கிறான்; கிணறுகள் வெட்டியிருக்கான்.'
நவீனக் காலங்களில் தூதியல் பகுதியாக அயல்நாட்டு உதவி இருப்பதை நாம் நன்கு அறிவோம். கிறிஸ்தவப் பரப்புரையாளர்கள் உலகம் முழுக்க வெறும் கையோடு போகவில்லை. இவர்களும் இரண்டு விதமான சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள்: மருத்துவம் மற்றும் கல்வி. ஆக, அசோகரது தூதியல் பரப்புரைச் செயல்பாடுகள் நன்கு அறியப்பட்ட சட்டத்துக்கு உட்பட்டதாகத்தான் இருக்கிறது. இருப்பினும், நவீனச் செயல்திட்டங்களை நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கொண்டுசெல்வோம் என்றால், அசோகர் முன்னோடியாகிறார்.”

“நான் என்ன சாப்பிடப்போகிறேன்? எங்கே சாப்பிடப்போகிறேன்?' போன்ற சிந்தனைகளில் தன் கவனத்தை ஒரு துறவி இழக்கக் கூடாது என்கிறார் புத்தர். ஒரு துறவி அவரது அகத்தைப் பயிற்றுவிப்பது குறித்துப் பேசும்போது புத்தர் பயன்படுத்தும் ஒரு சொல் நமக்குப் புரிதலைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு துறவி நோய், பசி, குளிர், வெப்பம் போன்றவற்றைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், மேலும் 'கடும்முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என்றும் சொல்கிறார். இங்கே பயன்படுத்தப்படும் சொல்லான 'பரக்கம்மா', அரும்பாடுபடுதல், தொடர்ந்து உழைத்தல், பெருமுயற்சி மேற்கொள்ளுதல், கடுமையாக முயல்தல் போன்ற அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. அசோகரும் சிறு பாறை அரசாணை I-இல் அவரது ஆன்மிகப் பயணம் குறித்துப் பேசும்போது இதே சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்: 'இருந்தாலும், ஒரு வருடத்துக்கு முன்புதான், நான் சங்கத்தை நாடிச்சென்று தீவிரமாக அரும்பாடுபடத் தொடங்கினேன்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“பொ.ஆ.மு. 259 டிசம்பர் வாக்கில்தான், அறிவுரைக்காகவும் வழிகாட்டுதலுக்காவும் சில பௌத்தப் பிக்குகளை அல்லது நன்கு கற்றறிந்த மிக முக்கியமான ஒரு பௌத்தப் பிக்குவை அசோகர் சந்திக்கச்சென்றார். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு ஒரு மனிதராகவும் அரசராகவும் அவரை முழுமையாக உருமாற்றியது. ஒரு வருடத்துக்கு மேலாக அவர் உபாசகராக இருந்திருக்கிறார் என்றாலும், அந்தக் காலத்தில் அவர் பெயரளவுக்கே பௌத்தராக இருந்தார். அசோகர் சந்திக்கச்சென்ற பிக்கு அல்லது பிக்குகள் அவரிடம் என்ன சொன்னார்கள் என்றோ அல்லது அவர்களுடைய வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எப்படியான ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார் என்றோ நமக்குத் தெரியாது. ஆனாலும், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பௌத்தப் பாதையில் தீவிரமாக 'அரும்பாடுபடும்' ஒருவராக மாறியிருப்பதாக அசோகர் நம்மிடம் சொல்கிறார்.
