இரா ஏழுமலை > Recent Status Updates

Showing 1-30 of 57
இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 100 of 367 of மஹாஸ்வேதா தேவி கதைகள்
இவ்வளவு காத்திரமான கதையை இதுவரை நான் வாசித்தது இல்லை.
👌👌🫡🫡
Sep 22, 2025 11:20PM Add a comment
மஹாஸ்வேதா தேவி கதைகள்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 90 of 248 of தூர்வை
வாசிக்கலாமா வேண்டாமா? ஒரே குழப்பமா இருக்கு.....
Sep 10, 2025 06:29PM Add a comment
தூர்வை

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 30 of 95 of Shamba (Bengali Edition)
உயிரில் சற்றுக் காற்றோட்டம் ஏற்படத்தான் பிரயாணம் செய்வது..
Aug 31, 2025 02:02AM Add a comment
Shamba (Bengali Edition)

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 80% done with வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம்
போர் என்றதும் நான் வரமாட்டேன் என்று ஓடிய கோழை உத்தரன் வில்லில் நானேற்ற துப்பில்லா கீழ் பிறவி பெரும் வீரன் துரியோதனனை கர்ணனை அம்பால் வீழ்த்தினான் என்பது எல்லாம் கேலி கூத்து. அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மச்சர்களை அதிகாலையில் உறக்கத்திலேயே தாக்கி அழிப்பது என்ன வகையான வீரம் ? என்ன போர் முறை இதற்கு அர்ஜுனன் போன்ற கயவர்கள் தலைமை தாங்குவது கேவலத்திலும் கேவலம். ஜெ தனது காவிய கதாநாயகன் அர்சுனனை புனித படுத்த வீரனான கர்ணனை
May 20, 2025 06:52AM Add a comment
வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 200 of 272 of மகாநதி [Mahanadhi]
அண்ட சராசரத்தில் ஆயிரம் கோடி நட்சத்திரத்தில் ஒரு தூசியே ஆன உலகில், அணுவினும் குறைந்த ஆகிருதியாய் மனிதன் என்ற பெயர் பெற்று இந்த உலகையே வெல்லப் போகிறேன் என்று சவால் விட்டு, ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவதாய் மலைச்சரிவில் மணல் வீடு கட்டி அகங்காரத்தின் மொத்த வடிவாய் ஆணவத்தின் திருவுருவாய் மமதையின் நிலைக்கள்ளாய். வாழும் இந்த வாழ்வு குறித்து கைத்துப்போன சிரிப்பே அவருக்குள் தோன்றும்.
May 03, 2025 08:32AM Add a comment
மகாநதி [Mahanadhi]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 120 of 272 of மகாநதி [Mahanadhi]
மனிதர்கள் மனசைத் திறந்து காட்டித் தம்மை வெளிப்படுத்தி கொள்ளாததால் தான் எல்லா பிரச்சனைகளும். பகிர்ந்து கொள்ள முன் வந்தால் எவ்வளவு சாந்தி.
May 01, 2025 07:16AM Add a comment
மகாநதி [Mahanadhi]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 10% done with வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம்
எது வண்ணத்துப்பூச்சியின் சிறகை அசைக்கிறதோ அதுவே விண்மீனை பறக்க வைக்கிறது என்று ஓர் எண்ணம் இன்று என்னுள் எழுந்தது. அதுவே தொடக்கமென்றாகட்டும்.” வஹ்னர் .
Apr 03, 2025 08:33PM 2 comments
வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 130 of 640 of சிலுவைராஜ் சரித்திரம்
வசித்த வரை ஒன்று புரிகிறது... நாயக்கர் ஆட்சி தமிழகத்திற்கு வந்த பிறகு தான் சாதி தலைவிரித்தாட தொடங்கி இருக்கிறது..
Feb 27, 2025 01:14AM Add a comment
சிலுவைராஜ் சரித்திரம்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 400 of 640 of புதுமைப்பித்தன் கதைகள் [Puthumaippithan Kadhaigal]
நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு!
Jan 23, 2025 08:54AM Add a comment
புதுமைப்பித்தன் கதைகள் [Puthumaippithan Kadhaigal]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 400 of 640 of புதுமைப்பித்தன் கதைகள் [Puthumaippithan Kadhaigal]
சித்தி...

சிலர் திடீரென துறவு கிளம்பி விடுவார்கள் ஆனால் ஒரு காஃபி சாப்பிடலாம் என்றால் அவ்வளவு தான் துறவு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி போட்டு விடுவார்கள்...