ஒன்றரை வருடங்கள் கழித்து, அதாவது பொ.ஆ.மு. 256 ஜூன் அல்லது அதற்கு அருகில், மிகப் பிரகாசமான சிந்தனை ஒன்று அவருக்குத் தோன்றுகிறது: 'சில மாதங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவம் குறித்து என்னுடைய பிரஜைகளுக்கு நான் ஏன் கடிதம் எழுதக் கூடாது? அவர்களும் இதே பாதையில் பயணிப்பதை நான் ஏன் ஊக்குவிக்கக் கூடாது?' இந்த கடிதத்தைதான் நாம் சிறுபாறை I என்று அழைக்கிறோம். அவரது ராஜ்ஜியம் முழுக்க உள்ள பல்வேறு பாறைகளின் மேல் இந்தச் செய்தியைத் தன்னுடைய பெரும் நிர்வாக அமைப்பை இணைத்துக்கொண்டு பொறித்தது என்பது அவர்களுக்கு விநோதமான முயற்சியாக — டான் கிஹொத்தே காற்றாலைகளைச் சாய்த்ததுபோல் — இருந்திருக்க வேண்டும் என்றாலும், புது வகையான வெற்றியை நோக்கி அவர் படையெடுப்பதாக, அதாவது நிலப்பரப்பு சார்ந்து வெற்றிகொள்வது என்பதாக இல்லாமல் ஆன்மிகரீதியான ஒன்றைத் தொடங்கியிருப்பதாக நினைத்தார். அவரது நிலம் முழுக்க புத்தரது 'சிங்க கர்ஜனை' எதிரொலிக்க வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
அவரது பிரஜைகளுக்காகப் பொறிக்கப்பட்ட முதல் செய்தியைத் தொடர்ந்து, ஒரு வருடம் அல்லது அதுபோல் கடந்த பின், அதாவது பொ.ஆ.மு. 257 ஜூன் மாதத்துக்கும் பொ.ஆ.மு. 256-இன் வசந்த காலத்துக்கும் இடையே — அவர் அரியணை ஏறிய பன்னிரண்டாவது வருடம், அசோகரது அறிவார்த்தரீதியான, மதரீதியான போக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது போக்கில் தீர்மானமான மாற்றம் ஏற்படுகிறது. அசோகர் மேற்கொண்ட பொதுச் செயல்திட்டமானது பௌத்தத்தைப் பிரச்சாரம் செய்வதிலிருந்து, ஒரு பழைய கருத்தை, அதாவது தர்மம் என்ற கருத்துக்கு அவர் தானாகக் கொடுத்த அர்த்தப்பாட்டில் வேர்கொண்டிருந்த தார்மிகத் தத்துவத்தை வெகுமக்களிடையே கொண்டுசெல்லும் பரப்புரையாக மாறுகிறது.
நான் இதைச் 'சுழலச்சாக தர்மம்' என்றழைக்கிறேன். ஆனால், அவர் பௌத்தத்தின் மீதான பற்றுறுதியையோ அதன் மீதான பிடிமானத்தையோ உதறித்தள்ளினார் என்று முன்வைப்பதற்காக நான் இப்படி அழைக்கவில்லை. மாறாக, மக்களுக்குத் தார்மிகத்தைக் கற்பித்தல் என்ற அவரது பொதுக் கொள்கை, பௌத்தத்துக்கு அவர் கொடுத்த முந்தைய அழுத்தத்திலிருந்து — நாம் இதைச் சிறு பாறை அரசாணை I -இல் பார்க்க முடியும் — தீர்மானமாக விலகி, குறுங்குழுவாத வேறுபாடுகளுக்கு அப்பால் தர்மம் ஒரு தார்மிகத் தத்துவமாக மையம் கொண்டிருக்கும் கொள்கையை நோக்கி நகர்கிறார். சுழலச்சான இந்த நகர்வை, பெரும் பாறை அரசாணை வரிசையில் உள்ள அவரது செய்திகளின் தொகுப்பு மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. பெரும் பாறை அரசாணை வரிசை மிகப் பொருத்தமாக 'தர்மலிபி' என்ற வெளிப்பாட்டிலிருந்து தொடங்குகிறது. தர்மம் குறித்த எழுத்துக்கள், பொறிக்கப்பட்டவை ஆகிய இரண்டையும் இச்சொல் ஒரே சமயத்தில் குறிக்கிறது. அவர் பௌத்தர் அல்லாத ஒருவராக ஆகவில்லை என்றாலும்கூட, இப்போதிலிருந்து அவரது எழுத்துக்கள் தர்மத்தின் மீது அக்கறை கொண்டிருந்தனவே தவிர வெளிப்படையாக பௌத்தத்தின் மீதாக இல்லை. இந்தப் பதினான்கு அரசாணை வரிசையில், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பௌத்தம் குறிப்பிடப்படுகிறது.”

“நாம் அறிந்தமட்டும் இந்தியக் கலையின் முதல் புரவலராக' அசோகர் இருக்கிறார் என்று பிரடெரிக் ஆஷர் குறிப்பிடுவதுபோல், அசோகர்தான் கற்களைக் கொண்டு முதன்முதலில் கட்டியெழுப்பியவராக இருக்கிறார். ஆனால் வேறு வழிகளிலும், இந்தியாவில் மட்டுமல்லாமல், அசோகர் தனித்துவமானவராக இருக்கிறார்.
ஓர் ஆட்சியாளராகவும் எழுத்தாளராகவும் அவரது செயல்பாடுகளிலும், ஒரு கட்டுநராக அவரது ஆக்கங்களிலும், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்த பண்டைய அரசர்களில் அசோகர் அபூர்வமான ஒருவராக இருக்கிறார். அவரது செயல்பாடுகளெல்லாம், அதிலும் குறிப்பாக ஓர் எழுத்தாளராக, கட்டுநராக அவரது செயல்பாடுகளில் அவர் தன் பெருமைகளையும் வெற்றிகளையும் தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. நேர்த்தியான தூண்களும் கண்கவரும் அதன் தலைகளும் ஆச்சரியத்தையும் வியப்பையும் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனாலும், அசோகர் இந்தக் கலை அதிசயங்களுக்கு, தான் அளித்த ஆதரவு குறித்து எங்கும் பெருமைகொள்ளவில்லை. மாறாக, தர்மம் குறித்த செய்திகளை அவற்றில் பொறித்துவிட்டு, அப்படியே கடந்துபோகிறார். தான் செய்ய முயன்றிருப்பது குறித்துக் கோரும்போது, பாறை அரசாணை X-இல் அசோகர் இதை அடிக்கோடிட்டுக்காட்டுகிறார்:
'கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, பேரும் புகழும் பெரிய நன்மைகள் எதையும் கொடுக்கும் என்று நினைக்கவில்லை — இவ்விஷயத்தைத் தவிர: கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, எப்படியான பேரும் புகழும் வேண்டினாலும், அது இப்போதும் எக்காலத்துக்கும் மக்கள் தர்மத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், தர்மம் குறித்து நான் போதிப்பதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். இக்காரணத்துக்காகத்தான் கடவுளின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, பேரும் புகழும் வேண்டுகிறான்.”

“அவரது காலத்தில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களின் வட்டத்துக்குள் இருப்பதற்குப் பதிலாக அசோகர் அவற்றைக் கடந்துசென்றார். அவரது முன்னோர்கள் எவருமே செய்திராத ஒன்றை — சொல்லப்போனால், இந்தியாவில் அல்லது ஒருவேளை உலகத்திலேயே அவருக்கு முன்போ பிறகோ எந்த அரசரும் செய்திராத ஒன்றை, அவர் செய்கிறார். தர்மம் என்ற மையமான கருத்தாக்கத்தைக் குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்டு புதிய உலகளாவிய மதத்தை அசோகர் தோற்றுவிக்கிறார். அது மதத்துக்கான குணாம்சங்களையெல்லாம் கொண்டிருந்தது — தார்மிகத் தத்துவத்தின் மீதான கவனம், இறப்புக்குப் பின்னர் ஊழலோடு தொடர்புடைய கொள்கை, அவ்வளவு ஏன் ஆண்டுதோறும் வழிபாட்டுக் காலங்களில் குறிப்பிட்ட புனித நாள்களில் அசோகரது எழுத்துகளைச் சடங்குரீதியாக வாசிப்பது போன்றெல்லாம் கொண்டிருந்தது. இது ஓர் அரசியல் இயக்கத்துக்கான, தத்துவார்த்த இயக்கத்துக்கான குணாம்சத்தையும் கொண்டிருந்தது — இதற்குச் சேவைசெய்யும் விதத்தில் பெருமளவில் அரசு நிர்வாகம் முழுவதும் ஒன்றுதிரட்டப்பட்டது; தர்ம-திட்டத்துக்காக மட்டும் சேவை செய்யும் விதமாகப் புதிதாக தர்ம-மஹாமாத்ரர் என்ற அரசாங்கத் துறையும் உருவாக்கப்பட்டது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“என்னுடைய கணக்கின்படி, அசோகரது எழுத்துக்கள் மொத்தம் 4,614 சொற்களைக் கொண்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் எப்படியிருந்தாலும் தோராயமானவையே. சரியான எண்ணிக்கையை அடைவதில் பல