புதுமைப்பித்தன் வாழ்க்கை அனுபவங்களை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது.
Jan 22, 2025 07:48PM 3 comments
புதுமைப்பித்தன் கதைகள் [Puthumaippithan Kadhaigal]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 50 of கூகை [Koogai]
பகுத்தறிவு ஏற்காவிட்டாலும் நாட்டார் வாய் மொழி கதையில் ஒரு வெகுளிதனமும் அழகும் இருக்கிறது
Jul 09, 2024 08:40PM Add a comment
கூகை [Koogai]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 350 of 1190 of அன்னா கரீனினா [Anna Karenina]
மனிதர்கள் விசித்திரமானவர்கள் ஏன் ஒரு அன்பின் கையை புறக்கணிக்கிரான்? ஏன் வேறு ஒரு அன்பின் கரம் பற்றுகிறான் காரணமே இல்லை..
Jun 20, 2024 11:02PM Add a comment
அன்னா கரீனினா [Anna Karenina]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 75 of 1190 of அன்னா கரீனினா [Anna Karenina]
மொழிபெயர்ப்புக்கு பயந்து கொண்டே தான் இந நாவல் எடுத்து வந்தேன். வே சந்தானம் மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கிறது..
Jun 05, 2024 07:18AM Add a comment
அன்னா கரீனினா [Anna Karenina]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 55% done with வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்
Boring.... ஒரே கதை வேறு வேறு விதமாக வருவதைப் போல் உள்ளது
Apr 02, 2024 07:57PM 4 comments
வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 300 of 1408 of வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்
கற்பனையை மூன்றாம் விழியெனச் சூடியவன் அழிவற்ற பேரின்பத்தின் அடியில் அமர்ந்த தேவன்.
Mar 17, 2024 04:51AM Add a comment
வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 40% done with அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள் அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.

எஸ் ராமகிருஷ்ணன்.
Feb 27, 2024 06:24PM Add a comment
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 130 of 676 of ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இறுதி நாளில் சிங்களர்களின் தாக்குதலால் ஒன்பது அப்பாவி தமிழர்கள் இறந்து போனார்கள் இதைத் தொடர்ந்து இளைஞர்கள் வன்முறையை நோக்கி தள்ளப்பட்டார்கள்
Jan 29, 2024 08:10AM Add a comment
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 80 of 676 of ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
தோட்டக்காட்டார், கள்ளத்தோணி, வடக்கத்தையர் என்ற பழிப்பு வார்த்தைகளால் ஏனைய சமூகத்தால் அழைக்கப்பட்டு கந்தளுடையும் ஒட்டிய வயிறுடனும் பசியே சொத்தாக வாய்ந்த மலையகத் தமிழர்களிடமிருந்து இறுதியாக பறிக்கப்பட்டது அவர்களது குடியுரிமை தான் ‌. இம்மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களது வரலாறே துயரமானதுதான்.



இலங்கை மலையக மக்கள்... பற்றி
Jan 24, 2024 07:13PM Add a comment
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 60 of 274 of இனி நான் உறங்கட்டும் [Ini Naan Urangattum]
வரிக்கு வரி சமஸ்கிருதம் ,கூட்டெழுத்து வார்த்தை ,அறிந்த கதையை தெரிந்த கதைதானே நிறுத்தி விடலாம் என இருக்கிறேன்...
Jan 18, 2024 07:11PM 1 comment
இனி நான் உறங்கட்டும் [Ini Naan Urangattum]

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 108 of 224 of நீர் வழிப்படூஉம்
108 வந்து பக்கத்தில் தான் கதை சொல்லி எழுத்தாளர் தேவி பாரதி தான் என்று தெரிகிறது.... அதுவும் சிவாஜி கணேசன் மீதும் பாசமலர் திரைப்படம் மீதும் பெரும் பித்தான தனது அம்மா எந்த சிந்தனையும் இல்லாமல் தனக்கு பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கதாபாத்திரம் ஏற்ற பெயரை வைத்ததாக சொல்கிறார்.... அந்த இடம் அற்புதமான இடம்....
Jan 10, 2024 09:04AM Add a comment
நீர் வழிப்படூஉம்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 50% done with கொமோரா [Gomorrah]
வாழ்க்கை எத நோக்கி போகுதுனே தெரியவில்லை... அப்படி தான் போய் கொண்டு இருக்கிறது... நடுவுல நடுவுல கம்போடியா இன படுகொலைக்கு போய்டுது...
Jun 22, 2023 09:55AM Add a comment
கொமோரா [Gomorrah]

« previous 1
Follow இரா 's updates via RSS