இடர்ப்பாடுகள் இருக்கின்றன. பல கல்வெட்டுகள் சேதமடைந்துள்ளன. அல்லது துண்டுகளாக இருக்கின்றன. சில கல்வெட்டுகள், பாறை அரசாணைகள்போல், ஒவ்வொரு எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றன. மேலும், அசோகரது எழுத்து முறைமை, நவீன முறைமையில் உள்ளதுபோல், வார்த்தைகளுக்கு இடையே இடைவெளிகள் எதையும் கொண்டிருக்கவில்லை : இடைவெளிகளோ நிறுத்தற்குறிகளோ இல்லாமல் சொற்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தப் பக்கம், சொற்களுக்கு இடையில் 'வெள்ளை இடைவெளிகள்' என்று எதுவுமில்லாமல் அச்சாகியிருக்குமானால் இதைப் படிக்கும் வாசகராக நீங்கள் எதிர்கொள்ளும் சிரமத்தைக் கற்பனைசெய்து பாருங்கள். நவீனத் தொகுப்பாசிரயர்களும் மொழிபெயர்பாளர்களும் ஒரு சொல் எங்கே முடிகிறது, அடுத்த சொல் எங்கே தொடங்குகிறது என்று கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில், சொற்களை வேறான வழிகளில் பிரிப்பது வேறான அர்த்தங்களையும் உருவாக்க முடியும். சொற்களின் எண்ணிக்கையும் இதற்கு ஏற்றாற்போல் மாறக்கூடும். இவற்றையெல்லாம் மீறி, நான் கொடுத்திருக்கும் சொற்களின் எண்ணிக்கை பயன்படுத்தக்கூடிய அளவுக்கு நெருக்கதாக இருக்கிறது என்று சொல்ல முடியும்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“பார்ப்பனியச் சிந்தனையில் உள்ளதுபோல் இல்லாமல், அசோகரின் தத்துவத்தில் சாதி, வர்க்கம் அல்லது சமூக வேறுபாடுகள் எல்லாவற்றையும் கடந்து எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒரே தார்மிக விதியைக் கொண்டிருக்கிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“மிகச் சரியாக அசோகர் வென்றெடுத்த அதே கலிங்கப் பகுதியில் இருக்கும் கரவேலாவின் ஹதிகும்பா குகைக் கல்வெட்டுகள், அசோகரது ஐக்கியவாதம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதற்கான சிறு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கல்வெட்டின் காலம் குறித்தும் அர்த்தம் குறித்தும் அவ்வளவு உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. இது பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணக்கிடப்படுகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கல்வெட்டின் இறுதியில் அரசன் 'சவபாஸம்தபூஜகோ', அதாவது 'எல்லாப் பாஸந்தாக்களையும் மதிப்பவன்' என்பதாக விவரிக்கப்படுகிறான். இதில், 'எல்லாப் பாஸந்தாக்களையும்' மதிப்பதாகத் தொடர்ந்து முன்வைத்துவந்த அசோகரது கூற்றின் எதிரொலியை நம்மால் உணர முடிகிறது.
இந்தியாவில் இப்படியான ஐக்கியவாதத்துக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு 1800 வருடங்களுக்குப் பிறகு வெளிப்படுகிறது. முகலாயப் பேரரசரான அக்பர், 'இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் போன்ற மதங்களுக்கு இடையேயான பிளவுகளையெல்லாம் கடந்து, 'தின்-இ-இலாஹி', அதாவது 'கடவுளின் மதம்` என்ற ஐக்கியவாத அடிப்படையிலான மதத்தை முன்னெடுக்கிறார். அறிவொளிமிக்க அரசியலுக்காக அவரே இந்தப் புதிய மதத்துக்கு மாறுகிறார். ஆனால், அசோகர் விஷயத்தில் நடந்ததுபோலவே, அக்பர் மேற்கொண்ட பரிசோதனையும் அவரது மறைவுக்குப் பின் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.”

“பாறை அரசாணைத் தொகுப்பில் முடிவுரையைப் போல் இருக்கும் பாறை அரசாணை XIV-இல், 'என்னுடைய நிலப்பரப்பு மிக விரிந்தது. மேலும், நான் நிறைய எழுதியிருக்கிறேன். எப்படியிருந்தாலும் நான் இன்னும் கூடுதலாக நிறைய எழுதவிருக்கிறேன்' என்கிறார் அசோகர். அவரது நோக்கமாக இருந்ததா இல்லையா என்பதை மீறி, பின்வரும் சந்ததியினருக்கு அவர் விட்டுச்சென்றிருக்கும் பிரதான அடையாளம் ஓர் எழுத்தாளராக, அதுவும் கல்லில் எழுதியவராக இருக்கிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அவரது எழுத்துக்களைப் படிக்கும்போது, எழுத்தாளராக இருப்பதில் அசோகர் பெரும் உவகை கொண்டிருக்க வேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது. எழுதும் நுட்பத்தை அவர் அறிந்திருப்பதாக நினைத்திருக்கலாம்: அவரது எழுத்துக்கள் சில 'வசீகர'மாக இருப்பதாக அவர் சொல்கிறார். பொதுவாகச் சொல்வதென்றால், அவர் நல்ல எழுத்தாளராக இருக்கிறார் என்பதாகவே நினைக்கிறேன்; அவரது எழுத்துக்கள் இலக்கியத் தகுதியற்றவை அல்ல.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“பாறை அரசாணை XIII-இல் உள்ள அவரது நீண்ட, விரிவான அறிக்கை:
கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, அரியணை ஏறிய எட்டு வருடங்களுக்குப் பிறகு கலிங்கத்தை வென்றெடுத்தான். அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1,50,000; கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000; ஏறக்குறைய அதே அளவுக்குப் பலர் மாண்டுபோனார்கள். இதற்கு பிறகு, இப்போது கலிங்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், தர்மம் குறித்து ஆழமாக வாசிப்பது, தர்மத்தின் மீது பற்றுகொள்வது, தர்மம் குறித்து அறிவுரைகள் வழங்குவது இவையே கடவுள்களின் அன்புக்குரியவனை ஆக்கிரமித்திருக்கின்றன.
கலிங்கத்தை வென்றெடுத்த பின் கடவுள்களின் அன்புக்குரியவனின் வருத்தம் இதுதான். வென்றெடுக்கப்படாத நிலத்தை வென்றெடுப்பது என்பது கொல்வதை, மரணத்தை, நாடுகடத்துவதையெல்லாம் வேண்டுகிறது. இவையெல்லாம் கடவுள்களின் அன்புக்குரியவனைக் கடுமையாக வாட்டி வதைக்கிறது, வேதனைக்கு உள்ளாக்குகிறது.”

“அவரது ஓர் அரசாணை, வேறான மத லட்சியம் கொண்டிருப்பவர்களை அல்லது வாழ்க்கை முறைகள் கொண்டிருப்பவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்று பிரஜைகளிடம் கேட்டுக்கொள்கிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அரியணை ஏறி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்ததைப் பொ.ஆ.மு. 256-இன் வசந்த காலத்தில் அசோகர் கொண்டாடுகிறார். இதற்கு அடுத்த வருடம், அதாவது அவர் அரியணை ஏறிய பதிமூன்றாவது வருடம், அவரது வாழ்க்கையிலும் அவரது பேரரசிலும், ஏன் இந்திய வரலாற்றிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய ஆண்டாகிறது. இந்த வருடத்தில்தான், வெளிப்படையாக பெளத்த போதனைகளைச் சுழலச்சாகக் கொண்டிருந்த அசோகர், அதிலிருந்து நகர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைப் — இவற்றை அவர் பாஸந்தா என்றழைத்தார் — பொறுத்தமட்டில் சமயரீதியான அடையாளத்துக்கும் அவற்றுக்கு இடையேயான மோதல்களுக்கும் அப்பால் நடுநிலையாக இருப்பது என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்கிறார். இதுவே தர்மத்தின் தார்மிகத் தத்துவமாகிறது. மிக முக்கியமான பதிமூன்றாம் ஆண்டில், அவரது வழக்கமான உற்சாகத்தோடும் பற்றார்வத்தோடும் அவரது பரந்த நிலப்பரப்புக்குள்ளும் அதற்கு அப்பாலும் தர்மத்தைப் போதிப்பது என்பதற்குள் நுழைகிறார். பாறை அரசாணை IV-இல், ஓர் அரசனுடைய கடமைகள் குறித்துச் சொல்லும்போது இவ்வாறு முன்வைக்கிறார்: 'இதுவே மிக முக்கியக் காரியமாகிறது — தர்மம் குறித்து அறிவுரை வழங்குவது.”